ஆடை வாழ்வின் ஒரு பகுதி. தன்னைத்தானே சுத்தமான அழகிய ஆடைகளால் அழகு படுத்திக் கொள்வது மனித இயல்பு அதிலும் பெண்களுக்கு இதில் தனி ஆர்வம் உண்டு. ஆண்கள் உடைக்காக செலவு செய்யும் பணம் குறைவுதான். பெண்கள் உடுத்தும் ஆடை விலை உயர்வாகவே இருந்தாலும் அவர்களுக்கு அதிகப்படியான உடையும் தேவைப்படுகின்றது.
ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது.
"தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக அரை குறை ஆடை அணிந்து பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். எவ்வளவோ ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, 'இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் பிரிந்தது'' என்றார்கள். (நூல்: புகாரி)
சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!”
'ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.'' (அல் குர்ஆன் 7:26)
ருமேனியாவில் உலகின் மிக நீளமான திருமண ஆடையை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.
முன்னைய 2 488 மீட்டர் நீளம் கொண்ட ஆடையின் சாதனையை முறியடித்து 2 750 மீட்டர் நீளம் கொண்ட ஆடையாக தைத்து சாதனை படைத்துள்ளனர்.
ருமேனியா Bucharest எனும் இடத்தில் இவ் ஆடையை அணிந்த மாடல் அழகி வெப்ப காற்று பலூனில் பறக்கவிடப்பட்டார். மொத்தம் 100 நாட்களில் 1,857 ஊசிகள் பயன்படுத்தப்பட்டு தைத்து முடித்திருக்கிறது Andree Salon எனும் நிறுவனம்.


Source
உலகின் மிக நீளமான திருமண ஆடை - கின்னஸ் சாதனை - படங்கள்
Source
ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். 'இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது' என்பதனை சிலர் வாதாடுவது பார்க்க வீடியோ காட்சி.
No comments:
Post a Comment