என்னவள் ஒரு கடல்
அவளிடம் தொட்டதெல்லாம்
கடல் கடல் கடல்
அவள் உள்ளம் ஒரு கடல்
உருகும் வார்த்தை ஒரு கடல்
அவள் எண்ணம் ஒரு கடல்
பொங்கும் உணர்வுகளோ
பேரலை ஆர்ப்பரிக்கும் பெருங்கடல்
இருந்தாலும்
என்னைக் கண்டதும்
அவளின் கீழுதடு தாண்டி
தந்தப் பற்கள் தாண்டி
நாவின் அடியில் ஊறுமே ஒரு கடல்
அந்தக் கடல் பற்றிப் பேசுவோமா
அது ஓர் சர்க்கரை வெள்ளம்
என் ஏழாயிரம் பிறப்புக்கும்
இப்பொழுதே வாரிவழங்கும்
தித்திப்பு மகா சமுத்திரம்
நன்றி: http://anbudanbuhari.blo Label: காதலிக்கிறேன்
--------------------------------
No comments:
Post a Comment