"பெனட்டான்" என்ற இத்தாலி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில் கிறிஸ்தவ மதத்தலைவர் போப்பும், எகிப்து இமாமும் உதட்டில் முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இன்னொரு விளம்பரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஹூஜிண்டாவோவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது பெரும் பரபரப்புக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
பெனட்டான் நிறுவனம் உலக மக்களை கவருவதற்காக வித்தியாசமாக யோசித்து 6 வகையான விளம்பரங்களை தயாரித்தது. “UNHATE” (வெறுப்பில்லை) என்ற தலைப்பிட்டு பிரபலமான உலக தலைவர்கள் 6 பேரின் போட்டோக்களை கிராஃபிக்ஸ் முறையில் மாற்றம்செய்து விளம்பரம் செய்துள்ளது.
அதேபோல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன தலைவர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முத்தமிட்டப்படி இருப்பது போன்று மற்றொரு விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த விளம்பரங்களை பெனட்டன் நிறுவனம் முக்கிய இடங்களில் வைத்துள்ளதோடு, உலகம் முழுவதும் இந்த விளம்பரத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் சர்ச்சையையும்,கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளும், தலைவர்களும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும், மேற்கொண்டு வேறு எங்கும் இந்த விளம்பரத்தை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
விளம்பரங்களில் இருக்கும் தலைவர்களின் படங்களை பயன்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெனட்டான் நிறுவனம் அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
Source : http://www.inneram.com/
No comments:
Post a Comment