ஹாருன் யஹ்யா
தொழுகை என்பது ஒருவரை முஸ்லிமாக அடையாளப்படுத்த கூடியதாக இருப்பதால் அது முக்கியத்துவமடைகிறது. இருப்பினும் இறையச்சம் இல்லாத தொழுகையை நிராகரிப்பதாக குர்ஆன் கூறுகிறது.
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (ஸ_ரத்துல் மாஊன் : 4-6)
மேற்கூறப்பட்ட வசனத்தின் அடிப்படையில் குனிவது அல்லது சாஸ்டாங்கத்தில் விழுவது போன்ற செயல்களால் முறையான தொழுகையை நிறைவேற்றியதாக கருத முடியாது. மாறாக அதற்கு குறிக்கோளும் சிந்தனையும் ஒன்று சேர வேண்டும். மற்றவர்களிடம் தங்களை முஸ்லிம்களாக காட்டுவதற்காக சிலர் தொழுகிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று கொள்வதற்கு பதிலாக அவர்கள் பெரும் வரம்பு மீறுதலை செய்கிறார்கள்.
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்¢ (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (ஸ_ரத்துல் பகரா : 238)
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (ஸ_ரத்துல் முஃமினூன் : 2)
இந்த வசனத்திலுள்ள உள்ளச்சத்தோடு என்பதன் பொருள் பயத்துடனும் உள தூய்மையுடனும் கண்ணியம் கலந்து இருத்தல் வேண்டும். அத்தகைய தொழுகை ஒருவரது நம்பிக்கையை அதிகரிக்க செய்வதோடு அல்லாஹ்விடத்தில் நெருக்கம் ஏற்பட வாய்பளிக்கிறது. மனிதனது உறுதியை கூட்டுகிறது.
மற்றொரு வசனத்தில் தொழுகையை பற்றி விவரிக்கிறது.
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக¢ இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக¢ நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் தியானம் மிகவும் பெரிதாகும்¢ அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (ஸ_ரத்துல் அன்கபூத் : 45)
Source : http://www.harunyahya.com
No comments:
Post a Comment