Tuesday, November 1, 2011

நமக்கு ஏன் அது மிகவும் முக்கியமாக வேண்டும் !


 நமக்கு நடக்கு
ம் கெட்ட விஷயங்களை  பற்றிய எண்ணத்தினை ஒரு நல்ல எண்ணம் தான் முறியடிக்க வேண்டும்
கெட்ட விஷயங்கள்  நமக்கு மட்டும் ஏன் நடக்குது! என்ற எண்ணம் தான் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் ஆயூதம், இது ஒரு தாழ்வு மனப் பான்மையின் திறவுகோல்.
இந்த வாழ்க்கை பல ஏற்றத்தாழ்வுகளுக்கு, பல சோதனைளுக்கு உள்ளானது. விரக்தி மனப்பான்மை வாழ்வினை அழித்துவிடும் . துயரம் ஏற்படும் நிகழ்வு நடந்தால் அதுவும் ஒரு நன்மையாகவே இருக்கும். இறைவன் நாட்டம் அதுவாக  இருப்பின் நாம் என்ன செய்ய முடியும்! என்ற மன ஆறுதல் அடையக் கூடிய உள்ளம் நமக்கு தேவை.  இறைவன் (அல்லாஹ்) நம்மை  இதைவிட மோசமான பாதிப்பிலிருந்து காப்பாற்றியுள்ளான்  என்ற நினைவுடன் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

  நல்ல காரியத்திற்காகவே தேர்தலில் போட்டி போட்டேன். நன்மை செய்ய விடாமல் தடுத்து விட்டார்களே என வருந்துபவர்களைப் பார்க்கின்றோம். வெற்றி பெற்றபின் நீங்கள் செயலில் இறங்கும்போது எத்தனை வகை  தீமையான செயல்களை சந்திக்க நேர்கின்றது .அதில் நீங்களும் ஒருவராக வாய்ப்பில்லையா? நீங்கள் உத்தமராக இருக்க விரும்பினாலும் உங்களுக்கு மேலுள்ள அல்லது கீழுள்ள அதிகாரிகள் நீங்கள் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு  உடந்தையாக  இருக்க மறுத்தால் நீங்கள் பலிகடாவாக  ஆக்கப் படுவீர்கள் என்பதனை  நினைத்து ஆறுதல் அடையுங்கள். ல்லாம் நன்மைக்கே என்ற மனப் பக்குவம் இருந்து தொடர்ந்து தொய்வின்றி சேவை செய்ய முயலுங்கள்

20. 'நல்லவற்றை(ச் செய்யுமாறு) நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள். பின்னா, 'நிச்சயமாக உங்கள் அனைவரையும் விட நான் அல்லாஹ்வை நன்கு அறிந்தவனும் அவனை அதிகம் அஞ்சுபவனுமாவேன்" என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

-ஸஹீஹுல் புகாரி
நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருகின்றது. ஒருவருக்கு தூய எண்ணங்கள் தோன்றுமாயின்  நல்ல காரியங்களைச் செய்கிறோம். எதிர் மறையானஎண்ணங்கள் மனதில் ஏற்பட்டு விட்டால் ... அதைப்பற்றியே நினைக்காமல் நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்ளலாம்.

No comments: