Sunday, November 6, 2011

விளம்பரத்தினால் ஹஜ் பயணத்தின் புனிதத் தன்மை கெட்டு விடக் கூடாது!

   இப்ராஹீம் இப்னு அத்ஹம் அவர்ஹல் ஹஜ் செல்லும் வழியில் ஒவ்வோர் அடிக்கும் தொழுகை நடத்தி விட்டு கஹ்பாவை காணச் சென்றும் அவர்கள் பார்வைக்கு இறையில்லம் காண முடியாமல் கதறி கண்ணீர் வடித்தார்கள்.அசரீதியாக 'பெண் இனத்தின் தாய் பஸரியாவை வரவேற்க கஅபத்துல்லா சென்றிருக்கிறது' என்று காதில் விழுந்தது.
  
   இதை கேட்டு அதிசயமடைந்தவராக ராபியத்துல் பஸரியா  அவர்களிடம் சென்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் " நான் ஹஜ்ஜுக்கு வருவதாக விளம்பரம் செய்து கொள்ளவில்லை. அதனால் கஅபாவினை பார்க்கும் பாக்கியத்தினை அல்லாஹ்(இறைவன் ) அருளினான். நீங்களே  ஹஜ்ஜுக்கு செல்வதை விளம்பரம் செய்துக் கொண்டு எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் தொழுவதைத் தெரிவித்துக் கொண்டு சென்றீர்கள் அதனால் உங்கள் பார்வைக்கு கஅபா புலப்படவில்லை"  என்றார்கள்.

 (நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)

  ‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்ற ஏவலின் பிரகாரமே நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ – அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.

No comments: