நானும் அப்பாவும் ஒரு விருந்துக்குப் போனோம் .அவர் 'அன்பு மகனே உன்னிடம் வைத்த அந்த இனிப்பையும் கோழி கறியையும் எனக்குத் தா. நான் வயதானவன்,நான் நீண்ட காலம் வாழப் போவதில்லை. நீ என்னை விட தொடர்ந்து வாழப் போகிறாய்.அதனால் இவ்வித உணவு சாப்பிட உனக்கு வாய்ப்பு அதிகம்' என்றார்.
அப்பா நீ உன் வாழ்வில் எவ்வளவோ சாப்பிட்டிருப்பாய். நான் ஆரோக்கியமாக இருக்க நீ அதிகம் விரும்புவாய், நீ வாழ்ந்து முடித்தவர் ஆனால் நான் வாழ வேண்டியவன் உன்னிடமுள்ள இனிப்பையும் கோழி கறியையும் எனக்குத் தா' என்றேன்.
ஒரு தகப்பனார் உடல் நலமில்லாமல் போனதால் தான் இறந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்த நிலையில் தனது அன்பு மகன்களை அருகில் அழைத்து தான் மற்றவர்களுக்கு கொடுத்து தனக்கு வரவேண்டிய பண கடன்களை,சொத்துகளை சொல்ல ஆரம்பித்தார். பட்டியல் அதிகமாக இருந்ததால் 'அப்பா இருங்கள்..நாங்கள் ஒரு தாளில் அனைத்தையும் எழுதிக் கொள்கின்றோம் ' என்று சொல்லி அனைத்தையும் எழுதிக் கொண்டனர். இறுதியாக உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த மனிதர் (தகப்பனார்) தான் கொடுக்க வேண்டிய பணப் பட்டியலை சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது அன்பு மகன்கள் ' அப்பாவுக்கு மறதி வந்து தான் என்ன சொல்கின்றோம் என்பதனை அறியாமல் சொல்ல வருகின்றார்,ஜன்னி வந்து பிதற்ற ஆரம்பித்து விட்டார் அதனால் இனி அவர் சொல்வதை எழுதாதீர்கள்' என்று அவர் கொடுக்க வேண்டிய கடன்களை எழுதாமல் நிறுத்திக் கொண்டனர் நேர்மையின் குலக் கொழுந்துகள்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி - முதலில் கொடுக்க வேண்டிய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும். பின்புதான் சொத்து பிரித்துக் கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment