Thursday, June 10, 2010

புகை பகை


புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட். இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
இதனால் அவர்கள் விரைவில் மூளை பாதிப்பை அடைகிறார்கள். ஆய்வில் புகைப்பழக்கம் உடையவர்கள் 7 புள்ளிகள் ஐ.கிï. திறனை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் அவர்கள் சரியான முடிவெடுப்பதில் தவறுகிறார்கள். மேலும் போதைப்பழக்கத்துக்கு
ஆளாவது,ஆரோக்கியமற்றஉணவுகளை உண்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை சிகரெட்டு பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் நஞ்சு, போதைப் பொருளாகச் செயல்பட்டு மூளையை அடிமைப்படுத்துகிறது. சிகரெட்டு புகையை உள்ளிழுத்தவுடன் நுரையீரலில் நிரம்பும் புகையானது, ஏழு விநாடிக்குள் மூளையைத் தாக்குகிறது. இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் புகைப்போர் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சிகரெட்டு அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர்
இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
காற்றில்விடப்பட்டது புகை  கலங்கியது மனம்

No comments: