Monday, February 10, 2014

வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ  தொழுவாய்

மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா

மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா

மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.

மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை

பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை

புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.

பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பேசுகிறாய்.

அல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் தாஹா நபி எங்கே

அஞ்சாத வீரம் கொண்ட ஆண்மை அலியார் எங்கே

எல்லோரும் போற்றுகின்ற அன்னை ஃபாதிமா எங்கே

இணையில்லா தியாகிகளாம் இமாம் ஹஸன் ஹூஸைன் எங்கே

இந்த நிலை அறிந்திடாமல் எத்தனை நாள் நீ இருப்பாய்;

நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்

நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்

அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்

அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்

ஆந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்

நன்மை தீமை செயல்கள் மீஜானில் நிறுக்கப்படும்

நன்மை தட்டு கனத்து விட்டால் நல்ல சுவர்க்கம் கிடைத்து விடும்

தின்மை எடை கூடி விட்டால் தீய நரகம் வீழ்ந்திடுவாய்

தீங்கான இந்த நிலை தோன்றிடாமல் தவிர்த்திடுவாய்

திருமறை நபி வழியில் தினமும் சென்று வாழ்ந்திடுவாய்.

No comments: