Wednesday, December 16, 2009

இரத்ததானம் செய்வோம்.

இரத்ததானம் செய்வோம்.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் ஐம்பது கிலோ எடையைவிட கூடுதலாக இருந்தால், அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.

இயல்பாகவே வயதுவந்தவர்களுக்கு சுமாராக ஐந்து முதல் ஆறு லிட்டர் வரையில் அவர்கள் உடம்பில் இரத்தம் இருக்கும். இதில் 300 ml மட்டுமே தானத்தின் போது பெறப்படும்.

நீங்கள் தானம் செய்யும் இரத்தம்,
24 முதல் 48 மணி நேரத்திற்குள் தானாகவே உங்கள் உடம்பில் ஊறிவிடும்.

இதற்காக ஓய்வோ, உணவுக்கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
இவர்கள் இரத்ததானம் கொடுக்கும்முன் 48 மணி நேரத்திற்கு எந்த மருந்தும் எடுக்காமல் இருந்தால் போதும்.

இரத்ததானம் கொடுப்பவர்களுக்கு மூன்று வருடதிற்கு முன்புவரை மஞ்சள்காமாலை நோய் தாக்காதவர்களாக இருக்கவேண்டும்.

இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்களுக்கு, இரத்தக்கொதிப்பு, அனீமியா போன்ற பாதிப்புகள் இருக்கின்றதா, இரத்ததானம் கொடுப்பதற்குன்டான உடல்வலிமை உண்டா போன்ற சோதனைகள் மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும்.


முறையான இரத்ததானம் செய்பவர்களுக்கு, AIDS அல்லது மற்ற கொடிய நோய்கள் பரவுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஆகையால் பயமின்றி இரத்ததானம் செய்வோம். 
  நன்றிhttp://syednavas.blogspot.com/

1 comment:

S.A. நவாஸுதீன் said...

மின்னஞ்சல் கிடைத்தது. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.