
கடந்த வியாழக்கிழமை மாலை இருவருக்குமிடையில் நான்கு சக்கர வாகனம் தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும் அதில் சினமடைந்த அவரின் மாமா, கைத்துப்பாக்கியால் ஷேக் ஃபைஸலைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசரைச் சுட்டுக்கொன்ற அவரின் மாமாவைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஷேக் ஃபைஸல், குவைத்தின் 12 ஆவது அமீரான ஷேக் ஸபா அல் ஸலாம் அல் ஸபாவின் இளைய மகனாவார்.
No comments:
Post a Comment