Saturday, December 12, 2009

எனக்கு வழிகாட்டி

By உ.த.ப.க.தலைவர் அ. இரபியுதீன்

உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் முனைவர் அ. இரபியுதீன் உலக முழுக்கச் சுற்றுகிறார்.  தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொண்டு புரிகிறார்.  அவர் சொல்லுகிறார்.
    “சயீது அண்ணன் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் என்னை அழைப்பார்.  அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கலந்து, பொதுத் தொண்டு என்றால் என்ன என்பதை நான் கற்றுக்கொண்டேன்.  மக்கள் தொண்டு செய்ய அவர்தான் எனக்கு வழிகாட்டி.
    அவர் எந்த மேடையிலும் என்னை ஏற்றி விடுவார்.  ‘தைரியமாகப் பேசு’ என்பார்.  அப்படிப் பேசிப்பேசி, இன்று மேடைப் பேச்சாளராக ஆகி விட்டேன்.  என்னைப் பேச்சாளர் ஆக்கியதும் சயீது அண்ணன்தான்.
    நான் எப்போது ஊருக்குப் போனாலும் சயீது அண்ணனை சந்திப்பேன் என்ன நிகழ்ச்சி நடத்தினாலும் அவரை அழைப்பேன்.  சென்ற ஆண்டு பேங்காக்கில் நடந்த ‘இசைமுரசு நாகூர் அனிபா’ நூல் பரமக்குடியில் நடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழக மாநாட்டில் அமைச்சர் மைதீன்கான் நீடூர் சயிதுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.  அருகில் முனைவர் அ. இரபியுதீன், சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி நிற்கிறார்கள்.
வெளியீட்டு விழாவுக்குக் கூட அவரை அழைத்திருந்தேன்.
    அவருடன் பழகியதால் அப்துல் சமது, நாகூர் அனிபா, வகாப், சுலைமான சேட், மூப்பனார், ஆரூண், அப்துல் லத்தீப், காதர் முகைதீன் போன்ற அரசியல் தலைவர்களின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.  மார்க்க அறிஞர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், சம்சுல்ஹ{தா ஹஜரத், சுபைர் மாமா போன்ற பெரியவர்களி;ன் நட்பும் கிடைத்தது.
    நீடூரில் எல்லோரையும் பட்டதாரிகள் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசை.  அதற்காக நீடூரில் ஒரு கல்லூரி வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.  அந்த முயற்சியில் நான் இறங்கினேன்.  நீடூரில் நான் கட்ட இருக்கும் கல்லூரிக்குக் கால்கோல் விழாவுக்கும் அவரை அழைத்திருந்தேன்.  வந்து, ‘துவா’ செய்தார்.  கல்லூரித் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் போய் விட்டாரே என்று மிகவும் வருந்துகிறேன்.
    நீடூர் தனது தலைமகனை இழந்து விட்டது” என்றார், முனைவர் இரபியுதீன்.




No comments: