நோய் வராமல் வாழ்ந்தவர் யார்! ஒருவன் இறந்தால் அதற்கு நாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விடுகின்றோம். இறைவன் அழைத்துக் கொண்டான் என்று சொல்வதில்லை அதனால் இறைவனை நாம் சபிப்பதில்லை,திட்டுவதில்லை.
நோய் நொடியினால் பாதிக்கபட்டவர்களை நலம் விசாரிப்பதையே ஒரு இபாதத்தாக (அமலாக)கடமையாக,வணக்கமாக இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
வியாதிக்காரரே ஒரு சிறந்த மருத்துவர். அவர் பல மருத்துவரைப் பார்த்து அதனால் பல அனுபவங்கள் பெற்ற அனுபவம் இருக்கலாம்.
நோய் வந்தால் மருத்துவம் பார்க்கிறோம் உங்களுக்கு நோய் வந்தால் பயன்பெறுவது மருத்துவரும் ,மருந்து விற்பனையாளரும் , மருத்துவரைப் போய் பார்க்க நம்மை அழைத்துச் செல்லும் வாகன ஊர்திகளும், இடையில் மருத்துவ மனையில் நம்மை அனுமதிக்கும் பணம் (லஞ்சம்) வாங்கும் நபரும் அடங்குவர்.
நோயின் அறிகுறிகளையும் காரணங்களையும் அறிய வேண்டும். உணவும் ஒவ்வாமையும் பரம்பரையும் காரணமாகவம் தட்ப வெட்ப காரணமும் இன்னபிற காரணங்களாகவும் இருக்கலாம்
நோய்
நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்
(குறள்: 948)வாய் நாடி வாய்ப்பச் செயல்
ஒரு முறை நோய் வந்தால், வந்த நோய் என்ன காரணத்தினால் எதனால் வந்தது என்றும் அவற்றுக்கான அறிகுறிகள் என்ன என்றும் நாம் சிந்திபதில்லை. நோய் வந்தால் உடனே மருத்துவரை அனுகி மருந்து சாப்பிட்டு ஊசி போட்டால், சரியாகிவிடும் என்று முடிவுக்கு வந்து விடுகின்றோம். ஊசி போட்டால் உடன் நலம் பெறுவோம் என்ற நோக்கத்துடன் மருத்துவரை ஊசி போட வேண்டுகின்றோம் . தேவை இல்லை என்றாலும் கிருமி கொல்லி antibiotic மருந்துக்கு நாம் முதல் இடம் கொடுக்கிறோம் . வளர்ந்த நாடுகளில் (பிரான்ஸ் ,அமெரிக்கா ,இங்கிலாந்து) மருந்துகளை தேவை இல்லாமல் உபயோகிப்பதில்லை.
நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதுமாகும்
Harun Yahya - Medicine of the Prophet (saas) - Download Page
பாட்டி வைத்தியமும் பலன் தரலாம்Please click here பாட்டி வைத்தியம் »
.
1 comment:
ஹதீஸ் தகவல் தந்ததற்கு நன்றி.
Post a Comment