கண்டதை யெல்லாம் கைக் கூட வேண்டுமென்ற ஆசை !
அது எனது ஆசை ,உங்கள் பார்வைக்கு பேராசை.
கவிஞன் கண்டால் கவிதை ,அதை நீங்கள் ஆசையாய் படிப்பீர்கள்
கவிஞன் காண்பதெல்லாம் கற்பனையாய் போய்விடும்.
கவிஞனின் கற்பனை கவிதையாக! மற்றவர் நினைவு செயலாக மாறக் கூடிய வாய்ப்புண்டு.
என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும் அதனை இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்று சொல்பவர்களுமுண்டு!
நான் காணும் கனவில் கற்பனையில்லை, கண்டதே கனவாக மாறிவிடும்
கனவு நினைவோடு நின்றால் அது நிகழ்வாக மாற வாய்ப்புண்டு.
உருவாக்க உணர்வோடு ஒன்றி நிற்க அதனை கிண்டல் செய்து
பார்க்க ஒரு கூட்டம், அது எனது குடும்பத்திலேயே ஆரம்பிக்கும்.
இறைவா நான் அனைவருக்கும் பயன்பட நினைத்து செயல்பட
நினைத்தாலும் அதனை உருவாக்காமல் தடுக்க எத்தனை மனிதர்கள்!
நான் நானாக வாழ முடியாமல் அடுத்தவருக்காக நடிக்கும் நிலை வேண்டாம்
இன்பமும் துன்பமும் என்னை வந்து அடைய மற்றவர் அதில் பங்கு போடுவதில்லை;
பின் ஏன் வீணே என்னை சிறுமைப் படுத்தி செயலிழைக்கச் செய்கின்றனர்!
அரசியலும், ஆள்பலம் உள்ள கூட்டம் நான் சேர்க்காமல் போன குற்றமா?
இது என் தவறா! அல்லது அறியா நிலையா!
No comments:
Post a Comment