Monday, November 20, 2017

மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று

என் எழுத்துக்கள் பேச்சுக்கள் செயல்கள் சிந்தனைகள் பொதுவானவையே அனுபவம் சார்ந்தவையே இதில் சார்பு யென்பதே கிடையாது அதில் எனக்கு உடன்பாடேயில்லை
சார்பென்பது சுயநலத்தையும் எதிரியையும் உண்டாக்குமே தவிர ஒருபோதும் நிம்மதியையும் நல்லெண்ணத்தையும் தரவே தராது
இதை புரியாதோரை நான் நட்பில் வைப்பதேயில்லை
மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று

மதுரை மண் சார்ந்த கிராமத்தில் வளர்ந்து வந்தவனென்ற முறையில் யாவரோடும் யதார்த்தமாய் பழகி வாழவே விரும்புவன் நான்
கஷ்டப்பட்ட காலத்தில் எங்கள் வீடு மட்டுமே முஸ்லீம் வீடு சுத்தியும் கள்ளர் இனமக்களும் சேர்வையின மக்களும் நாயக்கர் இனமக்களும் செட்டியார் இனமக்களும் தேவர் இனமக்களும் இருந்த தெரு எங்கள் தெரு முஸ்லீம் தெருயென தனித்தனியாகவும் இருந்தது இப்பவும் இருக்கு
கஷ்டங்களிருந்து தலையெடுத்து வீடு செப்பனிடும் போது ...எங்கள் சொந்தக்காரர்கள் எங்கம்மாவிடம் சொன்னார்கள் ..பேசாம வீட வி்த்துட்டு நம்மாளுக இருக்க தெருவுல புதுசா வீட கட்டலாமே இதப்போயி செப்பனிடமாயென்று ...அதற்கு அம்மா
தந்த பதில் இதுதான் ...........
எங்களுக்கு உங்களவிட இவங்க தான் அதிக சொந்தம் எங்கள் சிரமங்களோடு பங்கெடுத்து வாழ்ந்தவர்களும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இவங்களே அதனால இங்க தான் நாங்க வீடு கட்டி வாழ்வோம் இதுதான் நிம்மதி எங்களுக்கு..யென்று
அம்மா காலம்வரைமட்டுமல்ல ...இன்றும் என்றும் நாங்கள் வாழ்வதும் பயணிப்பதும் இப்படியே.
குறையான சிந்தனையை தவிர்ப்பதே நிறைவான மனிதநேயத்தையும் தாராளமான உலகினையும் காண வழிவகுக்கும்.

Iskandar Barak

No comments: