தேவையானவை
சிக்கன் ½ கிலோ
பல்லாரி 2
தக்காளி 2
பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,
சீரகம் சோம்புப்பொடி 2
ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை கொஞ்சம்
தேங்காய் கால் கப்
முந்திரி 15
இடியப்பமாவு 2ஸ்பூன்
ஆயில், உப்பு.
சிக்கனை நன்றாக சுத்தம்செய்துகொண்டு, மீடியமான அளவில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்
ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை, ஏலம், கிராம்பு, போட்டு வாசனை வந்ததும்
நீளவாக்கில் நறுக்கிய பல்லாரி தக்காளி, மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி[கீரை] போட்டு நன்றாக வதக்கவும்
மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டு மூடி [அடுப்பை சிம்மில் வைத்து விடவும்]
மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு
சிக்கன் நன்றாக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதையும் இடியப்பாமவையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்துக்கொண்டு அதனுடன் சேர்த்துகிளரவும்
[அடுப்பை சிம்மில் வைத்தபடியே அத்தைனையும் செய்யவும்]
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.
இப்போது சூடான சுவையான சிக்கன் ஸ்பெஷல் ரெடி
இது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்
ரசம் சாதத்துக்கும், புரோட்டா, சப்பாத்தி, நாண்,
இவைகளுக்கு ஏற்ற ரெஸிபி.
நன்றி :http://niroodai.blogspot.com/
No comments:
Post a Comment