தாயகத்தில் இருந்து வருகை புரிந்த இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதாயத்துல்லா முஹர்ரம் மாதம் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஊரிலும் பைத்துல்மால் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் ஜக்காத் ஒவ்வொரு ஊரிலும் முறைப்படி வாங்கி அதனை விநியோகிக்கப்பட வேண்டியது குறித்தும் விவரித்தார். மேலும் ரமலான் மாதத்தில் அமைப்புகள் என்ற பெயரில் ஜக்காத் மற்றும் பித்ராக்களை வசூல் செய்பவர்களிடம் கொடுக்காமல் அந்தந்த ஊரிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என்றார். குவைத் பள்ளி இமாம் மவ்லவி எம்.ஏ.காஜா முஹம்மது ஜமாலி மக்கீ மன்பயீ அவர்கள் முஹர்ரம் மாத சிந்தனைகளை நினைவு கூர்ந்தார். ஹிஜ்ரத்தின் படிப்பினைகளை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல் : முதுவை ஹிதாயத்
நன்றி :http://adhikaalai.com/i
No comments:
Post a Comment