Wednesday, November 30, 2011

கணினி பயன்படுத்துபவர்களுக்கு உதவிக்குறிப்புகள்.

 கணினி பயன்படுத்தும்போதும் மற்றும்   மடிக்கணினி சாதனங்களை பயன்படுத்தும் போதும் அடிப்படை பாதுகாப்பு குறிப்புகள் நாம் தெரிந்திருக்க வேண்டும்.  நாம்  விழிப்புணர்வுன் இருந்தால் மணிக்கட்டு, கழுத்து வலி மற்றும் பல கோளாறுகள்  வராமல் தடுக்க முடியும்.  கணினியில் செல்வழிக்க சில குறிப்பிட்ட கால அளவும் தேவை. அளவுக்கதிகமாக அதனை  பயன்படுத்தும்போது உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.



நேர்மறை எண்ணங்கள் நிலையான வெற்றிக்கு அடித்தளம்

 நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது வாழ்வில் மகிழ்வினை உண்டாக்கும். எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் வாழ்வே சுவையற்றதாகி பயனற்றதாகிவிடும். எண்ணமே வாழ்வு. யார் எதை நாடி செல்கின்றார்களோ அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் . வளர்கலை பெரிது வாழ்நாள் சிறுது. வாழும் காலத்தினை மகிழ்வாக ஆக்கிக் கொள்ள நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்  சிறப்பாக அமைய படங்கள் நல்ல கருத்துகளைத் தரும்,  
 

Tuesday, November 29, 2011

உலக 500 மிகவும் செல்வாக்குள்ள முஸ்லிம்கள்.

 
"2009,2010,2011 செல்வாக்கு மிகுந்த முஸ்லீம்"
பட்டியல் வரிசை PDF பதிவிறக்கம் செய்து  பாருங்கள்.


Muslim500-2011.pdfView Download/
 m500_2009.pdfView Download
 2010-low.pdfView Download

 2010-hi.pdfView Download

The list is available here as a PDF download


Monday, November 28, 2011

கேள்விக்கு என்ன பதில்!

 மூன்று வயது குழந்தை கேட்ட  கேள்வி மகிழ்வாய் இருந்தது ஆனால் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் இருந்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. கேள்வி  கேட்க குழந்தைகளுக்கு சரியான அதன் அறிவுக்கு ஏற்றதுபோல் பதில் சொல்வது குழந்தைகளின் அறிவை வளர்க்கும். குழ்ந்தை அதிகமாக கேள்வி கேட்பது அதன் தாய் அல்லது அதன் தந்தையிடமாகவே இருக்கும்.அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்க நாம் முயல்கின்றோம்.  ஆனால் அது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லையென்றால்  பேச்சினை மாற்ற முயல்கின்றோம் . பாச்சி, பாச்சி (பால்) என்று  பசியுடன் பால் கேட்கும் குழந்தையை தாய்ப்  பால் இல்லாத தாய் தன் பால் கொடுக்கும் காம்பினை பூச்சி  பூச்சி என்று சொல்லி குழந்தைக்கு   பயத்தினை உண்டாக்குவதனைப்  பாரதிதாசன் எழுதி படித்திருக்கிறோம்.  சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மறைமுகமாவது அதன் அறிவுக்கு ஏற்றது போல் சொல்லக் கூடிய அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.

 கேள்வி கேட்பது என்பது சின்ன வயது முதல்  அனைவருக்கும் இருக்கும் பழக்கமான ஒன்றுதான். சில கேள்விகள் சிரிப்பை வரவழைக்கும் சில கேள்விகள் அறிவை வரவழைக்கும்.பெண் கல்வி அவசியாமாவது அவசியம் தங்கள் குழந்தைகளை நல்ல அறிவோடு வளர்க்க பயன்படும். வேலைக்கு போகத்தான் கல்வி தேவை என்பது கிடையாது. ஒரு பெண் திருமணமாகு முன் கல்லூரிக்கு சென்று பயில வாய்பு அதிகம். அதனை எதற்கு நழுவ விட்டு அடை காத்த கோழி போல் வீட்டில் அடைந்திருக்க வேண்டும்.

  குழ்ந்தை இப்படி கேள்வி  கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்!

 ஒரு குழந்தை பணம் வைத்து விளையாடுகிறாள். நமக்கு குழந்தை அந்த பணத்தினை விழுங்கி விடுமோ! என்ற பயம் அல்லது அழுக்கான பணக் காசுகள்  குழந்தை உடல் நலத்தினை பாதிக்கும் என்ற நோக்கத்தில் அம்மா காசெல்லாம் நீ  தொடக் கூடாது  என்று சொல்ல   அக் குழந்தை நீ மட்டும் நிறைய காசு வைத்திருக்கிறாயே!" என்றால் உங்கள் பதில்
என்ன?

  ஒரு திருமணத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்கிறோம்,அப்பொழுது "அம்மா உன் கல்யாணம் எப்பொழுது  நடக்கும்" அல்லது   ' உன் கல்யாணத்திற்கு நான் எங்கிருந்தேன்'  என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் !

  தாய் அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்த நிறைமாத தாயாக இருக்க வயிறு பெரிதாக காட்சி அளிக்க முதல் மூன்று வயது குழந்தை கேட்கிறது ' ' ' 'ஏம்மா உன் வயிறு இவ்வளவு பெரிசா இருக்கு"
இவ்விதம் பல கேள்விகள். இதற்கெல்லாம் நாம் முறையாக குழந்தை கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் அயராது தொய்வில்லாமல்
பதில் சொல்லி அதன் அறிவை வளர்க வேண்டும்.

Sunday, November 27, 2011

படித்ததில் ரசித்தது. ஆழமாய் மனதில் பதிந்த வரிகள்!


எரிவதில் தீபம்...............................அழகு
.

மறைவதில் சூரியன்.......................அழகு.

சுற்றுவதில் புவி.............................அழகு.

வளர்வதில் பிறை..........................அழகு.

மின்னுவதில் விண்மீன்..................அழகு.

தவழ்வதில் குழந்தை......................அழகு.

நடப்பதில் நதி............................... அழகு.

விழுவதில் அருவி........................ அழகு.

உறைவதில் பனி.......................... அழகு.

விளைவதில் நெற்கதிர்..................அழகு.

குளிர்ச்சியில் தென்றல்................. அழகு.

உழைப்பதில் வியர்வை................. அழகு.

பாடுவதில் குயில்......................... அழகு.

பறப்பதில் பருந்து..........................அழகு.

காதலில் புரிதல்........................... அழகு.

உறவினில் நட்பு...........................அழகு.


மொழிகளில் எனது மொழி "தமிழ்"..அழகு.

இத்தனைக்கும்

இதற்கு மேலேயும்

எப்போதும் என் "தாய்" எனக்கு......."அழகு".


{படித்ததில் ரசித்தது. சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்துள்ளேன்.}

Mansur Ali
Abu Hurairah, may Allah be pleased with him, reported: A person came to Allah's Messenger (may peace be upon him) and said: Who among the people is most deserving my companionship (of a kind treatment from me?) He said: Your mother. He, again, said: Then who (is the next one)? He said: It is your mother (who deserves the best treatment from you). He said: Then who (is the next one)? He (the Holy Prophet) said: It is your mother. He (again) said: Then who? Thereupon he (The Prophet (peace be upon him)) said: It is your father.

பெண்கள் ஏன் அழுகின்றனர் ? ஒரு அதிரடி சர்வே

பெண்கள் ஏன் அழுகின்றனர் என்று உலகில்ஒரு பிரபலமான நிறுவனம் நடத்திய சர்வேயில் கிடைக்கபெற்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . ஏன் என கேட்கின்றீர்களா அந்த முடிவுகளை நீங்களே பாருங்கள் .






ஒருவர் அழுகின்றார் என்றால் அதற்கு ஏதோ ஒரு துக்க காரணம் இருக்கும் அல்லது சந்தோஷ மிகுதியால் ஆனந்த கண்ணீராக கூட இருக்கலாம் ஆனால் இந்த பெண்கள் அழுகின்றமைக்கு காரணம் இதுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது .


************** இந்த சர்வேயை நடத்திய பிரபல நிறுவனம் வேறு எதுவுமில்ல எனது முக புத்தக பக்கத்தில் மேற்கொண்ட சர்வே முடிவே இது .


பிளாகர் நண்பர்களுக்காக இந்த சர்வேயினை எனது தலத்தில் வலது பக்கத்தில் Please click hereவைத்துள்ளேன். உங்கள் வாக்குகளை இட்டு பெண்கள் ஏன் அழுகின்றார்கள் என எனது சந்தேகத்தினை தீர்த்துவைக்கவும் .


Source : http://qaruppan.blogspot.com








துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.

இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/

Thursday, November 24, 2011

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும் ?




சமையலில் கெட்டிக்காரர் யார் ஆணா! பெண்ணா!
இம்மாதிரி ஆராய்ச்சி வேண்டாம். பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க  காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.
மனைவி சமைக்கும் உணவு சமயத்தில்   நன்றாக இல்லையென்றாலும் அதனை சொல்லக் கூடாது. பெண்கள்  புதுமையான சமைக்க கற்றுக் கொள்ள முயற்சித்தாலும் அதற்கு நாம்தான் ருசி பார்த்து சொல்லவேண்டும். அவர்கள் சமைத்த உணவு அவர்களுக்கு அருமை . ஆனால் எப்படி இருந்தாலும் 'அருமையாக இருக்கிறது' என்றுதான் சொல்ல வேண்டும். 'நன்றாக இல்லை' என்று
சொன்னால் அடுத்த சமையல் ஆராய்ச்சி நடக்காது. நாம் வாங்கிக் கொடுத்த சமைக்கும் கலை புத்தகம் ஒதுக்கப்பட்டுவிடும் மற்றும் அது சம்பந்தமாக எந்த தொலைகாட்சி நிகழ்ச்சியையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வந்த சமையல் கலை அணைத்தும்  அவர்கள் அம்மா வீட்டில் கற்று வந்தது.நாம் உண்டு பழகியது நம் அம்மா கொடுத்த பாச உணவு. அதனால் அது எப்படி இருந்தாலும் நமக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
அவர்களுக்கு சமையல்
கலை பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். முருங்கக்காய் போட்டு சாம்பார் செய்வார்கள் கறி குழம்புக்கு  முறுங்கக்காய் போடச் சொன்னால் இது என்ன புதுமை நன்றாக இருக்காது ஏன்று சொல்லி விடுவார்கள். ஆண்களுக்கு எல்லாவற்றிலும் புதுமை தேவை. அதில் உணவும் விதிவிலக்கல்ல.

கோயம்பேடு சந்தை கூவம் நதியுடன் இணைந்தால்.....

 மழை வந்தால் சென்னை மக்கள் படும் துன்பத்துக்கு அளவே இல்லை.  மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்க  கோயம்பேடு சந்தை குப்பைமேடாகின்றது.   மழை வந்தால் சென்னை  காய் கறி வியாபாரிகளுக்கு ஒரு யோசனை!வியாபாரம் தடை பெறாமல் இருக்க பாங்காக் நகர ஆற்றில் வியாபாரம் செய்வதுபோல் நாமும்  வழி  செய்யலாம். கூவம் நதியும் சுத்தப்படுத்தப்பட்டு வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படலாம்
.கோயம்பேடு  சந்தை கூவம் நதியுடன் இணைந்தால் மிதக்கும் காய்கறி சந்தை வந்து கோயம்பேடு  சந்தை கூவம் நதியுடன் இணைந்து சிங்கார சென்னையாகலாம் . மக்களும் பல இடங்களில் தான் வேண்டியவைகளை வாங்க ஓரிடத்தில் கூடாமல் பல இடங்களில் தேவையானவைகளை வாங்க வழி உண்டாகும்.கடை வாடகை அதிகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை .








Wednesday, November 23, 2011

கூகிள் தொழில்நுட்ப நிறுவனம் வழியே பயனடைதல் - விளக்கப்படம்.

 தொழில்நுட்பத்தை விரைவாக முன்னெடுத்து செல்ல , நாளை மாணவர்கள் கல்வி கற்க, நாம் தொடர்ந்து அடிப்படை ஞாபகம் வைத்துக் கொள்ள  நேரம்  வந்துவிட்டது, ஆனால் அதற்கு நாம்  மிகப் பெரிய தொழில் நிறுவனமான ஒன்றின்  முக்கிய குறிப்புகள் வழங்க வேண்டும். அதனால் கூகிள்  போன்ற தொழில்நுட்ப நிறுவனம் நமக்கு உதவியாக இருக்கும். அதனை  நாம் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும்.
  
விளக்கப்படம் பாருங்கள்


  Get more out of Google
Created by: HackCollege
by mail from Tony Shin

Tuesday, November 22, 2011

நான் வலிமை கேட்டேன் !


நான் வலிமை கேட்டேன் .........
இறைவன்  எனக்கு சிரமங்களை கொடுத்து   என்னை வலுவாக்கி   அதனை சமாளிக்க வழி செய்தான்.

நான் அறிவு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத்  தீர்க்க முறை செய்தான்.

இறைவனிடம்  வளமாக  வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..

ஆண்டவனிடம்  தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

நான் மக்களின் அன்பு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை  கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்  

இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற  அவனது அருள் கேட்டேன் ...
ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.    

நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை
ஆனால்  எனக்கு  தேவையானது எல்லாம் பெற்றேன்

என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ்

தமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்


பல விசயங்களில் கனடா ஒரு சொர்க்க பூமிதான். இங்கே நதிகளுக்கும் குறைவில்லை. நதிகள் என்றால் சாதாரண நதிகளா? மெக்கென்ஸி என்பது கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர்கள். வடஅமெரிக்கா மொத்தத்திற்கும் இதுதான் இரண்டாவது மிகப்பெரிய நதி. மிசிசிப்பி-மிசௌரி என்ற நதியே முதலிடம் வகிக்கிறது. அது அமெரிக்காவில் ஓடும் ஒரு பிரமாண்ட நதி.

இப்படி நன்னீர் ஏரிகளும் ஆறுகளும் சேர்ந்து உலகின் 30 சதவிகித குடிநீரை கனடாவுக்கே சொந்தமானதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. அதாவது விக்கல் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழலாம் இங்கே.

இந்தக் குடிநீரையெல்லாம் கனடாவின் நிலத்தில் பாய்ச்சினால் - சும்மா ஒரு கற்பனைக்குத்தான் - உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடா இரண்டு மீட்டர் ஆழத்தில் மூழ்கி மூச்சற்றுக் கிடக்கும்.


இந்த ஆறுகளிலும் ஏரிகளிலும் இடையிடையே ஆயிரக்கணக்கில் குட்டிக் குட்டியாய்த் தீவுகள் உண்டு. அவற்றைக் காண்பதைப் போல் ஒரு சுகம் வேறு எதிலும் இருக்கமுடியாது. ஒரு குலுக்கல் பரிசில் இங்கே ஒரு குட்டித் தீவு ஒருவருக்கு அவர் வாங்கிய 2 டாலர் சீட்டுக்கு விழுந்திருக்கிறது. இன்று அவர் ஒரு தீவின் சொந்தக்காரர்.

ஒரு ஆடம்பரமான பட்டம் பெறாத பொறியாளர் !

 உலகின் பல்வேறு உயிரினங்களின் அற்புதமான திறமைகளை பார்க்க  மின்னணு ஊடகங்கள் நமக்கு உதவுகின்றது. நமக்கு இறைவன் வழங்கிய திறமைகளை கற்பனைக்கு எட்டாத ஆழம் தூண்டப்படுகின்றதாக இருக்கின்றது. இறைவன் படைத்த அணைத்து பிராணிகளுக்கும் அதற்கு தேவையான அறிவை கொடுத்துள்ளது நம்மை பிரமிக்க வைக்கும். தன்னை பாதுகொள்வதும் தனக்கு தேவையான உணவை  அவைகள் தேடிக்கொள்வதும் மனித அறிவுக்கு குறைந்ததல்ல. நாம்   அதனை  கவனமாக கவனித்தால் இயற்கையின் அழகை  அனுபவிக்க முடியும். நாம் அவைகளிருந்து பல அறிவுகளையும் பெறலாம். 
                                              நேர் வரிசையில்
                                 கடைசி பகுதியை இறுதியாக வீடு கட்ட
                  தூரத்தை அளவிடுதல் 

Monday, November 21, 2011

அமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை

பசுமை நிறைந்த மஸ்கட் பயணம்
சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்போன்ற பலருக்கு சுற்றுவதில் ஆர்வமிருக்கிறது.அந்த ஆர்வமே இந்த பாலைவழி சாலையில் ஒரு பயணத்தை தொடர்கிறேன்.

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

  நீடூர், ஏ.எம். சயீத் (ரஹ்)
(நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50.

திருக்குர்ஆன் என்பது எழுதப்பட்ட வேதமோ, நூலோ அல்ல. அருளப்பட்டது. எந்த ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கிறது. இறையருளால் அது எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்து நிற்கும்.
நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிற இறைவன், உலக மக்களை அறியாமையின் ஆழமான இருளிலிருந்து அறிவு ஞானத்தின் பிரகாச உச்சத்திற்கு அவனே வழிகாட்டியாக இருந்து அழைத்து செல்கிறான் என்பதை திருமறை நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பின்பற்றும் வேதங்கள் மூலப்பிரதிகள் இல்லாமல் மாற்றப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு சிதைந்து நிற்கின்றன.

திருடனின் தொழுகை(இறை வணக்கம்)


 சிலர் ஒன்று கூடி   ஓரிடத்திற்கு திருட புறப்பட்டார்கள். அதில் ஒருவன்  புறப்படுவதற்கு முன் இறைவனை தொழ ஆரம்பித்தான். அவன் தொழுது முடித்த  பின், உடன் இருந்தோர் கேட்டனர் ' நாம் செய்யப்போவது  திருட்டுத்  தொழில் அது தவறான வழி அதற்கு ஏன் இறைவனை தொழுகிறாய்' எனக் கேட்டனர். அதற்கு அவன் சொன்ன பதில் ' இது எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பழக்கம். என் தந்தை தொழவில்லையென்றால் அடிப்பார். அவருக்கு பயந்து தொழ ஆரம்பித்தேன். அது இந்நாள் வரை தொடர்கிறது . தொழாமல் சென்றால் ஏதோ ஒன்றை இழந்ததுபோல்  இருந்து என் வேலையில் கவனம் எற்படாமல்   தவறு செய்து விடுவேன்' என்றான்.  
  
 ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பது அதன் மனதில் அழுக்கு இருக்காது. குழந்தைக்கு கற்பிக்கும்போது அச்சமுட்டி எச்சரிக்காமல் அன்பு காட்டி நாம் சொல்லித்தரும் அறிவுரைகளை அது நேசித்து விரும்பி விளங்கும்  வகையில்  கற்பிக்க வேண்டும்.      
இறைவனை தொழுவது (வணங்குவது) ஒரு கடமையாக இருந்தபோதும் அது ஆழ் மனதில் இறைபக்தியுடன் 'தான் தவறு செய்தால் இறைவனது தண்டனைக்கு உள்ளாவோம்'என்ற எண்ணம் இருக்க வேண்டும்  . இறைவன் தடுத்த செயலை செய்ய மாட்டேன் என்ற மன உறுதி வேண்டும். மார்க்கமும், மதமும் நம்பினால்தான். நம்பிக்கையற்ற நிலையில் யாவரும் எந்த மார்க்கத்தினையும் பேன முடியாது.  
 இறை வணக்கம் என்பது மனதை சார்ந்தது. மனம் கசிந்து இறைவனை  நாடுபவனுக்கு உறுதிப்பாடும் பணிவும் உண்டாகி அதன் உண்மை தத்துவம் அவனுக்கு விளங்குகிறது. உலகப் பற்று மிகவும் பொல்லாதது. அது மனிதனை மேலும், மேலும் ஆசை ஊட்டி படு பள்ளத்தாக்கில் தள்ளிவிடும். ஆனால் இறைவணக்கம் உள்ளவர்களிடம் அதன் உண்மை நிலை உயர்ந்து நிற்கும். இறைவணக்கம் அடுத்தவர் துண்டுதளினால் வந்தாலும் அது நமது ஆழ் மனதின் நேசத்தினால் வர வேண்டும்.  அடிக்கடி மகிழ்வோடு இறைவணக்கம் உங்கள் உள்ளத்தில் செய்து வரப்பழகிவிட்டால் உலகப்பற்று உங்களை ஒன்றும் செய்து விட முடியாது. அறிவுத்திறன் பலருக்கு இருக்கும். ஆத்ம பலம் சிலருக்குதான் இருக்கும். ஆனால் இறைவணக்கத்தால் அதை சாதிக்கலாம்.இறைவன் திட்டப்படியே எல்லாம் நடந்து வருகிறது. அதில் நல்லதை எண்ணி உழைப்பிலும், பிழைப்பிலும் அவ்வப்போது இறைவனை தனக்குள்ளே வணங்குவதுதான் முறையான இறைவணக்கம். 

பராக் ஒபாமா ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால்?


வணங்காமுடியார், அரசார், மதனார் யார் எதில் சிறந்தவர்? - குழந்தைவேலு, புதுவை.
அதை வாசகர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்.

என்னை நானே    ஜாம்பவான்களுடன் ஒப்பிடக் கூடாது.

"ஜெயலலிதா போயஸ் கார்டனையும் மனநல மருத்துவமனையாக மாற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்கிறாரே மு.க. ஸ்டாலின்? - சிவா, மயிலாடுதுறை.

ஆத்திரத்தின் வெளிப்பாடு.

கருணாநிதி தம் கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்திருந்தாரே!

அதுபோல் ஜெயலலிதாவும் தம் வீட்டை மனநல மருத்துவமனையாக மாற்றிப் பொதுத் தொண்டாற்றினால் இவருக்கென்ன?

"ஸ்டாலினுக்கு அம்மருத்துவமனையில் நிச்சயமாக இடம் உண்டு" என ஜெயலலிதாவோ அல்லது அவரது அமைச்சர்களோ இன்னும் எதிர் அறிக்கை விடாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

கையில் நாலு காசு சேரும்போது பதட்டமாகவும், காசு இல்லாதபோது எரிச்சலாகவும் உள்ளது. ஏதாவது இலவச ஆலோசனை தாருங்கள். - சிக்கந்தர், மண்ணடி.
வணங்காமுடியைப் போல் தேவைக்கு மட்டும் காசைத் தேடிக் கொண்டால்  போதும். செலவுகளுக்குத் தக வரவைத் தேடி, வரவுக்குத் தக செலவு செய்தால் பதட்டமும் இராது; எரிச்சலும் வராது.

மரணம் எப்போது என ஒரு மனிதனுக்குத் தெரியுமானால் அவனது வாழ்க்கை எப்படி இருக்கும் வணங்காமுடியாரே? - அனு, நெய்வேலி.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண நாளும் நேரமும் முன் கூட்டியே தெரிந்து விடும். சிலர் பிரார்த்திப்பார்களாம்; சிலர் அழுது அரற்றுவார்களாம்; சிலர் விரக்தியாய்ச் சிரிப்பார்களாம்; சிலர் பைத்தியம்போல் உளறுவார்களாம். இவை சில கைதிகளின் சிறை அனுபவப் புத்தகங்களில் படித்தவை.