Wednesday, December 9, 2009

நபிமொழிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... 

நபிமொழி :

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''(புகாரி,முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)

(அபூயஹ்யா என்ற)ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மூஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு மூஃமினை தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''(முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 27)

அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''''ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான்'''' என்று நபி(ஸல்) கூறினார்கள் (புகாரி).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39)

அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், ''இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்'''' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 40)

நபிமொழி :

அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 14)

அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'' பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால், அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது, அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 15)

 
அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை'' என்று அல்லாஹ்; கூறுவதாக'' நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 32)

அபூஸயீத்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''(புகாரி, முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)

''''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''''. நூல்: புகாரி,முஸ்லிம்)
நபிமொழி : 

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்டார். ''கோபம் கொள்ளாதே என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே'' என்றே நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 48)

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:

''ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.'''' என நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ).
 ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 49)
இப்னு மஸ்ஊத்(ரலி)அறிவிக்கின்றார்கள்:

''''எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்'''' என நபி(ஸல்) கூறினார்கள். ''''இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?'' என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'''' என்று நபி(ஸல்) கூறினார்கள்.'''' (புகாரி,முஸ்லிம்).
 ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 51)

''''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''''. நூல்: புகாரி,முஸ்லிம்)

'''' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''''


Posted By :Sikkandar Badusha
From:
mohamed salim
THOWFEEQ

No comments: