Sunday, December 6, 2009

இறையில்லம்



இடித்து தள்ளப்பட்டது இறையில்லம்
   அதற்கு தீர்வே தெரியவில்லையே
இன்றுவரையும்

மனிதம் மீறிப்பட்டது சிலமனிதமிருகங்களால்
  அதற்கு முடிவே தெரியவில்லையே
இன்றுவரையும்

வந்திடுமே நல்தீர்பென்று வருடங்கள்
   பதினேழையும்கடந்தும் வந்திடவில்லையே
இன்றுவரையும்

பிறர்மதத்தை இழிவாய் நினைத்து
  தன்மதத்தை உயர்த்தும் மனிதன்
மனிதனில் சிறந்தவனா?

மனிதமனங்களை கொன்றுசிதைத்து
  அதில் மகிழ்வுகாணும் மனிதன்
மனிதனில் புனிதவனா?

மனிதா மனிதா கேள்கேள்
  மனசாட்சியிருந்தால்
அதைகேள்

நீ செய்தது சரியா பிழையா
  இது மாபெரும்
பாவமில்லையா?

மனிதனாய் பிறந்துவிட்டு
  மனசாட்சியைகொன்றது
முறையா?

எப்போது கிடைத்திடும் நியாயம்
அதற்காக வேண்டுகிறோம் நாளும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய் 



நன்றி உங்களுக்கு :  http://niroodai.blogspot.com/



1 comment:

அன்புடன் மலிக்கா said...

மிகுந்த மகிழ்ச்சி, என் படைப்பை இங்கு வெளியிட்டமைக்கு..