Monday, November 21, 2011

திருடனின் தொழுகை(இறை வணக்கம்)


 சிலர் ஒன்று கூடி   ஓரிடத்திற்கு திருட புறப்பட்டார்கள். அதில் ஒருவன்  புறப்படுவதற்கு முன் இறைவனை தொழ ஆரம்பித்தான். அவன் தொழுது முடித்த  பின், உடன் இருந்தோர் கேட்டனர் ' நாம் செய்யப்போவது  திருட்டுத்  தொழில் அது தவறான வழி அதற்கு ஏன் இறைவனை தொழுகிறாய்' எனக் கேட்டனர். அதற்கு அவன் சொன்ன பதில் ' இது எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பழக்கம். என் தந்தை தொழவில்லையென்றால் அடிப்பார். அவருக்கு பயந்து தொழ ஆரம்பித்தேன். அது இந்நாள் வரை தொடர்கிறது . தொழாமல் சென்றால் ஏதோ ஒன்றை இழந்ததுபோல்  இருந்து என் வேலையில் கவனம் எற்படாமல்   தவறு செய்து விடுவேன்' என்றான்.  
  
 ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பது அதன் மனதில் அழுக்கு இருக்காது. குழந்தைக்கு கற்பிக்கும்போது அச்சமுட்டி எச்சரிக்காமல் அன்பு காட்டி நாம் சொல்லித்தரும் அறிவுரைகளை அது நேசித்து விரும்பி விளங்கும்  வகையில்  கற்பிக்க வேண்டும்.      
இறைவனை தொழுவது (வணங்குவது) ஒரு கடமையாக இருந்தபோதும் அது ஆழ் மனதில் இறைபக்தியுடன் 'தான் தவறு செய்தால் இறைவனது தண்டனைக்கு உள்ளாவோம்'என்ற எண்ணம் இருக்க வேண்டும்  . இறைவன் தடுத்த செயலை செய்ய மாட்டேன் என்ற மன உறுதி வேண்டும். மார்க்கமும், மதமும் நம்பினால்தான். நம்பிக்கையற்ற நிலையில் யாவரும் எந்த மார்க்கத்தினையும் பேன முடியாது.  
 இறை வணக்கம் என்பது மனதை சார்ந்தது. மனம் கசிந்து இறைவனை  நாடுபவனுக்கு உறுதிப்பாடும் பணிவும் உண்டாகி அதன் உண்மை தத்துவம் அவனுக்கு விளங்குகிறது. உலகப் பற்று மிகவும் பொல்லாதது. அது மனிதனை மேலும், மேலும் ஆசை ஊட்டி படு பள்ளத்தாக்கில் தள்ளிவிடும். ஆனால் இறைவணக்கம் உள்ளவர்களிடம் அதன் உண்மை நிலை உயர்ந்து நிற்கும். இறைவணக்கம் அடுத்தவர் துண்டுதளினால் வந்தாலும் அது நமது ஆழ் மனதின் நேசத்தினால் வர வேண்டும்.  அடிக்கடி மகிழ்வோடு இறைவணக்கம் உங்கள் உள்ளத்தில் செய்து வரப்பழகிவிட்டால் உலகப்பற்று உங்களை ஒன்றும் செய்து விட முடியாது. அறிவுத்திறன் பலருக்கு இருக்கும். ஆத்ம பலம் சிலருக்குதான் இருக்கும். ஆனால் இறைவணக்கத்தால் அதை சாதிக்கலாம்.இறைவன் திட்டப்படியே எல்லாம் நடந்து வருகிறது. அதில் நல்லதை எண்ணி உழைப்பிலும், பிழைப்பிலும் அவ்வப்போது இறைவனை தனக்குள்ளே வணங்குவதுதான் முறையான இறைவணக்கம். 

No comments: