நடுவுல நான் குடிக்கிற கஞ்சியும் !
கொதிச்சி நொதிச்சிருச்சி !
புளிச்சதன்னிய குடிச்சி !
பச்சதன்னியில பயிறுநட்டேன்!
நட்டபயிறு வளந்தாச்சும்,
மிச்ச வயிர நெறப்புமா ?
---------------------

இடைப்பட்ட சதைக்காகவா !
"உழைக்கின்றேன்" இல்லை !
ஒட்டிக்கிடக்கும் வயிற்றில் !
வற்றிப்போன குடலுக்காக !
கடவுளிடம் கூட "பாதையாத்திரை "
வேண்டுதலில்லை !வேண்டாமலே !
நிதமும் யாத்திரையாக நடந்தே !
கடந்த தூரமும் அளக்கவில்லை !
தான் கடந்த தூரத்தை கண்டு !
ஆடுகளும் களைத்திடுமோ என்று !
இன்னும் அளக்காமலே ..................,
Sathiyananthan Subramaniyan Banumathi
No comments:
Post a Comment