Thursday, December 31, 2009

மனதைத் தொட்ட வரிகள்!!!

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

 நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை மீறி வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

No comments: