Monday, April 16, 2012

எல்லாம் அளவாகவே இருக்கட்டும்.



உண்ணுங்கள் ,பருகுங்கள், குடியுங்கள்  ஆனால்  எல்லாம் அளவாகவே இருக்கட்டும்  எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். மனம் போன போக்கில் உணவு கட்டு பாடு இல்லாமல் கண்டதையும் உண்பது பெரிய பிரச்சனையாக உருவாகிவிடும். அரை வயறு உணவு ,கால் வயறு நீர் மீதி  வெற்றிடம் (காற்று) இதுவே சரியான முறை . தினமும் பழங்கள்,  காய்கறிகள்  சாப்பிடுவது  நல்லது. வயறு நிரம்ப சாப்பிட்டுவிட்டால் அது செரிமானம் ஆகாமல் விரயமாகும் நிலைதான்.
வயதிற்கு தகுந்ததுபோல் உணவு முறையிலும் மாற்றம் இருக்க வேண்டும். வயதானதன் காரணமாக நம் பற்கள் குறைய ஆரம்பிக்கும் ஆனால் நாம் பற்களை கட்டிக்கொண்டு கடினமான உணவுகளை உண்டு அவதிக்கு உள்ளாகி மருத்துவரை   நாடுகின்றோம் .        எடுத்ததற்கு எல்லாம் ஊசி மருந்துகளை போடும் போது மருந்தே வேலை செய்வதில்லை.  நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது.
இயற்கையே நமக்கு நம் உடலின்  மாற்றங்களை தெரிவிக்க அதனை அலட்சியப்படுத்துகின்றோம்.   இறைவன் நம் உடலில் எத்தனை பாதுகாப்பு தந்துள்ளான் அதனை நாம் கண்டு கொள்வதில்லை . கண்களில் இருக்கும் நீர் நம் கண்களை பாதுகாக்கின்றது ,வாயில் உள்ள உமிழ் நீர் நமக்கு நமது உணவினை செரிக்க வைக்கிறது . அது நன்றாக மென்று மெதுவாக உண்ணும்பொழுதுதான் நமக்கு தேவையான உமிழ்நீர் கிடைக்கும். எதிலும் அவசரம் . உண்பதில் கூடவா அவசரம் !  உணவு கிடைக்காமல் இருக்கும் மக்களை நினைவு கொள்ளுங்கள் .இறைவன் நமக்கு தந்த அருளை ரசித்து அருந்துங்கள் .

No comments: