மூன்று வயது குழந்தை
கேட்ட கேள்வி மகிழ்வாய் இருந்தது ஆனால் அதற்கு பதில் சொல்ல தெரியாமல்
இருந்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. கேள்வி கேட்க குழந்தைகளுக்கு
சரியான அதன் அறிவுக்கு ஏற்றதுபோல் பதில் சொல்வது குழந்தைகளின் அறிவை
வளர்க்கும். குழ்ந்தை அதிகமாக கேள்வி கேட்பது அதன் தாய் அல்லது அதன்
தந்தையிடமாகவே இருக்கும்.அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்க நாம்
முயல்கின்றோம். ஆனால் அது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத்
தெரியவில்லையென்றால் பேச்சினை மாற்ற முயல்கின்றோம் . பாச்சி, பாச்சி (பால்)
என்று பசியுடன் பால் கேட்கும் குழந்தையை தாய்ப் பால் இல்லாத தாய் தன்
பால் கொடுக்கும் காம்பினை பூச்சி பூச்சி என்று சொல்லி
குழந்தைக்கு பயத்தினை உண்டாக்குவதனைப் பாரதிதாசன் எழுதி
படித்திருக்கிறோம். சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள
வேண்டியுள்ளது. மறைமுகமாவது அதன் அறிவுக்கு ஏற்றது போல் சொல்லக் கூடிய
அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.
கேள்வி கேட்பது என்பது சின்ன வயது முதல்
அனைவருக்கும் இருக்கும் பழக்கமான ஒன்றுதான். சில கேள்விகள் சிரிப்பை
வரவழைக்கும் சில
கேள்விகள் அறிவை வரவழைக்கும்.பெண் கல்வி அவசியாமாவது அவசியம் தங்கள்
குழந்தைகளை நல்ல அறிவோடு வளர்க்க பயன்படும். வேலைக்கு போகத்தான் கல்வி தேவை
என்பது கிடையாது. ஒரு பெண் திருமணமாகு முன் கல்லூரிக்கு சென்று பயில வாய்பு
அதிகம். அதனை எதற்கு நழுவ விட்டு அடை காத்த கோழி போல் வீட்டில்
அடைந்திருக்க வேண்டும்.
குழ்ந்தை இப்படி கேள்வி கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்!
ஒரு குழந்தை
பணம் வைத்து விளையாடுகிறாள். நமக்கு குழந்தை
அந்த பணத்தினை விழுங்கி விடுமோ!
என்ற பயம் அல்லது அழுக்கான பணக் காசுகள் குழந்தை உடல் நலத்தினை பாதிக்கும்
என்ற நோக்கத்தில் அம்மா காசெல்லாம் நீ தொடக் கூடாது என்று சொல்ல அக் குழந்தை நீ மட்டும் நிறைய காசு வைத்திருக்கிறாயே!" என்றால் உங்கள் பதில்
என்ன?
ஒரு திருமணத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்கிறோம்,அப்பொழுது "அம்மா உன்
கல்யாணம் எப்பொழுது நடக்கும்" அல்லது ' உன் கல்யாணத்திற்கு நான்
எங்கிருந்தேன்' என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் !
தாய் அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்த நிறைமாத தாயாக இருக்க வயிறு பெரிதாக காட்சி அளிக்க முதல் மூன்று வயது குழந்தை
கேட்கிறது ' ' ' 'ஏம்மா உன் வயிறு இவ்வளவு பெரிசா இருக்கு"
இவ்விதம் பல
கேள்விகள். இதற்கெல்லாம் நாம் முறையாக குழந்தை கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் அயராது தொய்வில்லாமல்
பதில் சொல்லி அதன் அறிவை வளர்க
வேண்டும்.
No comments:
Post a Comment