குறைகளோடும் நீதிகேட்டும்
தன்னைக்
காண வருவோருக்கு
எளிதில்
காட்சி தருபவனும்
வந்தவர் எவராயினும்
அவரிடம்
கடுஞ் சொல் கூறாதவனும்
ஆளுகின்ற நாட்டை
சிறந்த நாடென்று
உலகமே போற்றும்
காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 386
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
Label: புதுக்கவிக்குறள் - பொருள்
--------------------------------------------------------------------------------------
கொடும்புருவம் கோடா - காமத்துப்பால் - குறள் 1086
இவளின்
வளைந்த
புருவங்கள் மட்டும்
வளையாமல்
நேராய்
இருந்திருந்தால்
என்னை
நடுங்க வைக்கும்
துயரத்தை
இவள் விழிகள்
செய்யாதிருக்குமே
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்
3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1086
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
Label: புதுக்கவிக்குறள் - காமம்
நன்றி : http://anbudanbuhari.blogspot.com/
-----------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment