Monday, November 21, 2011

அமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை

பசுமை நிறைந்த மஸ்கட் பயணம்
சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்போன்ற பலருக்கு சுற்றுவதில் ஆர்வமிருக்கிறது.அந்த ஆர்வமே இந்த பாலைவழி சாலையில் ஒரு பயணத்தை தொடர்கிறேன்.ஹஜ்பெருநாள் விடுமுறைக்கு இந்த ஆண்டு கொஞ்சம் தூரமாக சென்று வரலாம் என தீர்மானித்தேன்.

அமீரகத்தின் நேச நாடான ஓமான் அதன் தலைநகரம் மஸ்கட்டிற்கு செல்ல திட்டம் தயாரானது. எனது நண்பர் தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீனை தொடர்புக் கொண்டு மஸ்கட்டில் நமக்கு தெரிந்த நண்பர்கள் யாரும் இருக்கிறார்களா? என்றுகேட்டதற்கு கூத்தாநல்லூரைச் சேர்ந்த நண்பர் ஷரீப் சுப்ரி அவர்களின் தொலைபேசி எண்னை தந்தார்.அவரிடம் தொடர்புக் கொண்டு அங்கு தங்வதற்கு விடுதியை முன்பதிவு செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டேன்.

தனியாக என் குடும்பம் மட்டும் செல்வதைவிட நட்பு குடும்பங்களுடன் கலகலப்பாக செல்லாம் என சில நண்பர்களிடம் தொடர்புக் கொண்டேன்.

நண்பர் கொல்லாபுரம் முனாப் கை தூக்கினார். இரண்டு குடும்பம் இரண்டு கார்களில் ஈத் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு காலை விருந்து உபசரிப்புகளையும் வழங்கிவிட்டு 11 மணிக்கு புறப்பட நேரம் நிர்ணயித்தும் நேரம் தவறாமையை கடைபிடிக்க முடியவில்லை.
பகல் 12 மணிக்கு துபாயிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள ஹத்தா (HATTA BARDER) எல்லையை நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.புறப்படுமுன் மஸ்கட் நண்பர் ஷரீப் சுப்ரி அவர்களுக்கு நாங்கள் புறப்படும் செய்தியை கூறிவிட்டு புறப்பட்டோம்.

புறப்படும்போதே முனாப் கூறினார் 100 கி.மீ வேகத்திற்குள்ளாகவே செல்ல வேண்டும் என்று கட்டளை இட்டார். அவருடைய 2011 மாடல் நிஸான் சன்னி 0 மைலேஜிலிருந்து புறப்படுவதால் முதல் 1000 கிமீ வரையில் 100 கிமீ வேகத்திற்குள்ளாகதான் செல்ல வேண்டும் என்பது மோட்டார் வாகனவிதி அதை கடைபித்தோம்.

ஹத்தா எல்லையை தொடுவதற்கு முன் இரு இடங்களில் சோதனைச்சாவடி இயங்குகிறது. அங்கு துபாயிலிருந்து வரக்கூடிய அனைவரிடமும் ஐடியை சோதிக்கிறார்கள். ஆதலால் ஹத்தவிற்கு செல்லக்கூடியவர்கள் ஐடி அல்லது பாஸ்போர்ட் அவசியம் கையில் எடுத்துச் செல்லவும். நாங்கள் ஹத்தா எல்லைக்கு வந்தபோது மணி பகல் இரண்டு. பார்டரில் கூட்டம் அதிகம் இருக்கும் என சிலர் கூறியிருந்தார்கள் ஆனால் நாங்கள் சென்ற நேரத்தில் யாருமே இல்லை. ஐந்து நிமிடங்களுக்குள் பாஸ்போர்ட்டில் எக்ஸிட் ஸ்டாம்ப் பதிவானது.

அங்கிருந்து ஓமான் பார்டர் 2 கிமீ தூரத்தில் இருக்கிறது அங்கும் ஒரு சிலரை தவிர அதிக கூட்டம் இல்லை. துபாயிலிருந்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு ஓமான் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் அங்கேயே 100 திரஹம் கொடுத்து இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஓமான் பார்டர்


ஓமான் பார்டரைக் கடந்ததும் எங்க வேலையை ஆரம்பித்துவிட்டோம் ஆமாங்க மதிய உணவு
வெரிச்சோடி கிடக்கும் சாலை
எங்களை வரவேற்க சூழ்ந்துக் கொண்ட மேகங்கள்
ஒவ்வொரு கிராமங்களிலும் ரவுண்டாணா அதற்குள் அழகிய வேலைபாடுகள்

ஒரு நபருக்கு ஓமான் விசா 100 திரஹம். குழந்தைகளுக்கு அதாவது 18 வயது வரை உள்ளவர்களுக்கு விசா இலவசம்.
(பார்டரில் ஓமான் ரியால்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை கடன் அட்டையும் கொடுக்கலாம் திரஹத்தை ஓமான் பார்டரிலிருந்து மஸ்கட் வரையில் எங்கும் கொடுக்கலாம் வாங்கி கொள்வார்கள்)

ஓமான் பார்டர் ஓப்பனைகளை முடித்துக் கொண்டு நாங்கள் கிளம்பி மதிய உணவை பாலை-சாலையில் அருந்திவிட்டு புறப்பட்டோம்.
சாலையோர பசுமை எங்களை மிகவும் கவர்ந்து.செல்லும் வழிகளில் குட்டிகுட்டி கிராமங்கள் இரசிக்க வைத்தன. சாலையோர பலகைகளில் வாடி (VADI)என்ற ஆங்கில வார்த்தையில் வாசகம் எழுதப்பட்டிருந்தன. அந்த இடங்களில் சாலை தாழ்வாக போடப்பட்டிருந்தன. அது மழை நீர் கடக்கும் பாதை. நாங்கள் செல்லும் சமயம் ஒரு இடத்தில் மட்டும் மடைத் திறந்த வெள்ளம் போல் தண்ணீர் வேகமாக வாடியைக் கடந்தது. வாகனங்கள் நிறுத்தப்பட்டு மெதுவாக ஊர்ந்தது.
மிதமான வேகத்தில் பயணம் செய்ததால் நேரம் எங்களை விழுங்க்கிக் கொண்டிருந்தது. மாலை இறைவணக்கத்திற்காக நிறுத்தினோம். மஸ்கட் நண்பர் தொலைபேசி செய்து எங்கு இருக்கிறீர்கள்? எத்தனை மணிக்கு ரூவி வந்தடைவீர்கள்? மாலை ஏழு மணிக்கு இஸ்லாமிய தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம் இருக்கிறது அவசியம் அதில் நீங்களும் கலந்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்வத்துடன் கூறினார். அருகில் இருந்த கடைக்காரரிடம் நாங்கள் இருக்கும் இடத்தின் பெயர்கேட்டு கூறி இரவு எட்டு மணிக்குள் ரூவி வந்தடைவோம் என்று கூறிவிட்டு புறப்பட்டோம்.
மஸ்கட் விமான நிலையம் வந்தடைந்தோம் அதையும் தாண்டி ரூவி செல்லவேண்டும் என்று வழிகாட்டு பலகையில் குறிப்பு கண்டு பயணித்த போது சில பாலங்களில் நானும் நண்பர் முனாப்பும் வழிமாறினோம். அவர் வழி மாறிச்சென்றது எனக்கு தெரியாத நிலையில் பின் தொடரும் வாகனங்கள் எல்லாம் விளக்கு ஒளியில் ஒரே மாதிரியாக இருந்ததினால் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு அவர்வரும் வரையில் காத்திருந்தேன் பத்து நிமிடங்களில் எப்படியோ வந்து சேர்ந்துக்கொண்டார்.
மீண்டும் பயணித்தோம் நகருக்குள் பல சாலைகள் பல வழிகளாக பிரிந்தாலும் நாங்கள் வழிகாட்டு பலகைகளை பார்த்துக் கொண்டே இரவு நேரம் என்பதால் மெதுவாக வாகனத்தை ஓட்டினோம். எங்களை பின்தொடர்ந்த வாகனங்களுக்கு எரிச்சலூட்டிருக்கும் ஹாரன் அடித்தார்கள். அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை எங்கள் இலக்கு ரூவி அவ்வளவுதான்.

மஸ்கட் நண்பருக்கு போன் செய்து ரூவி ரவுண்டானா பக்கத்தில் சரவணபவன் ரெஸ்டாரண்டிற்கு வந்துவிட்டோம் என்றதும் அங்கேயே இருங்கள் என்றுகூறி விட்டு பத்து நிமிடங்களில் ஒரு காரில் வந்துவிட்டார். என்னை தொடருங்கள் என்றதும் அவருடைய வாகனத்தை பின் தொடரந்தோம். விடுதிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு இஸ்லாமிய தமிழ் சங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாவின் ஹாலுக்குள் அழைத்து வந்துவிட்டார்.

ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறம் என தனித்தனியே அமர்ந்துக்கொண்டு அங்கு நடந்துக் கொண்டிருந்த பட்டிமன்றத்தை இரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைப்பின் தலைவர் நண்பர் முனாப்பிற்கு பழக்கப்பட்ட நண்பர் என்பது அங்குதான் எங்களுக்கு தெரிந்தது. அவர் எங்களை நல்லமுறையில் வரவேற்று இடம் அமர்த்தினார். சில நிமிடங்களில் நடந்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றத்துடன் நான் கலந்து இரசிக்கலானேன்.
பேராசிரியர் அப்துல்சமது அவர்கள் நடுவராக வீற்றிருக்க பேச்சாளர்கள் தங்களின் வாதத்தை நகைச்சுவையாக வாதாடிக் கொண்டிருந்தார்கள். வந்த களைப்பெல்லாம் கலைந்தது எனக்கு ஆனால் என்குழந்தைகளுக்கு விடுதிக்கு செல்ல வேண்டும் என்று என்னை அழைக்க நாங்கள் அங்கிருந்து விடுதிக்கு சென்றோம்.
ஜாஸ்மின் அப்பார்ட்மெண்டின் ஊழியர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தார்கள் அங்கு மதுரை செட்டிநாடு உணவகமும் இருந்து. குடும்பத்தார்களை விடுதியில் தங்க வைத்துவிட்டு நாங்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துச் சென்றோம்.
மறுதினம் நாங்கள் சென்று சுற்றி இடங்களின் புகைப்படங்கள்

மஸ்கட் ரூவியின் மணிகுண்டு
ரூவி ரவுண்டானா இங்குதான் விடுமுறை நாட்களில் அனைவரும் ஒன்றுக்கூடும் இடமாக இருக்கிறது
எங்களை நோக்கும் கேமராவிற்கு பின் பகுதியில் சரவணாபவன் உணவகம் இருக்கிறது
ரூவி நகரத்தின் மற்றுமொரு ரவுண்டானாவின் மீன்களின் மீது ஓமானிகள் கொண்டிருக்கும் காதல் சிலையாக...
                                                
மஸ்கட்டின் ஆர்பார்

மஸ்கட் கோட்டை
மஸ்கட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் இந்த மார்கெட்டில் இங்கு வந்துபோனதின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை வாங்கி செல்வது வழக்கமாம்
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஓமான் எப்படி இருந்தது என்பதை இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் சாட்சி சொல்கிறது. (நாங்கள் சென்றபோது விடுமுறை.)
ரூவி நகருக்குள் அழகிய வடிவில் பூங்காக்கள் அமைத்திருக்கிறார்கள்
மஸ்கட் மீயூசியத்திற்குள் செல்லும் பாதை
ஓமான் மன்னரின் மாளிகை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளார்கள்.
மலையின் உச்சியிலிருந்து
மலைச் சாலையிலிருந்து இறங்கும் பாதை
Barr Al Jissah Resort மலையின் மேல் கட்டப்பட்டிருக்கும் அழகான ரிஸோர்ட் தங்கும் அறையிலிருந்து கடலையும் ஒரு பக்கம் மலையையும் கண்டு ரசிக்கலாம்.
Qantab Beach இது ஓப்பன் பீச் பலர் விடுமுறை நாட்களை இங்கு தான் கழிக்கிறார்கள்.
அந்த பீச்சில் போட் சவாரி இருக்கிறது. நல்ல வேகத்தில் ஒரு கி.மீ தூரம் வரையில் சென்று திரும்புகிறார்கள்.
மலைகளும் கடலும் ஒன்றோடொன்று சங்கமிக்கும் காட்சி
Grand Mosque  இது மஸ்கட் ரூவியின் பெரிய பள்ளிவாசல் மிக அழகிய வேலைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது.
மஸ்கட் நண்பர் கூத்தாநல்லூர் ஷரீப் சுப்ரி, கொல்லாபுரம் முனாப், அவர்களுடன் நானும்

எனது சின்ன மகள் எடுத்த புகைப்படம்
பள்ளிவாசலை சுற்றிலும் அழகான செடி கொடிகள் இது ஒரு நந்தவனமாகவே காட்சியளிக்கிறது. இந்த பள்ளிவாசலை காண்பதற்கு எல்லோருக்கும் அனுமதி உண்டு.
இரவு ஏழு மணி தொழுகையை முடித்துக் கொண்டு துபாய் பறப்பட ஆயத்தமானோம். நீண்ட நாட்கள் பழகிய நட்பைபோல் சகோதரர் ஷரீப் சுப்ரியின் பழக்கம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது. முன் பின் அறிமுகம் இல்லை என்றாலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி மெய்யன்போடு உள்ளத்தில் பதிந்தவர் அவருக்கு கூறி விடைபெற்றோம் .
நாங்கள் புறப்படும் நேரம் வானம் இருண்டு மின்னலுடன் மழையை எதிர்நோக்கி எங்கள் பயணம். எப்படியும் மழையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் பயணிக்கையில் மழையைில் நனைந்தது எங்கள் வாகனம்.

இரவு நேரம் என்பதால் எல்லோரும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் உற்சாகத்துடன் காரை ஓட்டிவந்தேன்.
நாங்கள் துபாய் வந்து சேரும்போது அதிகாலை மூன்று மணி.
 எங்களின் பயணம் இனிதே சிறப்பாக அமைந்தது இறைவனுக்கு நன்றி கூறினோம்.

http://kismath.blogspot.com/2011/11/blog-post.html

2 comments:

அதிரை தும்பி said...

super bhai

Ramesh said...

Very good article - just reminded my trip to Oman from Dubai last year eid holidays by road - good one

LinkWithin

Related Posts with Thumbnails