கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளதாக கனடாச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்தில் இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ராதிகா சிற்சபேசன் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார். கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சி அந்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியெனவும் சொல்லப்படுகிறது. கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும், இந்த வேட்பாளர் தெரிவின் போது உடனிருந்நதாகவும், ராதிகா தெரிவு செய்யப்ட்டது குறித்து தமது ஆதரவு உரைகளையும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கி கரும் கட்சிகளில் புதிய ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி http://ww1.4tamilmedia.com
No comments:
Post a Comment