தேவையானவைகள்
பாஸ்மதி அரிசி 4 கப்
ஃபிரஸ் கோழி 2
குங்குமப்பூ தேவையான அளவு
பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை. கிராம்பு.
முந்திரி திராட்சை
காயவைத்த எழும்பிச்சை[இங்கு ரெடிமேடாக கிடைக்கும்]
உப்பு
நெய் கொஞ்சம்
முதலில் ஒருகோழியை நான்கு பீஸாக்கி நன்றாக சுத்தம் செய்து,அதை ஒரு பத்திரத்தில் [சிறிது வேண்டுமெனில்ஆயில்விட்டு]. பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை.காய்ந்த எழும்பிச்சை போட்டு அதில் தேவையான தண்ணீர் விட்டு அதில் கோழியும் உப்பும்போட்டு வேகவைக்கவும்.
வேகும்போது அசடுபோல் மேல்வரும் அதை ஒரு கரண்டியால் எடுத்துவிடவும். [அது வேஸ்ட் கொழுப்பு]
கோழி வெந்தததும் அதைஎடுத்து குங்குமப்பூ போட்டு இதேபோல் வைத்துக்கொள்ளவும்ஒரு அகன்ற பாத்திரத்தில் சிறுநெய்விட்டு சூடானதும் அதில் கோழிவேகவைத்த தண்ணீர் இருக்குமல்லவா அதை அரிசி கணக்கின்படி அளந்து ஊற்றவும்
அந்த தண்ணீரில் கழுவிய அரிசியை போடவும். அதில் சிறு குங்குமப்பூவோ அல்லது கலரோ சேர்க்கலாம்.
அடுப்பை சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.
சிறுதுநேரம் கழித்து திறந்து சோறு உடைந்துவிடாதவாறு கிளறிவிட்டு.
அதன்மேல் கோழிகளை அலங்கரிக்கவும்.
அதன்மேல் முந்திரி திராட்சை வறுத்துக்கொட்டவும்.
இப்போது கமகமக்கும் கப்ஸா ரெடி. இது எவ்வித மசாலாக்களும் இல்லாத மிகுந்த சுவைதரக்கூடிய ஒரு அரபிசாப்பாட்டு. சாப்பிட சாப்பிட வாசமும் மணமும் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.[இந்த சாப்பாட்டின் ருசியே கோழிவேகவைத்த தண்ணீரில் செய்வதுதான்]
இதற்கு சைடிஸ். தக்காளி. பச்சைமிளகாய். பொதினா. உப்புசேர்த்து கொரகொரப்பாக அரைத்து சட்னி செய்துக்கொள்ளவும்
கூடவே எழும்பிச்சை வெள்ளரி கேரட். முள்ளங்கி இலை.
வெள்ளை வெங்காயம் இவைகளை பச்சை சாலட் செய்து
கடித்துக்கொள்ளவும் [அச்சோ நாக்கையல்ல பச்சை சாலடை]
இதை நாங்க சவுதி சென்றிருந்தபோது [உம்ரா செய்ய] அங்கே சாப்பிட்டோம். ஏனோ தெரியவில்லை ப்ரியமென்றால் ப்ரியம் அப்படியொரு ப்ரியம் இச்சாப்பாட்டின்மேல். அதேபோல் மச்சானும் அடிக்கடி செய்து தருவார்கள்.[நாங்க செய்யும் முறை இப்படிதான்]
இது ஜெய்லானி அண்ணாவுக்காக சென்ற வெள்ளியன்று செய்யச்சொல்லி. இரு குடும்பங்கள் சாப்பிட்டோம். அண்ணாத்தே உங்க புண்ணியத்தில் ஒரே வாரத்தில் இருமுறை இச்சாப்பட்டு கிடைத்தமைக்கு மிக்க நன்றிங்கண்ணா!
இது ரைஸ்குக்கரில் எனக்குமட்டும் செய்தது அதுவும் புழுங்கல் அரிசியில் எப்புடி
இதுக்கு சைடிஸ்
வெரும் வெள்ளரியும் தயிரும் மல்லியும் உப்பும்
காராமணி மிச்சரும் மிக்ஸிங் கூட வே பேரிச்சமழமும்
எப்படி...
இப்படி அடிக்கடி ஏதாவது புது டிஸ்ஸா கேளுங்க அந்த சாக்கில் நாம் வெளுத்து வாங்கிருவோம்...
அன்புடன் மலிக்கா
Source : http://kalaisaral.blogspot.comஅரபிசாப்பாடு, ருசியோ ருசி. அசைவம்.
No comments:
Post a Comment