Tuesday, November 7, 2017

ஜின்னாவின் மனைவி

பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் ஜின்னா. ஆனால்...

 ஜின்னாவின் மனைவி

”கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

கண கணவென்று எரிந்து கொண்டிருந்த கணப்பில் கைகளைக் காண்பித்துச் சூடேற்றியவாறே கேள்வியை வீசினார் ஜின்னா. வீட்டுக்கு வெளியே மெல்ல மெல்லக் குளிர் டார்ஜிலிங் முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது. கொளுத்தும் பம்பாய் வெய்யிலிலிருந்து தப்பிக்க டார்ஜிலிங்கிலிருந்த நண்பர் தின்ஷா பங்களாவிற்கு வந்திருந்தார் ஜின்னா.

தின்ஷாவின் அப்பாதான் இந்தியாவில் முதன் முதலாக ஜவுளித் தொழிற்சாலையைத் துவங்கியவர்.  அவர் காலத்திலேயே மெல்ல மெல்ல வளர்ந்து ‘டெக்ஸ்டைல் கிங்’ ஆகிவிட்டது அந்தக் குடும்பம். பம்பாயின் பணக்கார பார்சிக் குடும்பங்களில் ஒன்று சர் தின்ஷாவின் குடும்பம். ஜின்னாவின் நண்பர்களில் அவரும் ஒருவர். அவரது டார்ஜிலிங் பங்களாவில் தங்க வந்திருந்தார் ஜின்னா. அப்போது தின்ஷாவும் குடும்பமும் அந்த பங்களாவில் தங்கியிருந்தது.


குடும்பம் என்றால் ஏழெட்டுப் பேரில்லை. தின்ஷாவிற்கு ஒரே மகள். ரத்தன்பாய். செல்லமாக ருட்டி.

கணப்புக்குள் கட்டைகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த தின்ஷா திரும்பிப் பார்த்தார். என்ன கேட்டீர்கள்?"

கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார் ஜின்னா மீண்டும்.

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைத்தானே சொல்கிறீர்கள். வரவேற்கிறேன். மதச் சண்டைகள் குறைவதற்கு அதைவிடச் சிறந்த வழி வேறு என்ன இருக்கிறது?" என்றார் தின்ஷா.

ஜின்னா புன்னகைத்தார். முப்பது நொடிகள் தின்ஷாவின் முகத்தைக் கண் கொட்டாமல் பார்த்தார். பின் புன்னகை மாறாமல் கேட்டார்: உங்கள் மகள் ருட்டியை எனக்கு மணம் செய்து கொடுப்பீர்களா?"

தின்ஷா திடுக்கிட்டார்.

இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஜின்னாவிற்கு வயது 40. ருட்டிக்கு 16. ஜின்னா முஸ்லிம். ருட்டி பார்சி.

மேலும் படிக்க பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் ஜின்னா. ஆனால்..

http://thisaigal.in/Home/subpage/16?id=16~272


No comments: