Wednesday, November 8, 2017

ஆழ்மனப் பிரளயம் ....!*

சூழலின் சர்வாதிகார
கூர்முனைகள் சீண்டிப்பார்க்க
எத்தனிக்கும் தருணங்களை
தாண்டியடித்து பேரோட்டமாய்
ஓடிக் களைத்திடாமல்
காததூரம் சென்றபின்னும்

திரும்பிப் பார்க்கையில்
துரத்திவரும் துன்பம்
ஒரு நோக்கு நோக்குகையில்
துவண்டோடிவிடும்
சதிகார சந்தேகத்தின்
பிணையறுத்து முன்சென்று
முப்பொழுதும் நினைவினின்றும்
அகற்றிடவே ஆவனசெய்தும்
ஒட்டி உறவாட
முந்துகிறது முண்டியடித்து
பொறுமையெனும் ஆழ்கடலில்
நில்லாது அடிக்கும்
அலைகளும் சத்தியத்துக்கு
கட்டுக்குப்பட்டு
கரையை தழுவி நிற்கும்
என்றென்றும்
என்றாவது ஏற்படும்
பூகம்ப அதிர்வலைகள்
அலைக்கழிக்க
ஆழியலை விழுங்கிவிடும்
ஊரையும் உயிர்களையும்
ஆழ்மனதில் ஏற்படும்
பிரளயங்கள் மிரட்டும்
தூண்டுதலில் உண்டாகும்
துன்பத்தில் கரைத்தாண்டும்
நிலைவந்தாலும்
தன்னிலை பிறழாது
நின்று
நேருக்குநேர் நோக்கியதும்
தாழ்பணியும்
எப்பேர்ப்பட்ட காராட்டமும்
கரைந்தோடிடும்
ஏகன் அவன் கருணையினாலே

ராஜா வாவுபிள்ளை

No comments: