படித்து விடுடா – இல்லை என்றால்
வாழ்க்கை உன்னை படுத்தி விடும்!
என் தலை முறையினருக்கு எப்போதுமே
ஒரு நினைப்பு – பாஸ்போர்ட் கிடைத்துவிடும்
18 இல் – படிப்பு எதற்கு பிறகு!!!
சூழ்ச்சி காரர்களும் சூழ்ந்து கொண்டு
திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் – பாய்
பசங்களுக்கு படிப்பு எதற்கு? – ஆசிரியர் வடிவில் …
பரிட்ச்சை எனக்கு
பரிட்ச்சையம் ஆனது – வினாத்தாளை பார்க்கும் போது
விமானத்தின் நினைப்புதான் எனக்கு!
பரிட்ச்சை முடிவும் வந்தது ,
பாஸாகி விடுவேன் என்று நினைத்தார்கள் எல்லோரும் – பின்
அழுது நனைத்தார்கள் அவர்கள் கண்ணை …
என் தந்தை அழுது பார்த்தேன், முதன் முதலாய்!
என்னையே நான் தேற்றிக் கொண்டேன் நான் பயணம் போவதில்
எத்துனை கடுப்பு இவர்க்கு!!!
இறங்கிய நாளே இடி விழுந்தது எனக்கு!
புரிந்து விட்டது எனக்கு -
காரணம் கிடைத்து விட்டது!
தந்தையின் கண்ணிர் எதோ சொல்லதுடித்தது அன்று!!
அத்தனை அதட்டல்களையும்
அலச்சியம் செய்தேனே!
கனிவே கிடையாது என்று
கற்பனையும் செய்தேனே!
உங்கள் எலும்புகளையும்
தோள்களையும் உருக்கிய பட்டறையா இந்த
பாலைவனம்!!
நாங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவா
இத்தனை நாள்
தனியே அழுது உள்ளீர்கள்?
கனபொழுதில் கனமாகி போனது என் இதயம் !
கண்களில் கசியும் இந்த கண்ணிருடன்
மீண்டும் ஒரு முறை சொல்லிபார்தேன்
அத்தா என்று அடிமனதில் !!!!
1 comment:
Realistic and meaningful poem. Thanks for sharing..
Post a Comment