Showing posts with label முதுமையை வெல்ல. Show all posts
Showing posts with label முதுமையை வெல்ல. Show all posts

Monday, February 3, 2014

உங்களை "பேஸ் புக்கில் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதற்கான முக்கிய நோக்கம் என்ன?

உங்களை முகநூல் என்ற "பேஸ் புக்கில் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதற்கான முக்கிய நோக்கம் என்ன?
- குலாம் ரசூல், தர்மபுரி

பதில் :Dr. ஹிமானா சையத்

சுருக்கமாகச் சொன்னால், கற்றுக்கொள்ள! குறிப்பாக நான் அதிகமாக வெளிநாடுகளில் வசிப்பதால் நம் நாட்டுச் செய்திகள் பல விடுபட்டுப் போகின்றன. அவற்றை பன்னோக்குப் பார்வையுடன் முகநூல் நண்பர்கள் பதிவேற்றுகிறார்கள். இளைஞர்களின் எண்ண எழுச்சிகளிலிருந்தும் அவர்களது அணுகுமுறைகளிலிருந்தும் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. விடுபட்டுப்போன பழைய நண்பர்களுடன் உரையாடுவதில் ஒரு வகையான சிலிர்ப்பு. என் பதிவுகளை -படங்களைப் பார்க்காமல் அவசரமாக ஹிமானா என்ற பெண் பெயரைப் பார்த்ததும் 'சாட்டிங்' செய்ய விரும்பி வந்து, புரிந்ததும் நட்பைக் கட் பண்ணிடிட்டு விலகியோடும் விடலைகளுடன் பழகும் போது நாமும் நமது இளமைக் காலத்தை அசைபோட முடிகிறது. பல இளைஞர்கள் நம்மை விடவும் புத்திசாலிகளாக இருப்பதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுகிறது. நிறையவே அழைப்புச் செய்திகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல நாடுகளிலிருந்து வரும் நண்பர்களுக்கு சாட்டிங் மூலம் கவுன்ஸிலிங் செய்ய முடிகிறது. முதுமையை வெல்ல இதுவும் ஓர் அழகிய - அரிய ஆயுதம்.அதே நேரத்தில் அதன் கூர்மையில் நாம் வெட்டுப்படாமல் கவனமாகவும் இருக்க வேண்டும்.

 DR.Himana Syed