Wednesday, December 13, 2017

வயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல்...

நசிஹா நேசன்

வயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல் ஏற்றிருந்த காதர்பாயின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது.
ஒரு கையில் தன்னுடைய மதியசாப்பாடு துக்குவாளியையும், மறுகையில் தான் மேய்த்துக்கொண்டிருக்கும் மாட்டின் முக்காணங்கயித்தையும் பிடிததுக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே தன்னுடைய மாடுகளுடன் பேசியபடியும் போய்க்கொண்டிருந்தார்.
காலையிலிருந்தே வெய்யிலில் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டே மாட்டை மேய்த்துக்கொண்டிருந்தால் களைத்துபோய் அந்த தென்னை மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டார்.
வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது

இயற்கை சூழ்நிலையையும்,வெக்கையையும் ஒருமுறை சாடி சபித்துவிட்டுப் மெல்ல வானத்தைப் பார்த்து நெட்டி முறிப்பதும், மழையை வேண்டுவதுமாக இருந்தார் காதர்பாய்..
வெப்பக் காற்று தென்னை ஓலைகளிலும்,மாமர இலைகளிலும் பட்டு தணிந்து குளிர்ந்து மேலாடை இல்லாத அவருடைய மேனியை வருடி சென்றது..
அந்த தோப்பிலிருக்கும் அத்தனை மரங்களும் அவருக்குத் தாய்மடிதான். தினமும் ஏதாவது ஒரு மர நிழலிலாவது சிறிதுநேரம் இளைப்பாற தன்னுடைய மாட்டை கட்டிப்போட்டுவிட்டு தானும் செத்த நேரம் அதே மரநிழலில் ஒக்காந்து இளைப்பாறி தன்னுடைய மனக்குறைகளையும் தன்னுடைய ஆதங்கங்களையும் தான் மேய்க்கும் மாட்டுடன் பேசி புலம்பியபடி இருப்பது வாடிக்கையாயிருந்தது காதர்பாய்க்கு..
ஆற்றாமையோடும் ஆச்சரியத்தோடும் காதர் பாயை பார்த்தேன்.
சிலுசிலுவென்று காற்றுக்கு தென்னைமர ஓலைகள் ஆடிக்கொண்டிருந்தன..அந்த மர நிழலில் காதர் பாயின் பேச்சை கேட்டபடியே அசைப்போட்டுக் கொண்டிருந்தது அவருடைய மாடு......
நசிஹா நேசன் 

No comments: