Sunday, November 20, 2011

அன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother


  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்றும் (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
Qur'an 17:23.  
. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
Qur'an31:14  
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின்
தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன்."
என அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 868.
  
 அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”Qur'an2:215

The teachings of the Holy Qur'an for the Child to follow during his life is: "Your Lord (Allah) has ordained that you should worship none except Him and show kindness to parents. If one of them or both of them attain to old age with you, say not 'Fie' unto them nor reproach them but speak to them a gracious word. And lower unto them the wing of submission through mercy (defer humbly to them out of tenderness) and pray: My Lord, have mercy on them both as they nurtured me when I was little." (Qur'an
17:23-24)

"And we (Allah) have enjoined upon man (to be good) to his parents: His mother bears him in weakness upon weakness.." Qur'an 31:14)

"We have enjoined on man kindness to his parents: In pain did his mother bear him, and in pain did she give him birth.." (Qur'an 46:59)


No comments: