Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Tuesday, June 23, 2015

நோன்பு-ஒரு ஆய்வுப்பார்வை


-Rafeeq Friend புதுசுரபி

அண்மையில் ஒரு இணையதளம் வழியாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறிவிடுவீர்கள், நான் உத்தரவாதம். நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது நாளில் நடந்த அதிசயம்” என்றும். இதை அவர் மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றி வெற்றி பெற்றதாயும் மேற்கோளிட்டார்.

”ஒரே நாளில் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறேன் என்று சிலர் மாறிவிட்டு பிறகு சிலநாட்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர். அதேவேளையில் மாற்றத்தினை சிறிது சிறிதாக தொடந்து 30 நாட்கள் முயற்சித்தால் 31ம் நாள் அந்த முயற்சி, அது தவிர்க்க வேண்டிய ஒரு கெட்ட பழக்கமோ அல்லது புதிதாய் பழகிக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல பழக்கமோ அதில் வெற்றி கண்டிருப்பீர்கள்” என்றும் 30 நாள் இரகசியத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

Monday, July 7, 2014

நோன்பின் மாண்பு...



களைப்பில் நா கவிழ்ந்தாலும்
குவளை நீருக்கு மனம்
விரும்பவில்லை;

உண்டுக்களிக்க; மென்று ரசிக்க
உணவுகள் இருந்தாலும் மனமது
உந்தவில்லை;

Monday, June 30, 2014

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும்.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

நோன்பில் பெற்ற நல்ல வழிகள் - ரமலான் நல் வாழ்த்துகள்

வெய்யிற் காலம் வந்து போகும்
வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்
மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்
வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்

உதயம் தொடங்கி அந்தி வரைக்கும்
உணவும் நீரும் வேண்டா(து) ஒதுக்கல்
இதயம் கொள்ளும் இறைமை நினைவை
இருந்தும் நாவில் ஏனோ பொய்கள்?

நோன்பில் வந்த ஞான வேதம்
நன்றாய் ஓத நன்மை கற்போம்
நோன்பில் மட்டும் ஓதி விட்டு
மூடி வைத்தல் யாரின் குற்றம்?

Tuesday, February 11, 2014

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்..

பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
வான் மழை கடல் அலையை கண்டிறையை புகழ்ந்திட்டார்(2)
இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

Friday, August 3, 2012

சொன்னான் செய்தேன் .. நோன்பும் உண்ணாவிரதமும்


"அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே" - ஔவ்வயார்

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம்.  பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று  நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு  ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

எதற்கு எடுத்தாலும் போராட்டம். அதிலும் பலவகை போராட்டங்கள்.
கையூட்டு , இலஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க போராடுகின்றோம்  என்று  சிலர் திரண்டு அதற்காக நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . முதலில் உண்ணாவிரதம் அது வேறு விதமாக மாறுவதனை பார்க்கின்றோம். சாத்வீகம் போய், சமாதானமும் முடியாமல் இருதியில்  அது எங்கு போய் நிற்குமோ! அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருவர் குடியை ஒழிப்பேன் என்கிறார் மற்றவர் அதை வியாபாரமாக்கி விட முயல்கின்றனர் . அப்பப்பா ஒரே குழப்பம்!

Wednesday, July 18, 2012

நோன்பு வரும் பின்னே - பிறைக்குழப்பம் வரும் முன்னே!

கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு என்ன? எல்லாரும் பழையபடி மகிழ்ச்சியாக, ஒற்றுமையாகப் பெருநாள் கொண்டாடக்கூடிய நாள் எப்போது வரும்?


பதில்: நம் சகோதரர் என்ன கேட்கிறார் எனில், நோன்பு மாதத்தில் பிறை தொடர்பாக ஒரே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஓர் ஊரில் பல பெருநாட்கள்; ஒரு குடும்பத்தில் பல பெருநாட்கள். மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை. இந்தப் பிரச்னை தீர என்ன வழி என்று கேட்கிறார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்தான்.

'நோன்பு வரும் பின்னே பிறைக் குழப்பம் வரும் முன்னே' என்று சொல்கிற அளவுக்கு இன்று சமுதாயத்தில் இதை ஒரு பிரச்னையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினார்கள், மூன் சைட்டிங்கா, மூன் ஃபைட்டிங்கா - பிறையைப் பார்ப்பதா, பிறைக்காகச் சண்டை போடுவதா எனும் ஒரு நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.

Saturday, July 14, 2012

நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

 நாங்கள்தான் குழம்பிவிட்டோம்
நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.

கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.

சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!