Thursday, December 10, 2009

2017 ஆண்டில் அரபு நாடுகளை ஒருங்கிணைக்கும் ரெயில் பாதை

வளைகுடா ஒருங்கிணைப்புக்குழுவின் உச்சி மாநாடு குவைத்தில் வரும் டிசம்பர்  14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அரபு நாடுகளை இணைக்கும் ரெயில் திட்டம் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த திட்டம் ரூ.3 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப் பட உள்ளது.
இந்த ரெயில் பாதை   சவூதி அரேபியா, குவைத், பகரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அரபு நாடுகளை இணைக்கிறது.

இதுதவிர, வளைகுடா நாடுகளுக்கென தனி நாணயம் பயன்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஒரே நாணயத்துக்கு பகரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ள நிலையில்  ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளையும் ஒரே நாணயம் திட்டத்தில் சேர்க்க உள்ளதாகத் தெரிகிறது.
Source : http://www.inneram.com/

No comments: