Sunday, June 20, 2010

அன்புள்ள அம்மா,

பாப்பாவின் கடிதம்
பதிவு செய்தவர் : Buthaina

அன்புள்ள அம்மா,
நீ பத்து மாதம் சுமந்து என்னை பெற்றெடுத்தாய். அதோடு உன் கடமை
முடியவில்லை எனக்கு உன் அன்பு வேண்டும். என்றென்றும் வேண்டும்
நான் நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக வளர வேண்டும். அதனால்
எனக்கு சர்க்கரை தண்ணீர் ஏன் கொடுத்தாய், எனக்கு சக்கரை தண்ணீர்
வேண்டாம். உன்னிடம் சுரக்கும் :சீம்பாலையே'' கொடுத்து விடு.

அம்மா! சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்தால் எனக்கு எப்போதும்
நோய் தடுக்கும் சக்தி உடலில் உண்டாகும். ஆனால் எனக்கு நீ சீம்பால்
கொடுக்காமல் சர்க்கரைத் தண்ணீர் கொடுத்தால் நான் நோய் நொடியில்
அவதிப்பட்டு நோஞ்சான், சவலியாகத்தான் இருப்பேன். உன்னால் முடிந்த வரைதாய்ப் பால் கொடும்மா

உன்னுடைய அழகு குறைந்து விடும் என்று நினைக்காதே.நான் முக்கியமா? அல்லது
உன் அழகு முக்கியமா? உன் வாரிசு அழகு அல்ல, நான் தான் அம்மா என்பதை மறந்து
விடாதே. புட்டிப்பால் கொடுத்தால் உன்னிடமிருந்து என்னை பிரித்து விடுவதாக
ஆகி விடும். நம் குழந்தைக்கு பால் பற்றாது என்று நினைக்காதே. நீ உனக்காக
மட்டும் தான் என்று நினைத்து சாப்பிடாதே.எனக்காக என்று நினைத்து சாப்பிடும்மா
இதுவே போதும் பால் நன்றாக சுரக்குமம்மா. மூன்று மாதம் வரை அந்த பாலே
போதுமம்மா.நான்காம் மாதம் முதல் இணை உணவு கொடுத்திட ஆரம்பியுங்களம்மா.
''நோயை எதிர்ப்பது சீம்பாலே சக்திகள் நிறைந்தது தாய்ப்பாலே:

தாய்ப் பால் கொடும்மா

தோழி,
புதைனா.
 
No comments: