Thursday, November 30, 2017

இதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.

இதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.
காலம் விரைந்து கொண்டே இருக்கிறது. அதில் எத்தனை நிகழ்வுகள்......!
இப்படி எல்லாமே வந்து கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. அப்படிக் கடந்து போகையில் நல்லதோ கெட்டதோ, அதனதன் பாதிப்பை, விளைவை ஏற்படுத்திக் கொண்டேதான் செல்கிறது.......
..
நாம் இதுதான், இப்படித்தான் என்று எதிர்பார்த்து எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அது அது தானாக நடக்கிறது. கடந்து போகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நடப்பதற்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்வதே. அப்படித்தான் என்னை தயார்படுத்திக் கொண்டேன்......மனைவி, மகன், மகளின் உறுதுணையோடும், நண்பர் Richard Christopher , Pavithra Richard குடும்பத்தின் உள்ளார்ந்த அன்போடும் ஆதரவோடும்.
இதுவரை கடந்து போன வாழ்வின் நிகழ்வுகளைதிரும்பிப் பார்க்கிறேன். அங்கங்கே அர்த்தமின்றி தெரிந்தாலும், யோசித்துப் பார்த்தால் அவைகள்தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது.....இருள்தான் பகலை அர்த்தமாக்குவது போல்.
வாழ்தல் ஒரு வரம். அதுவும் இறைவன் கருணையால் வாழ்வது அதைவிடப் பெரிய வரம். அதுவும் ஒரு நல்ல துணையோடு வாழ்தல் மிகப் பெரிய வரத்திற்கும் மேல் ஏதோ ஒன்று.மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம் என்கிறார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை யாரோ ஒருவன் இருக்க வேண்டும். இருக்கிறான். என்னை வாஞ்சையோடு, கருணையோடு பார்க்கிறான்.
எல்லோருக்குமே இப்படி ஒருவன் இருக்க வேண்டும். இருக்கிறான்.
வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள்.
வாழ்வின் பல கணங்கள் அப்படியே யுகங்களாக நிலைத்து நீண்டு விடக்கூடாதா என்று ஒரு ஆசை. ஆனால் அது பேராசை. நடக்காது.
ஏனெனில், கணங்களைப் போல யுகங்களும் கடந்து போகும். ஆகவே கணங்களில், கணங்களில் மட்டுமே வாழ்தல் இனிது.
#கவிஞர்_அஸ்வின்

Gnanasekaran Veeriahraju

No comments: