Friday, June 11, 2010

ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்தவருக்கு 4 மாத சிறை, 90 கசையடிகள்

  
ரியாத் : ஷாப்பிங் மாலில் பெண்ணுக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்தவருக்கு சவூதி நீதிமன்றம் 4 மாத சிறை தண்டனையும் 90 கசையடிகளும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
சவூதி காவல்துறை ஒரு ஆணும் இரண்டு பெண்களும் ஷாப்பிங் மாலில் பிறர் முன் முத்தம் கொடுத்தல் போன்ற முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதை அங்குள்ள பாதுகாப்பு கேமிரா மூலம் கண்டு கைது செய்ததாக அல்-யோம் செய்திதாள் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பின் சமீப காலமாக திருமணம் புரிவது மிகவும் கடினமாகி விட்டதால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை போலல்லாமல் சவூதியில் ஆண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும். தற்போது குறைந்தது திருமணம் செய்ய 50,000 டாலர்கள் மற்றும் தங்கத்தையும் ஆண்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

 http://www.inneram.comSource : ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்தவருக்கு 4 மாத சிறை, 90 கசையடிகள்

No comments: