Tuesday, June 22, 2010

தமிழ் வட்டார மொழி வழக்குகள்- (தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தைகள்)

மிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தைகள்


தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும்
வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில்
பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே
தலைகீழாய் கூட இருக்கும்.
வாப்பா,அத்தா,வாவா,அம்பா - தந்தை, வாப்பா - கடற்கரை பகுதிகளான கீழக்கரை,
அதிராம்பட்டினம், தொண்டி, இராமநாதபுரம், காரைக்கால், நாகூர்,பழனி போன்ற
ஊர்களில் விளிக்கிறார்கள். இமாம் ஷாஃபி மத்ஹப் (School of thoughts)

பின்பற்றுபவர்களாய் இருப்பார்கள். அதேபோல், தந்தையை அழைக்க *அத்தா*
(அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
. அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். 
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.  
"த்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம் 
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்-அன்புடன் புகாரி)

 என்கிற வார்த்தையை இமாம் ஹனபி மத்ஹப் (School of thoughts)

பின்பற்றுபவர்கள் உபயோகப்படுத்த பார்க்கலாம். வாவா என்று திருநெல்வேலி
மாவட்டம்

தென்காசியில் அழைக்கிறார்கள்.
உம்மா - அம்மா
உம்மம்மா, பெரியம்மா, அம்மம்மா- அம்மாவுடைய அம்மா, பெரியம்மா என்று
அதிராம்பட்டிணத்தில் அழைக்கிறார்கள்
ராத்தம்மா,லாத்தம்மா(?),பெத்தம்
மா(கோயம்பத்தூர்,திண்டுக்கல்,ஈரோடு
மாவட்டங்கள்)- அம்மாவின் பெரிய சகோதரி, பெரியம்மா என்று சில ஊர்களில்
அழைக்கிறார்கள்(quote place)
சாச்சி(அதிராம்பட்டிணம்)காலாமா(கோயம்பத்தூர்,திண்டுக்கல்,ஈரோடு
மாவட்டங்கள்) - அம்மாவின் தங்கை, சித்தப்பாவின் மனைவி.
ராத்தா, லாத்தா - அக்கா, அதிராம்பட்டிணம், நாகூர் போன்ற ஊர்களில் ராத்தா
என்றும் காரைக்கால்,உடன்குடி, பொறையாறு(?) போன்ற ஊர்களில் லாத்தா என்றும்
அழைக்கிறார்கள்.
காக்கா, நானா (இலங்கைத் தமிழ்: நாணா) - அண்ணன், உடன்குடி, நாகூர்,
கீழக்கரை, காயல்பட்டிணம், மற்றும் அதிராம்பட்டினம் காக்காவும்
பட்டுக்கோட்டை அண்ணன்களும், நானா என்று காரைக்கால்,?? போன்ற ஊர்களில்
அழைக்கிறார்கள்.
சாச்சா, சச்சா,சின்னத்தா - தந்தையின் சிறிய சகோதரர். சித்தப்பா,
அம்மாவின் தங்கையின் கணவர்
பெரியவாப்பா, பெரியப்பா,பெருத்தா,பெரியத்தா - தந்தையின் பெரிய சகோதரர்,
அம்மாவின் அக்கா கணவர்.
வாப்பி(பு)ச்சா, வாப்புமா, அத்தம்மா - தந்தையின் தாய்(அதிராம்பட்டிணம், உடன்குடி)
அப்பா - தாத்தா, அம்மாவின் தந்தை, அப்பாவின் தந்தை (அதிராம்பட்டிணம்,)
இருவரையுமே இப்படித்தான் அழைக்கிறார்கள்.
ராதா,ராதத்தா, அத்தத்தா, கண்ணுவாப்பா- தந்தையின் தந்தை (தென்காசி),பழனி
ராதி,ராதிமா - தந்தையின் தாய் (தென்காசி),பழனி
நானா நன்னத்தா- அம்மாவின் அப்பா (தென்காசி),பழனி, அண்ணன்(காரைக்கால்)
நானி(நி?), நன்னீமா - அம்மாவின் அம்மா(தென்காசி),பழனி
பெரிய வாவா - தந்தையின் மூத்த சகோதரர்
சிறிய வாவா - தந்தையின் சிறிய சகோதரர்.
மம்மானீ--மாமாவின் மனைவி (பழனி)
மாமி(அதிராம்பட்டிணம்), குப்பி(தென்காசி), புப்பு - தந்தையின் சகோதரி
காளா - அம்மாவின் சகோதரி (தென்காசி)
மச்சி(அதிராம்பட்டிணம்), மண்ணி(பள்ளப்பட்டி) - அண்ணனின் மனைவி
குடியானவன் -- இந்து மக்கள் (பழனி)
நாசுவன்(அதிராம்பட்டிணம்) - நாவிதர், சிகை அலங்காரம் செய்பவர்

(தொடரும்)

1 comment:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தஞ்சை மாவட்டத்தில்,
குறிப்பாக,

பாபநாசம், கபிஸ்தலம், பண்டாரவாடை, ராஜகிரி, வழுத்தூர், அய்யம்பேட்டை, மாங்குடி, போன்ற ஊர்களில் வாழும் முஸ்லிம்களில் நூறு சதம்...

(B)பாப்பு -father

சின்ன/பெரிய பாப்பு -father's brothers

சின்ன/பெரிய சிச்சாணி father's brother's wives

சின்ன/பெரிய (p)புப்பு-father's sister

சின்ன/பெரிய மாமு -father's sister's husbands


(B)புவ்வா -mother

சின்ன/பெரிய ஹாலா -mother's sisters

சின்ன/பெரிய சிச்சா -mother's sisters' husbands

(dh)தாதா -father's father

(dh)தாதி -father's mother

அத்தா-mother's father

நன்னி-mother's mother


...இப்படித்தான்.... அழைத்துக்கொள்கிறார்கள்.

Others as usual:
மாமா, மாமி, அண்ணன், அக்கா, தங்கச்சி, தம்பி, மச்சான், மச்சி, மச்சினன், மச்சினி, கொழுந்தன், கொழுந்தி, சகலை, ஒப்டியா... etc.,