Monday, June 7, 2010

ஜித்தா தமிழ் மன்றம்' நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி

சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் வருகிற ஜூன் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை  ஆறு மணிக்கு ஜித்தா ட்ரையோ ரான்ஞ்ச் கிளப் வளாகத்தில் கலக்கல் காமெடி நிகழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிகழ்ச்சியில் சன் டி.வி. "அசத்தப்போவது யாரு" புகழ் 'மதுரை' முத்து, 'கோவை' குணா மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் தா. ராஜ்குமார் இயக்கத்தில் இணைந்து வழங்கும் கலக்கல் காமெடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது சமயம் சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.

வருகிற  ஜூன் 10 மற்றும் 11-ஆம் தேதி சிறுவர், சிறுமியர்களுக்கான "பல்முனைப்போட்டி"- யின் இறுதி சுற்று நடக்க இருக்கிறது, இதில்  வெற்றி பெறுபவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது சான்றிதழ் வழங்கப்படுவதுடன், கேடயங்களும் ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய, இலங்கை, மற்றும் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக தொழில் அதிபர்கள் மற்றும் ஏராளமான பிரமுகர்கள்  கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்ச்சிப் பற்றி மேலும் விபரம் தெரிந்துக்கொள்வதர்க்கு jtmandram@gmail.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற ஈமெயில் முகவரியையோ அல்லது 0542564530 / 0565871266 என்ற செல்பேசி எண்களையோ தொடர்புக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ஜ. ஜெய்சங்கர் மற்ற செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தயார் செய்து வருகிறார் என்பது குறுப்பிடத்தக்கது.

தகவல்: மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார்

No comments: