Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Wednesday, October 21, 2015

முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்


-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை நாம் சந்திக்கின்றோம். அது போலவே பெற்றோரும் முதுமையிலும் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் பிள்ளைகள் அறிந்து அன்புடன் நடாத்த வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

Friday, August 8, 2014

முதுமை தீபத்தின் கால்களில்


முதுமையின்
ஓய்வுப் படுக்கையை...
குழந்தையாகவே ஆகிப்போகும்
இயற்கை மாற்றத்தை...
மரணப்படுக்கையாக
மாற்றிக் கண்டு
பதறுகிறது
பாசம்

அது
பாசத்தின் இயல்புதான்
பிழையில்லை என்றாலும்...

Tuesday, December 24, 2013

முதுமையின் சிறப்பு

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள்.
அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.

முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும்.

ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும். வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.]

Monday, May 7, 2012

எதிலும் முழுமை இல்லை.

முழுமையாக நம்பி முற்றிலும் ஏமாற்றமோ!
முழுமையாக நேசம் கொண்டு பாசம் போனதோ!
முழுமையாக கிடைக்க எத்தனித்து இருந்ததும் போனதோ! 
முழுமை கிடைக்க முதுமை வந்துவிடுமோ!

நம்பிக்கை வைத்து நடை போடு அவசரப்பட்டு தடுக்கி விழுந்து விடாதே!
அன்பு செலுத்து அதை மற்றவரிடமிருந்து எதிர் பார்க்காதே! 
நம்பிக்கை கொள் நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தோடு! 
வேண்டியது கிடைக்கவில்லையெனில் அதுதான் நியதி!

எதிலும் முழுமை இல்லை.
முழுமையாக கிடைத்தால் உன்னை நீ மறப்பாய்.
முதுமை கிடைத்தாலும்
முழுமை கிடைக்காது

இறப்பில்தான் முழுமை உண்டு அது பிறப்பிலும் இல்லை.
இறைவனின் ஆற்றலை நம்பு உண்மை விளங்கும்.
இயன்றதைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு
இறைவனை நேசி இன்பம் காண்பாய்.

Monday, April 16, 2012

மனைவியின் அருமை அறிய முதுமை தேவை,


முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள் ,கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ ,முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே …இப்படி பல எண்ணங்கள்   எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே  இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள்  லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .
எனது குளிர்ந்த கை  மீது மற்றவரின் உள்ளங்கை  வைக்கப்படுவதனை உணர்கின்றேன் அது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு .
அந்த நிலை நீடிக்க விரும்பினேன் , என் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது ,எனது கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை எனது கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது.
(ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கேலன் நீரில் ஊட்றினால்  அதன் கிருமிகளை அழித்துவிடும் உயர்ந்த தன்மை கொண்டது .கண்ணீர் நம் கண்களை பாதுகாக்கின்றது .)
காலமெல்லாம்  உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது   அதிகமாகவே   உணர்கின்றேன்.
“நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்” என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
காலமெல்லாம் நான்  அவளுக்கு கொடுத்த ஆறுதல் ….!
அவளின் தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை… மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து  என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .

Thursday, February 2, 2012

காதல் சிறகினிலே



இருபதில் தொடங்கிய
இதிகாசக்காதல்
அருபது முடிந்தும்
அறுவடையற்று
நிறைந்த  கோபங்கள்
நிகழந்த சண்டைகள்
உதிர்ந்து உதிர்த்து
வெற்றுச்செதில்களாய்
விழுதுகளில் விளையாடி
தொடங்கிய காதல்
வேர்களில் நிறைந்தது
நிம்மதியாய்
வெளுத்த மீசைக்கு
கருமை அடிக்க
பெண்மையின் கண்களில்
என்றும் வெளுக்காத
காதல் கண் மை
காதல் தொடங்கிய
கண்கள் சுருங்கலாம்
வாய்கள் மொழிந்த
வார்த்தை மறக்கலாம்
காமம் சுகந்த
தேகம் இளைக்கலாம்
தேடிடும் கைகளுள்
பற்றிடும் உயிரென
தளர்ந்த கைகள்
இருக்கிப்பிடிக்கையில்
குழைந்த கதல்
இறுதியாய்..
இனிமையாய்..
என்றும் இளமையாய்..
Source : http://uumm.wordpress.com/

உமா

உமா. கோவை வாசி. கவிதைகள் ஒவ்வொரு அசைவையும் தாமே தேர்ந்தெடுக்க முடிகிற அழகிய வண்ணக் கனவு. அந்தக் கனவுகள் தருகிற புத்துணர்வே  ஒவ்வொரு சுவாசத்தையும் இயல்பாக்குகிறது. உமாவின் கனவுகளின் ஆல்பத்தை பகிர்ந்து கொள்ள நட்போடு வரவேற்கிறேன்...உமாவும் கவிதையும்

இயற்கையின் அடிமை

இதயங்களின் சிநேகிதி....



எதையும்..எவரையும்..
அவரவர்..குறை ..நிறைகளுடன்..
நேசிக்க விரும்புவபர்....


கவிதைகளோ...கதைகளோ...
வாழ்கையை..மனித உணர்வுகளை...
ரசித்து...ருசித்து...பார்க்கும்


அன்பால் மட்டுமே..அனைத்தையும்
சாதிக்கத்துடிக்கும்...

...உமா

Saturday, June 11, 2011

முதுமையும் ! இளமையும் !

முதுமை மறதிக்கு இடம் கொடுக்கும் . தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.
இளமை நினைவாற்றலை நிலை நிறுத்த முயலும் . தனக்கு இடையூறாக இருப்பவரை நினைவுபடுத்தி ஓரம் கட்டும்
முதுமை சிதைவடையும் மனமாக மாற வாய்புண்டு .  சிதையும் மனதிற்கு இடம் தராது (காதல் வந்து மறுக்கப்பட்டால்! வெல்லும் அல்லது விழும் )
முதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது . இளமை  மனவியின் மீது வைக்கும் அன்பு ஆசையினால் வந்தது.
முதுமை உண்மையின் உறைவிடம் . இளமை பண்மையின் பிறப்பிடம்.
முதுமை ஓரிடத்தில் ஒன்றி நிற்கும் . இளமை பேரிடம் நாடி ஓடும்
முதுமை இறையருள் நாடி நிற்கும் .  இளமை பறை சாற்றும் புகழ் நாடும்
முதுமை வாழ்ந்த வாழ்வினை அசைபோடும் .இளமை நினைத்தது நடக்க நடை போடும்

பழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு . இளமை அவசரத்தின் கோலம். கண்டதை விழுங்கும் வேட்கை . துடிப்பின் வேகம் தடுமாற்றத்தின் காட்சி .
முதுமை சரித்திம் பேசும். இளமை விஞ்ஜானம் சொல்லும் .
முதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும். இளமை புதுமையினை நாடி பல வழிகளில் செயல்பட முயலும்.முதுமையில் நிதானம் வந்தடையும் . இளமையில் வேகம் மேலோங்கும்.
முதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் . இளமையின் வேகம் வேதனையிலும் முடிய வாய்ப்புண்டு.
முதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல. இளமையில் வரும் சோதனை எதையும் தாங்கும் இதயம் கொண்டது.
தவிர்க்கமுடியாத மாற்றம் முதுமை. முதுமைக்கு இளமையில்லை. இளமைக்கும் முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை
இளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.
இப்பொழுதே  முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுகள்,இறையருள் பெற்றிடுங்கள் ,  இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்

“முதுமை வந்து கூன் விழுமோ   
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ

புதுமை உலகம் கேலி செய்யுமொ

என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
சென்று விடத்தான் நினைப்பு”
நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன்  எழுதிய  கவிதை.