சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு

ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது.
நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில் டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும் கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது.
வெறுமனே காலத்தை கழிக்க இணையத்தில் உலவுவது முட்டாள்தனம்.
அடுத்த தலைமுறைக்கு தேவையான சில செயல்பாடுகளை நாம் செய்தே ஆகவேண்டும்.
நான் செய்வேன்.
விழியமாக முற்றோதல் செய்வது என்னும் கோட்பாடு மிக முக்கியமானதாகும்
நரம்பியல் ஆய்வாளர் என்னும் நிலையல் இந்தக் கூற்றை கூறுகிறேன்
பெங்களுருவில் இருந்து இயங்கும் ஐயா திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் கம்ப ராமாயணம் முற்றோதல் செய்வது சிறப்பான தமிழ்த் தொண்டு
காலத்தால் அழியாத பனி
காலம் செல்ல செல்ல அவரது பெயர் இணையத்தில் ஆழமாக பதியும்.
அவருக்கும் அவரது குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
நல்ல செயல்பாடுகளை மனமார பாராட்ட வேண்டும்
பாராட்டினால் யாரும் தவறாக நினைப்பார்களோ என்று நினைக்கக் கூடாது
மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள்
அறிவியலுக்கு மதம் கிடையாது
செம்மலுக்கு அறிவியல்தான் மதம்
திருஅருட்பா முற்றோதல்
திருமூலர் திருமந்திரம் முற்றோதல்
சீறாப்புராணம் முற்றோதல்
இந்த மூன்று பெரும் பணிகளை நண்பர்களின் உதவியுடன் துவங்கியுள்ளேன்
அடுத்த இருபது வருடங்களில் நிச்சயமாக செய்து முடிப்பேன்
சீறாப்புராணம் முற்றோதல்
இனிதே துவங்குகிறது ……….
Source :http://tamilarchives.org
from: Kalam Kader kalamkader2@gmail.com
1 comment:
திரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... தகவலை உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...
Post a Comment