Sunday, November 20, 2011

பேஸ்புக் ஒரு சாக்கடையா!

  சிறிது காலமாக பேஸ்புக் FACEBOOK இணையத்தளத்தில் பல்வேறு தகாத படங்களும், மக்களுக்குள் விரோதம் உண்டாக்கக் கூடிய கட்டுரைகளும் வருவதனைப் பார்க்க முடிகின்றது .இது பலருக்கும் வேதனை தரக் கூடியதாக உள்ளது.

பேஸ்புக் ஒரு புத்தகம். அதில் புனைப்பெயருடன் எழுதுபவர்கள் அதிகம். அந்த புனைப்பெயர்  தவறான தகவல்களை தருவதற்கும் இடமளிகின்றது. சில ஆண்கள்  பெண்கள் பெயரை வைத்துக் கொண்டு  பெண் மக்களுக்கு தொல்லை தருபவர்களாகவும், பெண்களுக்கு அவமானத்தினை தரும் செய்திகளை வெளியிட்டும் வருகின்றனர்.  இதனால் பலர்  பேஸ்புக்கில் சேர்வதற்கே அச்சமடைகின்றனர். எந்த ஒரு காரியத்திலும் நன்மையும் மற்றும் தீமையுமுண்டு. நமது குறிக்கோள் நம்மால் முடிந்த அளவு  நன்மை செய்ய வேண்டுமென்பதே.  பேஸ்புக் பலருக்கு ஒரு வடிகாலாகவுமுள்ளது . நமக்கு கிடைத்த சில நேரங்களை பேஸ்புக் வழியே நமக்கு தெரிந்த நல்ல செய்திகளை பரிமாறிக் கொள்கின்றோம் . பல அருமையான கட்டுரைகளை படித்து பயனடைகின்றோம்.பலரை தொடர்புகொண்டு நட்பினை வளர்த்துக் கொள்கின்றோம்.இதனால் உலகளவில் நட்பு வளர்கின்றது.
கெட்ட புத்தி கொண்ட மக்களின் நடவடிக்கைகளுக்கு நாம் பயந்து ஓட வேண்டியதில்லை

 யார் சாக்கடையை சுத்தம் செய்வது ! அறிவாளியின் வீட்டிலும் சாக்கடை உண்டு. சாக்கடைக்கு பாரபட்சம் தெரியாது மனித மனதுக்குள்ளே எத்தனை சாக்கடைத் துளிகள். துணியை துவைத்து சுத்தம் செய்வது போல் மனதில்
எழும் எண்ணங்கள் சுத்தம் செய்வதற்கே நல்ல உபதேசங்களைக் கேட்பதும் அறிவினை கல்வியினால் தீட்டிக் கொள்வதும் இறைவனை நாடி அவன் அருள் நாடுவதும் இயல்பு.
.
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

No comments: