Monday, December 4, 2017

ஆனந்தமாய் பறக்க வைக்கும்..

கற்பனை உலகம் வானத்தில் ஆனந்தமாய் பறக்க வைக்கும்..
கனவு கலைந்து எழும் போது படுத்திருப்பது தரையாக இருக்கலாம்..
வயசுக்கு மீறிய அறிவு சிலருக்கு இருக்கலாம்..
சிந்தனைகளின் அளவு சிறகு விரிக்கும் போது அதை தாங்கும் சக்தி மனதுக்கு வேண்டும்..
வயசுக்கு மீறி யோசிக்கும் போது ஏற்படும் பாதிப்பு உடம்பை தாக்குகிறது.
அதனால ஏற்படும் உபாதைகள் உடம்பை மட்டுமல்ல மனதையும் பாதிக்குது.அது நோய்களை உண்டாக்குது.

சிந்தனையின் சிறகுகள் எங்கெங்கோ பறந்தாலும் மறக்க நினைத்த நினைவுகளை சிந்தனையை விட்டு தூர விலக்குவது கடினமான ஒன்று தான்.இறை தியானங்கள் அதை கட்டுபடுத்த உதவும்.
தேவைகள் எல்லோருக்கும் இருக்கிறது..அவரவர் தகுதிக்கேற்ப அது வித்தியாசப்படுகிறது.
அத்தேவைகள் நாமாக ஏற்படுத்திய ஒன்று தான். அத்தேடல்கள் நமக்குள் ஒரு வேகத்தை தரவேண்டுமே தவிர அது வெறியாக மாறி விட அனுமதிக்கக் கூடாது..
மனதை அதன் போக்கில் விட்டு பழக்கும் போது அதை கண்ட்ரோல் பண்றது ரெம்ப சிரமமாகி விடும்..
காலங்கள் வேகமாக ஓடுகிறது.அதில் நம் நாட்களை சுருக்கிக் கொள்வதும்,நீட்டிக் கொள்வதும் மனங்களை பக்குவபடுத்துவதில் இருக்கிறது..
வாழ்க்கையில் போராட்டம் தேவை தான்.அந்த போராட்டம் நம் வாழ்வை என்றுமே முடக்கி விடுவதாக அமைந்து
விடக் கூடாது..
சித்திரங்கள் சுவற்றிலோ,
காகிதத்திலோ தீட்டலாம்..ஆனால்
அதை தீட்டுவதற்கு நமக்கு கையோ,காலோ ரெம்ப ரெம்ப அவசியம்..

Saif Saif

No comments: