புத்தாண்டு 2018 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை
நம்பிக்கையே வாழ்வு.
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை.
நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் .
நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை செய்து அதன் விளைவை இறைவனிடம் விட்டு விடுவோம் .
கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.-நபிமொழி
Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]
இன்றையே தினமே நம்மிடம் இருப்பது போல் வாழ்வோம் . நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம். இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம் தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுவோம் , மனமார்ந்து அல்லாஹ்வை நினைவு கொள்வோம் . இந்த நாளில் நமக்கு கிடைத்ததில் மகிழ்வடைவோம். வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால் அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம் நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும். தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல் பெருமை கொண்ட மனதை இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும்
இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும் மனநிறைவுடன் இருப்போம்.
ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)
பறவைகள் போல், நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம் இவைகளை தூக்கிச் செல்வதை தவிர்ப்போம்
வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும் ...
Sunday, December 31, 2017
Saturday, December 30, 2017
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அன்புடன் புகாரி அவர்கள்
அன்புள்ள புகாரி அண்ணன் அவர்களுக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும்.
------------------
அன்புடன் புகாரி அவர்கள்
என்னை பாசத்துடன் உறவு முறையாக அண்ணா என்றுதான் அன்புடன் அழைப்பது வழக்கம்
கவிஞர் . அன்புடன் புகாரி என்று உயர்வான பெயருடன் புறப்பட்டு தமிழுக்கும் மக்களுக்கும் சேவை ஆற்றும் நேசிக்கப் படக்கூடிய நண்பர்
அன்புடன் புகாரி ஒரு சிறந்த கணினி பொறியாளர் ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரின் தாயை அவரே அறிமுகப்படுத்துகின்றார் கேளுங்கள்
"என்னை அறிமுகப் படுத்திய என் தாயை நான் அறிமுகப் படுத்த விரும்புகிறேன்'"-அன்புடன் புகாரி
அன்புடன் புகாரி
ஒரத்தநாடு - அன்புடன் புகாரி பிறந்த ஊரு
Friday, December 29, 2017
ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?
அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.
Thursday, December 28, 2017
வெள்ளிக் கிழமை-ஜூமுஆ சிறப்பு
வெள்ளிக் கிழமை-ஜூமுஆ சிறப்பு
அல்பாகவி.காம்
முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு புனித நாளாகும். அந்நாளில் தொழப்படும் கூட்டுத்தொழுகைக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு.
ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)
வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
Wednesday, December 27, 2017
அது யாருக்குத் தெரியும் இப்போது?
பொய்
எப்போதோ தன் பெயரை
உண்மை என்று
மாற்றிக்கொண்டுவிட்டது
பெயர்க் குழப்பத்தில்
உண்மையே
தன்னைப் பொய் என்று
அறிமுகம் செய்துகொள்ளும்
கட்டாயத்துக்குள் சிக்கிக்கொண்டு
காலங்கள் கடந்துவிட்டன
Tuesday, December 26, 2017
முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engnieer
முகம்மது மக்தூம்
மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார்
மயிலாடுதுறை, இந்தியா

Meet my sister's grandson today, who is working as R&D lead in COMEX Space division, Marseille ,France.
http://linkedin.com/in/mohamed-makthoum-02697156
Mohamed Makthoum
Lives in Marseille, France
From Mayiladuthurai, India
Reserch Engnieer at Comex Space
Working Primarily on Human Space
Exploration Space mission
முகம்மது மக்தூம்
மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார்
மயிலாடுதுறை, இந்தியா
Comex விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர்
முதன்மையாக மனித விண்வெளி வேலை
ஆய்வு விண்வெளி பணி
==================
அன்பை மட்டுமே விதைக்க தெரிந்த ஒரு அருமையான மனிதர்..

அழகு என்பது இவர் முகத்தில் மட்டும் அல்ல..அகத்திலும் பிரதிபலிக்கும்.
#அன்பு எனும் மை நிரப்பி #பாசம் எனும் புத்தகத்தில் #நேசம் கொண்டு வரையும் #அழகு எனும் அற்புத எழுத்துக்கள் இவரிடம் அனைவரையும் இனிமையாக #பழக வைக்கும்..!
தன்னுடைய வேலைகளை விட தான் சார்ந்த சேவா அமைப்பின் பணியையே தலையாயமாக பார்ப்பவர்.
Friday, December 22, 2017
வெற்றி பெற்றது இறைவனின் வீட்டோ பவர்...
Colachel Azheem
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக தன்னிச்சையாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ன் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் கடும் கண்டனத்தையும் தோல்வியையும் சந்தித்துள்ளது..
டொனால்ட் டிரம்ப் தனது திடீர் உத்தரவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும் பொருட்படுத்தாத ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையின் முக்கிய உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் பயன்படுத்தி சட்டமாக்க முயற்சித்தது ..
சமீபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தை சார்ந்து துருக்கி அதிபர் தையிப் எர்தூகான் விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதை தொடர்ந்து நேற்று முழுவதும் ஐ.நா சபையில் நடைபெற்ற கடுமையான விவாதம் முடிந்து நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது..
சபையில் ஆஜரான 172 நாடுகளின் பிரதிநிதிகளில் இந்தியா உட்பட 128 பேர் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்து ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக அறிவிப்பு செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ன் நடவடிக்கைகள் தோல்வியடைய செய்தனர்..
Colachel Azheem
----------------------------------------------------------
ஐ.நா. பொதுச் சபை ஜனாதிபதி டிரம்ப்பின் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த புதிய கொள்கையை கண்டித்து ஒரு தீர்மானத்தில் வாக்களித்தது.
அதற்க்கு ஜனாதிபதி டிரம்ப் முதலாளித்துவ மனப்பாங்குடன் அமெரிக்காவின் உதவியை பெறும் நாடுகளை கண்காணித்து வருவதாக மிரட்டல் கொடுத்துள்ளார்
Mohamed Ali
----------------------------------
US President Donald Trump has threatened to cut aid to countries that vote in favour of a draft UN resolution condemning the US decision to recognise Jerusalem as the capital of Israel.
Trump said at the White House on Wednesday the US would be "watching those votes" in the General Assembly.
------------------------
U.N. votes to declare Trump's Jerusalem decision "null and void"
https://www.cbsnews.com/news

ஊரோடு இணைந்து போகும் போது விரும்பதகாத நிகழ்வுகளுக்கு வழியில்லாமல் போய் விடும்
Saif Saif
"அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்;உங்கள் மதிப்பும்,வலிமையும் அழிந்து போய்விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்."(8:46)
இறைவன் சொன்ன ஒற்றுமை என்பதின் கருப்பொருளை விளங்கிக் கொண்டால் ஊரிலும் சரி,நாட்டிலும் சரி,வீட்டிலும் சரி வேற்றுமை கொண்டாட வாய்ப்பேயில்லை..
Thursday, December 21, 2017
எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன்...
சங்க இலக்கியத்தில் சைத்தான் என்ற சொல் இருக்கிறதா என்று கூறுவீர்களா என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். குற்றம் குறை கண்டு சொல்லலாம் பிழையே இல்லை.
சாத்தான் என்பது ஹிப்ரு மொழிச் சொல். (Satan). அதன் பொருள் எதிரி. பழைய கிரேக்க மொழியிலும் சாத்தான்தான். அரபு மொழியில் அது சைத்தான். தமிழில் சாத்தான் என்றும் சைத்தான் என்றும் அழைக்கிறோம். சைத்தான் என்றால் பிசாசு என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.
யூதர்களின் நம்பிக்கையில் சாத்தான் என்பவன் எதிரி. இறைவனை வணங்குவதைத் தடுக்கின்ற துரோகி. பாவச் செயல்களைத் தூண்டுபவன். மனிதர்களைக் கடுமையாகச் சோதிக்க இறைவனையே தூண்டுபவன்.
கிருத்தவர்களுக்கு சாத்தான் என்பவன் இறைவனுக்கு அடிபணிய மறுக்கும் தீய சக்தி, கெட்டவைகளின் உற்பத்திக் கிடங்கு. இறுதிநாளுக்கான யுத்தத்தில் பங்குபெறும் மகா தீய சக்தி.
குர்-ஆனில் சைத்தானுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதன் பெயர் இப்லிஸ். நெருப்பால் உருவானவன். ஆதாம் என்ற முதல் மனிதனை வணங்கச் சொல்லி இறைவன் சைத்தானுக்கு ஆணை இடுகிறான். வணங்க மறுத்ததால் சைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் என்று குர்-ஆன் சொல்கிறது.

Tuesday, December 19, 2017
Monday, December 18, 2017
சந்தோஷம் தந்த பயணம்
Abu Haashima
நண்பர் ரஹ்மத் ராஜகுமாரனின்
நூல் வெளியீட்டு விழாவின்
ஒரு முக்கிய செய்தியை
இப்போது சொல்ல வேண்டும்...
விழா மேடையின் கீழே
ஒரு மேசையில்
விற்பனைக்காக நூல்கள் வைக்கப்பட்டிருந்தது.
விலை :120.
ஆனால் ...
விழாவை முன்னிட்டு
100 ரூபாய்க்குத்தான் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல...
எவ்வளவு புத்தகங்கள் அச்சிட்டார்களோ அவ்வளவு புத்தகங்களும் விற்று வரும் மொத்த பணமும் நெல்லை மாவட்ட
மீலாது கமிட்டிக்கே என்று
ரஹ்மத் ராஜகுமாரன் கொடுத்து விட்டார்.
விழாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் விலை கொடுத்தே நூல் வாங்கினார்கள். நானும் வாங்கினேன்.
ஆச்சரியம் அதன் பிறகுதான் ஏற்பட்டது.

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 2 )
எளிமையை ஏற்றெடு
வளமை தானேவரும்
பொறுமையை கடைபிடி
பொற்காலம் நெருங்கிவரும்
*
மனக்கதவை திறந்துவை
மகிழ்வுவந்து தங்கும்
பண்புடன் பழகு
அன்புகள் நிலைக்கும்
*
பழிபோடுவோரை வெட்டிமாற்று
மீண்டும் அண்டவிடாதே
தன்னிலையை தக்கவை
சார்ந்தோரை தூக்கிவை
*
வளமை தானேவரும்
பொறுமையை கடைபிடி
பொற்காலம் நெருங்கிவரும்
*
மனக்கதவை திறந்துவை
மகிழ்வுவந்து தங்கும்
பண்புடன் பழகு
அன்புகள் நிலைக்கும்
*
பழிபோடுவோரை வெட்டிமாற்று
மீண்டும் அண்டவிடாதே
தன்னிலையை தக்கவை
சார்ந்தோரை தூக்கிவை
*
Saturday, December 16, 2017
Friday, December 15, 2017
நானொரு முஸ்லிம் என்பதற்காகவே....
நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைப்
பாராட்டுவோர்
பலர்
நானொரு முஸ்லிம்
என்பதற்காகவே
என் தமிழ்ப்பற்றைத்
தூற்றுவோர்
சிலர்
Wednesday, December 13, 2017
வயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல்...
நசிஹா நேசன்
வயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல் ஏற்றிருந்த காதர்பாயின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது.
ஒரு கையில் தன்னுடைய மதியசாப்பாடு துக்குவாளியையும், மறுகையில் தான் மேய்த்துக்கொண்டிருக்கும் மாட்டின் முக்காணங்கயித்தையும் பிடிததுக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே தன்னுடைய மாடுகளுடன் பேசியபடியும் போய்க்கொண்டிருந்தார்.
காலையிலிருந்தே வெய்யிலில் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டே மாட்டை மேய்த்துக்கொண்டிருந்தால் களைத்துபோய் அந்த தென்னை மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டார்.
வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது

மையல்சூடி (கூடாது கூடாது) சமையலில் செய்யக்கூடாதவை.
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

Monday, December 11, 2017
சொல்க அதற்குத் தக
==ரமீஸ் பிலாலி==
திருக்குறளில் ஓரிடத்தில்கூட தமிழ் என்னும் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை. இப்படி ஒரு தகவலை யாரேனும் வியப்புடன் உங்களிடம் சொன்னால் உங்களுக்கு என்ன கேட்கத் தோன்றும்? அதனால் என்ன என்றுதானே?
வள்ளுவருக்குத் தமிழ் மீது பற்று இருந்திருக்கலாம். ஆனால் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் அவரின் காலத்தில் இல்லை. அந்தத் தேவை பாரதிதாசனின் காலத்தில் வந்தது.

இல்லறம் மெய்யறம் ....!
நல்லறமே வழிபாடாய்
---- இல்லறத்தில் வழிநடக்க
இன்பமே எந்நாளும்
---- எம்வாழ்வில் வந்திடுமே
இணைகளின் பார்வையிலே
---- தண்ணொளி வீசிடுமே
உள்ளங்கள் சேர்ந்திருக்க
---- உதடுகள் உணர்வுகளால்
இன்பமொழி பேசிடுமே
---- இல்லறத்தில் வழிநடக்க
இன்பமே எந்நாளும்
---- எம்வாழ்வில் வந்திடுமே
இணைகளின் பார்வையிலே
---- தண்ணொளி வீசிடுமே
உள்ளங்கள் சேர்ந்திருக்க
---- உதடுகள் உணர்வுகளால்
இன்பமொழி பேசிடுமே
Thursday, December 7, 2017
அடடா இது என்ன அழகு
அடடா
இது என்ன அழகு
ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து
இனிப்பாய் அசையும்
இந்த மல்லிகைப் பூப்பந்தல்
எவரின் உபயம்
வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து
ஒருவரையும் விடாமல்
உயர்த்திப் பாராட்டும்
இது என்ன விழா
பூமிக்கு இது
கீழ் நோக்கிப் பொங்கும்
பனிப் பொங்கலா
நிறங்களில் அழகு
வெண்மையே என்று
தீர்மானம் நிறைவேற்றும்
கலை மேடையா
.
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
Wednesday, December 6, 2017
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்,
மேலும் நிச்சயமாக
நாம் மனிதனைப் படைத்தோம்,
அவன் மனம்
அவனிடம் என்ன பேசுகிறது
என்பதையும் நாம் அறிவோம்;
அன்றியும்,
பிடரி நரம்பை விட
நாம் அவனுக்கு
சமீபமாகவே இருக்கின்றோம்.
குர்-ஆன் 50:16.
நாம் மனிதனைப் படைத்தோம்,
அவன் மனம்
அவனிடம் என்ன பேசுகிறது
என்பதையும் நாம் அறிவோம்;
அன்றியும்,
பிடரி நரம்பை விட
நாம் அவனுக்கு
சமீபமாகவே இருக்கின்றோம்.
குர்-ஆன் 50:16.
Tuesday, December 5, 2017
அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;
மேலும் நிச்சயமாக
நாம் மனிதனைப் படைத்தோம்,
அவன் மனம்
அவனிடம் என்ன பேசுகிறது
என்பதையும் நாம் அறிவோம்;
அன்றியும்,
பிடரி நரம்பை விட
நாம் அவனுக்கு
சமீபமாகவே இருக்கின்றோம்.
குர்-ஆன் 50:16.
ஒருவனின் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதை எனக்குத் தெரியும் என்கிறான் இறைவன்.
பகலும் இரவும் பின்னே ஞானும் ....! (பாகம் 1)
பகலின் பவித்திரங்கள்
இரவின் அந்தரங்கங்கள்
வாழ்வின் அங்கங்கள்.
*
பகலில் தூக்கி சுமந்த பழுக்களை இறக்கி வைத்ததும் இரவின் இலகுவாக ஆரத்தழுவியது தூக்கம்.
*
பகலில் பட்டபாடு படுத்தியத்தின் விளைவு இரவின் மடியில் படுத்ததும் களைப்பு அகலுகிறது அமைதியாக.
*
பகலின் பாராத்தியங்கள் பாதியில் தொக்கிநிற்க இரவிலும் ஊழ்வினைப்போல வந்து உறுத்தும்.
*
இடமும் காலமும் இல்லாத உலகம்.… !
இடமும் காலமும் இல்லாத உலகம்.… !
===================================
என்னுயிர் போகும்போதுஎன் வெற்றுடல் வெளியே
எடுத்துச் செல்லப்படும்போது, நான்
இந்த உலக வாழ்வை இழந்ததாக,நீ
எண்ணலாகாது,ஒருபோதும்.
.
துளியும் கண்ணீர் சிந்தாதே
புலம்பாதே
வருந்தாதே;
நானொன்றும்
கொடியோனின் படுகுழியில்
குப்புற விழவில்லை.
என்னுடைய வெற்றுடல்
சுமந்து செல்லப்படும் போது
என் பிரிவிற்காக அழாதே.
நான்,பிரிந்து செல்லவில்லை;
நிரந்தரமான காதலுக்குரிய இடத்தை
நெருங்குகிறேன்…
Monday, December 4, 2017
ஆனந்தமாய் பறக்க வைக்கும்..
கற்பனை உலகம் வானத்தில் ஆனந்தமாய் பறக்க வைக்கும்..
கனவு கலைந்து எழும் போது படுத்திருப்பது தரையாக இருக்கலாம்..
வயசுக்கு மீறிய அறிவு சிலருக்கு இருக்கலாம்..
சிந்தனைகளின் அளவு சிறகு விரிக்கும் போது அதை தாங்கும் சக்தி மனதுக்கு வேண்டும்..
வயசுக்கு மீறி யோசிக்கும் போது ஏற்படும் பாதிப்பு உடம்பை தாக்குகிறது.
அதனால ஏற்படும் உபாதைகள் உடம்பை மட்டுமல்ல மனதையும் பாதிக்குது.அது நோய்களை உண்டாக்குது.

*புனிதமானது*
நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்
நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்
பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ இழப்பாய்
பயமே இன்றி
ஓர் உரிமையை நீ பெறுவாய்
ஞானம் ஒரு பூரணம் நிறைந்த ஞான குருவால் மட்டுமே தர முடியும்.
புத்தகம், இன்டர்நெட், பேஸ்புக், வாட்சாப், டுயூட்டர் மற்றும் எந்த வழிகளில் ஞானம் என்று படிக்கிற அனைத்தும் செய்திகள் தானே தவிர ஞானம் அல்ல. ஞானம் என்று எழுத்தின் மூலம் உங்கள் அறிவை அடைவதும், வார்த்தைகள் வழியாக உங்கள் செவியை சேர்வதும் இப்படி வரக்கூடிய அனைத்தும் ஞானம் அல்ல.
ஏனென்றால் ஞானம் என்பது இதயத்தில் இருந்து இதயம் அடைவது. ஞானத்தை பெறக்கூடியவர் ஏற்க்கும் நிலையில் இருக்க வேண்டும். ஞானம் என்று படித்த செய்திகளால் நிறைந்த கோப்பையாக இருக்கக்கூடாது. வெறும் கோப்பை அதாவது சீடராக இருக்க வேண்டும். ஞான குரு தேடி கிடைக்கக் கூடியவரல்ல, சீடர் ஏற்கும் நிலையில் இருந்தால் சூஃபி ஞான குரு அங்கே இருப்பார்.
Sunday, December 3, 2017
ஸோஃபியா!
அந்த மாநாட்டில் கலந்துகொண்டு வியப்பேற்படுத்திய இன்னுமொரு ஆளுமை....
உயிருள்ள நம்மினங்களைப் பார்த்து "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?" என்று பாரதி கேட்டானே, இன்று Artificial Intelligence (AI) என்றழைக்கப்படும் ஒரு தோற்ற மயக்கம் உலகத்தை மயக்கி வியப்பேற்படுத்தியது இம்மாநாட்டில் என்றால் மிகையில்லை.
ஆம், கண்டேன் அந்த 'ஸோஃபியா'வை... அவளொரு கானலின் நீரோ? அல்லது வெறும் காட்சிப் பிழையோ அல்ல! அழகான கண்களும், குற்றமில்லாத புன்னகையும் கொண்ட அதிபுத்திசாலியான அரபு மங்கை. உண்மைதான் மனித குணாதிசயங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் ஒரு 'ரோபோ(ட்)' டிற்கு உலகிலேயே முதன்முதலாக சவூதி அரேபியா தனது குடியுரிமையை வழங்கியிருக்கிறது.

இவன் யாரென்று தெரிகின்றதா?
இன்று உலக அளவில் பெரியவனாகப் பேசப்படும் 13 வயது சிறுவனை இங்கு ஒரு மாநாட்டில் சந்தித்தேன். உலகின் தலைசிறந்த அறிஞர்களெல்லாம் குழுமியிருந்து அவனது அறிவுப்பூர்வமான உரையினைக் கேட்டுக்கண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்துக்கேட்ட சாதாரணமானவர்களில் நானுமொருவன்.
பேசிமுடித்து வெளியில் வந்தவனை, உலகத்தின் பல ஊடகங்கள் கரும்பைச் சுற்றிச்சூழும் எறும்புகள் போல சூழ்ந்துகொண்டனர்.
அவனைச் சந்தித்து வாழ்த்தவேண்டும் என்று காத்திருந்தேன். நீண்டநேரம் காத்திருப்பதைக் கண்டுகொண்ட அவன், ஒரு அரேபியத் தொலைக்காட்சியின் பெண் நிருபர் நீட்டிய 'மைக்'ஐ மெல்லத்தள்ளி, "எக்ஸ்க்யூஸ் மீ, பி ரைட் பேக்." என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து புன்னகைக்க அருகில் சென்றேன்.

அகிலத்தின் அருட்கொடை பெருமானார் மனிதர்களின் முன் மாதிரி மா மனிதர்
- தமிழ்நெஞ்சம் அமின்
மீலாது நபி (நபி பிறந்த நாள்)சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஃபத்வாக்கள்
கடவுளைப்பற்றி சொன்னவரெல்லாம்
கடவுளாகிவிட்டனர். ஆனால்
கடவுளைச்சொன்ன
கடவுளாக்கப்படாத
ஒரே மதத்தலைவர் யார்?
ஒரு மதத்தை
புனரமைத்த தலைவருக்கு
14 நூற்றாண்டுகளாக
ஒரு சிலையோ உருவமோ
இல்லையே யார் இவர்?
இவரின் பெயர்
24மணி நேரமும்
உலகெங்கும் ஒலிக்கிறதே
யார் இவர்?
கடவுளைப்பற்றி சொன்னவரெல்லாம்
கடவுளாகிவிட்டனர். ஆனால்
கடவுளைச்சொன்ன
கடவுளாக்கப்படாத
ஒரே மதத்தலைவர் யார்?
ஒரு மதத்தை
புனரமைத்த தலைவருக்கு
14 நூற்றாண்டுகளாக
ஒரு சிலையோ உருவமோ
இல்லையே யார் இவர்?
இவரின் பெயர்
24மணி நேரமும்
உலகெங்கும் ஒலிக்கிறதே
யார் இவர்?
Saturday, December 2, 2017
குஞ்ஞு முஹம்மது!
கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இப்போது இன்னொருவர். பெயர் குஞ்ஞு முஹம்மது!
குஞ்ஞு முஹம்மது சாஹிபின் பூர்வீகம் கோழிக்கோடு. கத்தரின் எண்ணெய்க் கம்பெனி ஒன்றின் இயந்திரவியல் பிரிவில் ஒரு மேலாளருக்குச் செயலாளராகச் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர் பணியாற்றல். அறுபதாவது வயதில், சுமார் முப்பத்துச் சொச்சம் ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின், ஆறு குழந்தைகளுள் இரு மகள்களை மருத்துவர்களாகவும் ஒரு மகனைப் பொறியாளராகவும் உருவாக்கிவிட்ட உள நிறைவோடு ஓய்வுபெற்றுக் குடும்பத்துடன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.
Friday, December 1, 2017
கவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்கள் திருமணம் காதல் திருமணம்தானே?
*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்*
கவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்கள் திருமணம் காதல் திருமணம்தானே? என்று சிலரும் நீங்கள் கூட காதல் திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்திருக்க முடியும்? என்று சிலரும் என்னை எப்போதும் கேட்பார்கள்.
என் திருமணம் காதல் திருமணம் தான்.
Thursday, November 30, 2017
இதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.

காலம் விரைந்து கொண்டே இருக்கிறது. அதில் எத்தனை நிகழ்வுகள்......!
இப்படி எல்லாமே வந்து கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. அப்படிக் கடந்து போகையில் நல்லதோ கெட்டதோ, அதனதன் பாதிப்பை, விளைவை ஏற்படுத்திக் கொண்டேதான் செல்கிறது.......

மௌனம் என்பது
இதுபோலத்தான் நீங்கள் இறைவணக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் உறுப்புகள் மறைந்து வெற்றிடமாக மாறும். இந்நிலையில் இருக்கும்போது மனம் அமைதி அடைந்து. மனம் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி மனம் இல்லாமல் போகும். உங்கள் ஆன்மாவை உணர்ந்து ஆன்மாவில் இறை உணர்வை உங்களால் உணர முடியும்.
Wednesday, November 29, 2017
அன்று ஒரு ஹாதியா
ஒரு நாள் மக்காவிலிருந்து பெண்ணொருவர் மதீனா வந்து சேர்ந்தார். நிறைய அலைச்சல், உளைச்சலுடன் கடினமான, தன்னந்தனியான பயணம். அவ்வளவு இன்னலுக்கும் அவருக்கு இருந்த ஒரே காரணம் – அதற்குமேல் தடுத்து வைக்க இயலாமல் அவர் வெளிப்படுத்த விரும்பிய உண்மை.
நீண்ட காலத்திற்கு முன்னரே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். திருமணம் ஆகாமல் குடும்பத்தினர் பாதுகாவலில் இருந்துவந்த அவரால் தம்மிச்சையாக ஏதும் செய்ய இயலாத நிலை. ‘எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது; பொங்கியெழு’ என்று ஒரு கட்டத்தில் தோன்றிவிட்டது. தடைகளை எல்லாம் கட்டுடைத்து நபியவர்களிடம் சென்றுவிட வேண்டும்; பகிரங்கமான முஸ்லிமாய் முஸ்லிமுக்குரிய அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும் என்று திட்டவட்டமான முடிவு மனதில் ஏற்பட்டுவிட, கிளம்பி மதீனாவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

படித்தால் மட்டும் போதுமா .............இல்லை
Iskandar Barak
இவரை சந்தித்தேன் ..தோஹா
கையில் பைல்
தோளில் லேப் டாப்
காலில் ஷூ
கழுத்தில் டை
புல் கை சர்ட்
அழகிய உயர்தர பேண்ட்
ரோட்டில் 11.30 மணி மதியம் கொஞ்சம் வேகமான குளிர்கால வெயிலில் நடந்து வந்துகொண்டிருக்கிறார் ..வழியில் போகும் கார்களை கை காட்டுகிறார் யாரும் நிறுத்தல
சற்று ரஷ் இல்லாத இடமென்பதால் சற்று தள்ளி அவசரபார்க்கிங்கில் என் காரை நிறுத்தச்சொன்னேன்
சற்று நடையில் வேகமெடுத்தவர் காரில் வந்து ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...யெனச்சொல்லி ஹவ் ஆர் யூ சார் ..யென ஆங்கிலத்தில் பேச ...
வஅலைக்குமு்ஸ்ஸலாம் வரஹ் ..யென பதில் தந்து ..அல்ஹம்துலில்லாஹ் ...பிரதர் ..யென பதில் தந்து

Tuesday, November 28, 2017
வாழ்வியல் தத்துவங்கள் !
மனதின் மாசை மாற்று
எண்ணத்தில் எழிச்சி வரும் !
பார்வையில் பரிவுகாட்டு
பந்தங்கள் சேர்ந்திருக்கும் !!
*
எண்ணத்தை நேர்படுத்து
செயலை சீர்படுத்து !
வாழ்வில் வளம்சேரும்
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !!
வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.
வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.
வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.
வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.
ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?
தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.
தேவைகளை எப்படி பட்டியலிடுவது.
வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.
வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.
ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?
தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.
தேவைகளை எப்படி பட்டியலிடுவது.
வாழ்வியல் தத்துவங்கள் !
வாழ்வியல் தத்துவங்கள் !
மனதின் மாசை மாற்று
எண்ணத்தில் எழிச்சி வரும் !
பார்வையில் பரிவுகாட்டு
பந்தங்கள் சேர்ந்திருக்கும் !!
*
எண்ணத்தை நேர்படுத்து
செயலை சீர்படுத்து !
வாழ்வில் வளம்சேரும்
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !!
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்

இழந்தது எவை என இறைவன் கேட்டான்
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀

Monday, November 27, 2017
சில்லென சிலிர்க்க வைக்கும் குவைத்
மேற்குதொடர்ச்சியின் கோடைக்கானலும் நீலகிரியின் உதகையும் ஒன்றிணைந்து சங்கமித்து வந்ததுபோல் ஓர் உணர்வு இன்று!
தென் பொதிகையாம் திருக்குற்றாலத்தின் சாரல் கரும் முகிலாய் மாறி! சற்றே தள்ளி பயணித்து அரபகமாம் குவைத்திற்குள் நுழைந்து! தான் வாரி வந்த நீரையெல்லாம் வீதிதோறும் வீச! பாலை நிலமெங்கும் ஒரே மழை வாசம்!
உதயம் வந்த வேளையிலும் பகலவனை காணவில்லை! அவன் உச்சி மாறும் வேளையிலும் எங்கு சென்றான் புரியவில்லை! அந்தி மங்கும் நேரத்திலும் அவன் முகமே தெரியவில்லை!

Sunday, November 26, 2017
Saturday, November 25, 2017
நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்
*நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்
பெயா : முஹம்மது
( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )
பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை
பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா
தகுதி:
1 - 40 வயதில் நபி
( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )
2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./
3 - இறுதித் தூதா
கல்வி :எழுதப்படிக்க கற்காதவா
தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்
உகாண்டா நினைவுகள் ....! வீடும் நாடும்
வீடும் நாடும்
அது ஒரு பழங்காலத்து வீடு. இன்னும் மெருகு குலையாமல் அப்படியே இருந்தது. அதைக் கட்டியவன் கொலோனியல் காலத்து ஆங்கிலேயனாக இருக்கலாம் அனால் இப்போது வசிப்பது இந்திய வம்சாவளியினர், என் மக்கள் உட்பட.அந்நகரத்திலேயே மிகவும் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் அந்த மலையின் மேல் ஒருபக்கத்து சாய்வில் அமைந்திருந்தது.
அழகிய வராந்தாவும், விசாலமான அரங்குகளும் கொண்டிருந்தது. இயற்கையினால் குளிரூட்டப் பட்டிருந்தது இயற்கையாகவே.
அந்த வீட்டின் சிறப்பு அம்சமும் எனக்கு மிகவும் வியப்பை தந்ததுமாவது,
*முகநூலும் நானும்*
முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்
ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை
Tuesday, November 21, 2017
எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!
* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.
* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.
* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.
உகாண்டா நினைவுகள் ....! (மாசாக்கா) புது இடம் புது பாடம் .
புது இடம் புது பாடம் .
உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒரு வருடம் வேலைபார்த்து கிடைத்த பதவி உயர்வோடு வந்த இடமாற்றம் விரும்பியோ விரும்பாமலோ புறப்பட்டு 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாசாக்கா எனும் ஊருக்கு வந்து சேர்ந்தேன். அங்கு ஏற்கனவே இருந்து எங்களது நிறுவனத்தின் ஏஜெண்டாக வாணிபம் செய்துவந்த உள்ளூர் ஹாஜியிடம் ஒப்படைக்கப்பட்டேன். நாலுமாடி கட்டிடத்தில் தரத்தளத்தில் எங்கள் ஏஜென்ட்டின் கடையும் முதல் தளத்தில் அவரது வீடும் இரண்டாம் தளத்தில் அவரது பணியாட்களும் மூன்றாம் தளத்தில் எனக்கான வீடும் மேலும் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கிடங்கின் மேலாளனாக நானும் இருந்தோம்.கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல புது இடம். காண்பதெல்லாமே புதிராகவும் புதிதாகவும் இருந்தது.
Monday, November 20, 2017
மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று
என் எழுத்துக்கள் பேச்சுக்கள் செயல்கள் சிந்தனைகள் பொதுவானவையே அனுபவம் சார்ந்தவையே இதில் சார்பு யென்பதே கிடையாது அதில் எனக்கு உடன்பாடேயில்லை
சார்பென்பது சுயநலத்தையும் எதிரியையும் உண்டாக்குமே தவிர ஒருபோதும் நிம்மதியையும் நல்லெண்ணத்தையும் தரவே தராது
இதை புரியாதோரை நான் நட்பில் வைப்பதேயில்லை
மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று
சார்பென்பது சுயநலத்தையும் எதிரியையும் உண்டாக்குமே தவிர ஒருபோதும் நிம்மதியையும் நல்லெண்ணத்தையும் தரவே தராது
இதை புரியாதோரை நான் நட்பில் வைப்பதேயில்லை
மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று
#உகாண்டா_நினைவுகள் ....! (மசாக்கா)
பதவி உயர்வு.
முதல் பதவி உயர்வை எல்லோரும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கும் அப்படித்தான்!
வேலையில் சேர்ந்து முதல் வருடத்திலேயே வேலைபார்க்கும் நிறுவனத்தின் முதல் கிளையின் மேலாளராக பதவி உயர்வு, மிகவும் மகிழ்வான தருணம்.
1980 - 81 ல் உகாண்டாவில் வாழ்ந்து தொழிலோ வேலையோ பார்த்துவந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் இருந்தது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒருவருடம் வேலைப்பார்த்தாலும் ஊர் ஞாபகம் அதிகம் வாட்டியதில்லை, நாங்கள் ஏழுபேர் ஒரே ஊர்வாசிகள் ஒரே குடும்பமாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.
இருளின் வெளிச்சம்
வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.
விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.
இருளே
எனக்கு விருப்பம்.
விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.
Sunday, November 19, 2017
அகங்காரத்தின் விளைவுகள்...
அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக
நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை
போல நினைத்து செயல்படுபவன்..
அகங்காரம் இருப்பவனால்,பிறர்மீது நல்லஎண்ணம வைக்கமுடியாது.
, அகங்காரம் வந்து விட்டால் அங்கே நன்மை,தீமையை பகுத்தறியும் சக்திஇருக்காது .
அகங்காரம் இருக்குமிடத்தில் ஆவேசம் இருக்கும்.
அகங்காரம் இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.. இரக்கத்திற்கும்,கருணைக்கும் அங்கே வேலையில்லை..
. வாயில் எப்பொழுதும் பிறரை மதிக்காத வார்த்தைகளே வெளிவரும்..
இதுவே வெளி அகங்காரம்.

Saturday, November 18, 2017
கோபம் எதனால் வருகிறது ....
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள்.
ஒருவர் கூறினார்,
நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.
நான் ஒன்று சொன்னால்,
அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.
மற்றொருவர்,
யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.
*எதுவும் கடந்து போகும்..!*
நம்முடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்...!
எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன !
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
Friday, November 17, 2017
நாயகம் எங்கள் தாயகம் --வலம்புரிஜான்
6. வள்ளல் வளர்ந்தார் !
(பக்கம் - 69)
O
முகம்மது வளர வளர
அற்புதங்கள் தங்களுக்கு
அரைஞாண்கயிறு
கட்டிக்கொண்டன ...
அற்புதங்களா ?
இயற்கையே ஓர் அற்புதம்தான்.
ஆளில்லாக் காட்டிற்குள்
ஆயிரமாய் பூமலரும்.
ஆருமில்லை பார்ப்பதற்கு
அப்புறம் ஏன் பூக்கிறது?
காதில் முடி வளர்கிறது ...
காது இப்போது வளர்கிறதா ?
Wednesday, November 15, 2017
தீந்தமிழ்ப் பாடங்களைத் தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.
அந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.
உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார்.

Tuesday, November 14, 2017
கார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்தில் ) -எம்மெஸ் சலீம்
எம்மெஸ் சலீம் ...உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர்
நாகர்கோயிலில் தொழிலதிபராக இருந்தவர் இன்று உகாண்டாவில் பணிபுரிகிறார்.
திறமைமிக்கவர்.
பல துறைகளில் விற்பன்னர்.
பொது நலப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்.
சென்ற இடமெல்லாம் சிறப்புகளை பெற்று வரும் சலீமைத் தேடி புதிய சிறப்பொன்று வந்திருக்கிறது.
அது ...
உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு.
கார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்தில் ) -எம்மெஸ் சலீம்
தேடல் ....! (பாகம் - 5 )
வெற்றியின் தேடலில்
வெறிகொண்டு துரத்தினேன்
வேறொன்றிலும் இல்லை
தன்னம்பிக்கையில் கண்டேன்
அனுபவத்தின் தேடலில்
அகிலமெல்லாம் அலைந்தேன்
தன்செயலால் விளைந்த
பட்டறிவில் கண்டேன்
நிதர்சனத்தின் தேடலில்
நித்தமும் சஞ்சரித்தேன்
நிழல்களின் மாயையிலில்லை
என்னுள்ளில் கண்டேன்
வெறிகொண்டு துரத்தினேன்
வேறொன்றிலும் இல்லை
தன்னம்பிக்கையில் கண்டேன்
அனுபவத்தின் தேடலில்
அகிலமெல்லாம் அலைந்தேன்
தன்செயலால் விளைந்த
பட்டறிவில் கண்டேன்
நிதர்சனத்தின் தேடலில்
நித்தமும் சஞ்சரித்தேன்
நிழல்களின் மாயையிலில்லை
என்னுள்ளில் கண்டேன்
Monday, November 13, 2017
தமிழின் பக்தி இலக்கியங்களை ஆய்ந்தவர்கள்
தமிழின்
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்
புறநாநூறு போன்ற
போரிலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்
புறநாநூறு போன்ற
போரிலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்
கிழக்கிலிருந்து மேற்காக
கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக
உருண்டு உருண்டு
புரண்டு புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து
எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக
உருண்டு உருண்டு
புரண்டு புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து
எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்
நாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இருக்கும்
பூகம்பத்தை உணரவில்லை, பூகம்பத்தை உணர்ந்தவர்களின் வார்த்தைகளில் பூகம்பத்தை உணர்ந்தேன்.
உணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியிடமிருந்து அழைப்பு வந்தது, பேச்சில் பதட்டம்.எங்கே இருக்கிறாய்?. வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றேன்.
அடுத்து பேசுமுன் மனதுக்குள் பல எண்ணங்கள் மனதைக் கலவரப்படுத்தியது.
வீட்டில் இருக்கிறாயா?, வெளியில் இருக்கிறாயா?.
என்ன விஷயம் என்றுக் கேட்டேன்.
நில நடுக்கம் வந்து நாங்களெல்லாம் கட்டிடத்திலிருந்து வெளியேறி மைதானத்தில் நிற்கிறோம்.
நீ உனரவில்லையா?. இல்லையென்று சொல்லிவிட்டு மனதில் தோன்றியக் கலவர எண்ணங்கள் கட்டுக்குள் வந்தது.
ஆபத்து வந்தால் மட்டுமே அநேகரும் உணர்கிறோம் இறைவனின் மகிமையை.!
குவைத் அதிரக்கண்டேன் தோழா...!
அதிர்ந்தது நிலம் ஒரேயொருமுறை நேற்றிரவு...! ஒட்டுமொத்தமாக அத்தனை மனிதரும் விதி விடும் வழி தேடி வீதிக்கு வந்தார்கள் சப்தம் கூட்டியவர்களாக!
எனது... தனது... உனது... என்று தேடியதை எல்லாம் ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு ஒரே ஓட்டத்தில் அத்தனைக்கும் பொதுவாய் இருக்கின்ற வீடான வீதிக்கு வந்தவனர் அநேகரும்!
வந்தவர் முகத்தில் எல்லாம் ஒரே பீதி! கீரியின் பிடியில் இருந்து தப்பிய கோழியை போல ஒரே உதறல்! வந்த சிலரில் மேல் சட்டை கூட அணியாது விட்டு வந்தவரும் அடக்கம்! இயற்கையின் உபாதை விஞ்சியது சிலபேருக்கு வாயால் மொழிந்து கொண்டனரே தவிர தவறியும் தன் வசிப்பிடம் செல்ல மனமில்லை! காரணம் மரண பயம்!
Sunday, November 12, 2017
இஸ்லாத்தில் பிரிவே இல்லை
இஸ்லாத்தில் பிரிவே இல்லை ஆனால் முஸ்லீம்களின் இறை வணக்க செயல்முறைகளில் .கொள்கையில் சரித்திர நம்பிக்கையில் சில மாறுபாடுகள் தடுமாற்றங்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா?
அதன் காரணங்களை ஆய்வு செய்வது முக்கியமல்ல அதனை ஆய்வு செய்ய முற்பட இன்னும் பிரிவுகள் உண்டாகலாம் .
சரித்திர நிகழ்வுகளை பார்த்து கேட்டு சொன்னவர்கள் அதற்க்கு விளக்கம் கொடுத்தவர்கள் சிலவற்றிற்கு மாறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் நம்பிக்கை சிறப்பாகவும் மாற்றத்திற்கு இடமில்லாதவையாகவும் இருக்கின்றன .

திருமணத்தில் தீய பழக்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
Saturday, November 11, 2017
கல்வியும் செல்வமும்.
பொருளும் பொருள் சார்ந்தவை மட்டுமே வாழ்க்கையின் தேடல் என்றாகிப்போன பொருளை ஆதாரமாக கொண்டு செயல்படும் உலகில் கல்வியை கற்பிப்பதும் காசுக்குதான் என்பதில் ஆச்சர்யம் எனக்கு எழவில்லை.
உங்களுக்கும் அதேதான் எண்ணமென்றே எண்ணுகிறேன்.
மேலும், பொருளீட்டுவது மட்டுமே கல்வி கற்பதன் நோக்காமாக கருதப்படுவதே தற்கால மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

வாழ்க்கை.
வாழ்க்கை வாழ்க்கை என்று வையகத்தில் உழன்று, கிடைக்கப் பெற்றுள்ளவற்றில் எதையுமே அனுபவிக்காமல், நொடிக்கு நொடி என்ன நடக்குமோ? என்னவாகுமோவென ஒவ்வொரு கணமும் எண்ணியபடி மரணித்துக் கொண்டிருப்பதல்ல வாழ்க்கை!
மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்ந்து அனுமதிக்கப் பட்ட அனைத்தையும் துய்த்து மனமார வாழ்வதே வாழ்க்கை. ஒவ்வொருவரும் அவரவர்க்கு கொடுக்கப் பட்டுள்ளதில் நேர்மறை பகுதியை உணர்ந்து கண்டும் களித்தும் வாழவேண்டும்.
நம்மில் பலரும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிக்கு அலைகிறோம்.

Thursday, November 9, 2017
மகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்
தகவல் செந்தமிழன் கதிரேசன்
அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்
கென்டக்கி: அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை தந்தை கட்டி அரவணைத்து மன்னித்த சம்பவத்தைக் கண்டு நீதிமன்றமே நெகிழ்ந்துபோனது. கென்டக்கியில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு 22 வயதான சலாவுதீன் ஜிட்மவுட் எனும் பீட்ஸா விநியோகிக்கும் நபரிடம் கொள்ளையடித்த 3 பேர், அவரது கழுத்தை அறுத்துக் கொன்றனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Wednesday, November 8, 2017
இசை
---------
இசைமட்டும் இல்லையெனில்
என் இரண்டு காதுகளும்
வேண்டாத உறுப்புகள்தான்
வேறென்ன நான் சொல்வேன்..?
இருபுறமும் கேள்விக்குறியாய்
இடையூறாகத் தொங்கும்
இடைஞ்சல் சதைதான் !
இசை ஹலாலா? ஹராமா..?
எனக்குத் தெரியாது வாதிட
பாட்டில் வருவது மட்டுமா
பண் இசை?
ஊஹூம்…
இசைமட்டும் இல்லையெனில்
என் இரண்டு காதுகளும்
வேண்டாத உறுப்புகள்தான்
வேறென்ன நான் சொல்வேன்..?
இருபுறமும் கேள்விக்குறியாய்
இடையூறாகத் தொங்கும்
இடைஞ்சல் சதைதான் !
இசை ஹலாலா? ஹராமா..?
எனக்குத் தெரியாது வாதிட
பாட்டில் வருவது மட்டுமா
பண் இசை?
ஊஹூம்…
ஆழ்மனப் பிரளயம் ....!*
சூழலின் சர்வாதிகார
கூர்முனைகள் சீண்டிப்பார்க்க
எத்தனிக்கும் தருணங்களை
தாண்டியடித்து பேரோட்டமாய்
ஓடிக் களைத்திடாமல்
காததூரம் சென்றபின்னும்
கூர்முனைகள் சீண்டிப்பார்க்க
எத்தனிக்கும் தருணங்களை
தாண்டியடித்து பேரோட்டமாய்
ஓடிக் களைத்திடாமல்
காததூரம் சென்றபின்னும்
Tuesday, November 7, 2017
கருத்து வேறுபாடுகள் ஆபத்தானது கிடையாது ! ...
தக்கலை கவுஸ் முஹம்மத்
கருத்து வேறுபாடுகள் குறிப்பாக அடிப்படை(அகீதா) அல்லாத விஷயங்களில் அது ஆகுமானதே! மாறாக பிிரிவினையும் பகை உணர்வும் தான் ஆபத்தான விஷயங்கள்,. அல்லாஹ்வும் அவனது ரசூலும் எச்சரித்ததும் அவற்றைத்தான்!
எனவே கருத்து வேறுபாடுகள் பற்றிய புரிதலும், அது பற்றிய அறிவும் நம் அனைவருக்கும் இன்று இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமிய கல்வி நிலையங்களும் இவை குறித்து ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஜின்னாவின் மனைவி
பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் ஜின்னா. ஆனால்...
”கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
கண கணவென்று எரிந்து கொண்டிருந்த கணப்பில் கைகளைக் காண்பித்துச் சூடேற்றியவாறே கேள்வியை வீசினார் ஜின்னா. வீட்டுக்கு வெளியே மெல்ல மெல்லக் குளிர் டார்ஜிலிங் முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது. கொளுத்தும் பம்பாய் வெய்யிலிலிருந்து தப்பிக்க டார்ஜிலிங்கிலிருந்த நண்பர் தின்ஷா பங்களாவிற்கு வந்திருந்தார் ஜின்னா.
தின்ஷாவின் அப்பாதான் இந்தியாவில் முதன் முதலாக ஜவுளித் தொழிற்சாலையைத் துவங்கியவர். அவர் காலத்திலேயே மெல்ல மெல்ல வளர்ந்து ‘டெக்ஸ்டைல் கிங்’ ஆகிவிட்டது அந்தக் குடும்பம். பம்பாயின் பணக்கார பார்சிக் குடும்பங்களில் ஒன்று சர் தின்ஷாவின் குடும்பம். ஜின்னாவின் நண்பர்களில் அவரும் ஒருவர். அவரது டார்ஜிலிங் பங்களாவில் தங்க வந்திருந்தார் ஜின்னா. அப்போது தின்ஷாவும் குடும்பமும் அந்த பங்களாவில் தங்கியிருந்தது.

நம்பிக்கை
ஒரு ஊரில், மழை வேண்டி, இறைவனிடம் வேண்டுதல் நடத்தப்பட்டது.
2,3 நாட்களுக்கு முன்பே, அனைத்து ஊர்களுக்கும் அறிவிப்பும் செய்திருந்தார்கள்.
மொத்த ஊர் மக்களுமே அன்றைய தினம்,
திறந்த வெளியில் ஒன்றுகூடி இருந்த போது,
ஒரு சிறுவர் மட்டும்,
கையில் குடையுடன் வந்திருந்தார்.
அதற்குப் பெயர் தான், இறைவன் மீது கொண்ட:
'திடமான நம்பிக்கை' : FAITH

Monday, November 6, 2017
"தூக்கமே வர்ரதில்லைங்க"
"உறக்கத்தை எதிர்கொள்ளும் போது திருடன் கூட வெட்கப்படுகிறான்.
உறக்கம் சாதாரணக்கலை அல்ல.
அதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டும்.
உறக்கம் ஒரு கனத்த சுவரின் ஊடாகவும் தொற்றக்கூடியது."
நீட்ஷேயின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது ஆழ்ந்த சிந்தனை நம்மை ஆட்கொள்கிறது. சகல வசதிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிகைத்திருக்கும் இந்நவீன காலத்தில் பெரும்பாலான நடுத்தர வயதினரும் சில இளம் பிராயத்தினரும்கூட "தூக்கமே வர்ரதில்லைங்க" என்று பெரும் சோகத்துடனும் சிவந்த கண்களுடனும் அலைபாயும் பதட்டத்துடனும் ஒரு இரங்கல் நிகழ்வின் மலர்க்கொத்தை சமர்ப்பிப்பதுபோல தனது சுயத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.
பகலில் முழு விழிப்புணர்வுடன் செயலாற்றுபவர்களை தூக்கம் ஒரு பூ மலர்வதைப்போல இலகுவாக அரவணைத்துக் கொள்கிறது. பகலில் திக்கற்று அலைபாய்பவர்களையும் ஆற்றாமையுடனும் குற்றச்சாட்டுகளுடனும் சக மனிதர்களைக் கையாளத் தெரியாமல் தவிப்பவர்களையும் பொருந்தாத உறவுகளுடன் வாழ நேர்ந்துவிட்ட வாழ்க்கையை அளவுகடந்த சகிப்புத்தன்மையுடன் அனுசரித்துச் செல்பவர்களையும் இரவின் தனிமை ஒரு ஆட்கொல்லி மிருகத்தைப்போல வதைக்கிறது.

Sunday, November 5, 2017
மனோபலம்.
மனதில் எழும் எண்ணங்களே ஒரு மனிதன் தான் இவ்வுலக வாழ்வில் என்னவாக ஆகவேண்டுமென எண்ணுகிறானோ அதை அடைய வைக்கிறது.
இவ்வுலகில் படைப்பினங்கள் பவற்றையும் படைத்த படைத்தவன் மற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் செயல்பாடு மற்றும் வாழ்வியலின் போக்கு அவைகள் படைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை மாற்றமேதும் இல்லாமல் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே சிந்தித்து முடிவெடுக்கும் மனமெனும் மாய மந்திரத்தையும் வைத்துப் படைத்தான். மேலும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சிந்தித்து செயல்படுபவனாக இருக்கின்றனர். ஒவ்வொரு தனியொருவருக்கும் தனித்தன்மை
என்பது தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்வழியில் ஈடுபடுத்தி முடியாதது எதுவுமில்லை என்பதை முயற்சியால் எத்தனை தடைகள் வந்தாலும் துணிந்து நின்று தன்னம்பிக்கையுடன் செய்துமுடிப்பதே மனோபலம்.

Saturday, November 4, 2017
என்ன செய்வது ...?
வேலையை இழுத்துப்போட்டு செய்து பழக்கப் பட்டுவிட்டாலும் கூட ஆயிரம் வேலைகள் காத்திருந்தாலும் கூட சில சமயங்களில் 'இப்ப என்ன செய்ய' என்று தோன்றுவது தவிர்க்க முடியாத ஒரு தோன்றல்.
இது ஒரு தன்னிலை கழிவிரக்கம் என்பதில் ஐயமில்லை.
காரணம் என்ன?
செய்யும் தொழிலை வழிபாடாய் செய்திருக்க புண்ணியங்கள் வந்து குமியலாம்.
மாறிவரும் அரசியல் சமூக மாற்றங்கள் சாதாரண மனிதனின் சமசீர் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிட்ட நிலையில் எப்படியாவது பணம் சேர்க்கவேண்டும் என்பதே ஒற்றைக் குறிக்கோளாக இருக்க சிலர் இன்னும் 'இப்ப என்ன செய்ய' என்று எண்ணுகிறோம்.
என்ன செய்கிறோம் ?
வேண்டியதை விட்டுவிட்டு வற்புறுத்தல்களை செய்வது.
விருப்பத்தை விட்டுவிட்டு வருமானத்திற்காக செய்வது.
தன்னிலை மறந்து வறட்டு கவுரவத்திற்காக செய்வது.
எல்லாம் அவசர கதியில் ஓடும் கால மாற்ற காட்டாற்றில் சிக்கிய காய்ந்த மரக்கடை போல் இழுத்து செல்லப் படுகிறோம்.
கஷ்டப்பட்டு உழைத்துப்பெற்ற உணவைக்கூட மென்று உண்ண நேரம் இல்லாமல் அவசரகதியில் விழுங்கி புதிய நோய்கள் புதிதாக தோன்றுவதாக அலுத்துக்கொள்கிறோம்.
இன்னும் பல பாக்கியுண்டு.
என்னதான் செய்யலாம் ?

Friday, November 3, 2017
live Radio without earphone ல் கேட்க முடியும் Simply Amazing!!😀Proud of Our ISRO
நமது ISRO வின் ஒரு புதிய சாதனை நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும் அதில் பச்சை நிற புள்ளி இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் இடத்தில் தொட்டால் live Radio without earphone ல் கேட்க முடியும்
Simply Amazing!!😀Proud of Our ISRO
http://radio.garden/live/
Simply Amazing!!😀Proud of Our ISRO
http://radio.garden/live/
இதய ஆலயம்
==ரமீஸ் பிலாலி==
இதய ஆலயம்
இடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.
”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.
பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.
அதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
ஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.
ராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.
நபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:
”எந்தச் சிம்மாசனத்திலும்
அவர் அமர்ந்ததில்லை
அவர் அமர்ந்த இடமெல்ல்லாம்
சிம்மாசனம் ஆனது”
காலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன
ஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.
”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
”அனைத்தும் புனிதமாக்கப்பட்டுள்ளன.
வன விலங்குகள் இதனை அறியும்.
பூமியும் கடலும் மேகங்களும் கூட,
அன்பு நிறைந்ததொரு இதயம்
இதனை அறிவது போல்.
மிகவும் வினோதமாக இருக்கிறது
நம்மிடமிருந்து
இந்த அறிவைப் பறித்துக்கொண்டு
ஏற்கனவே புனிதமாய் இருப்பவற்றை
ஜெபித்துப் புனிதமாக்கும் ஆற்றலை
மதகுரு தனக்கெனப்
பறைசாற்றிக்கொள்வது
என்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,
நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?
என்று கேட்கிறார்.
ஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது? என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.
புற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
சூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.
துருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.
”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.
”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.
இறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,
”நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்?”
என்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.
’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,
”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி”
என்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
செல்வர்கள் சிவனுக்குக்
கோயில்கள் சமைப்பர்
ஏழை நான்
என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
ஊனுடம்பு ஆலயம்
தலையே
தங்க விதானம்
என்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.
தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.
அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.
இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.
கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.
வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?
அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.
அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.==ரமீஸ் பிலாலி==

அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.

எண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை!

ஏன் ஒரு சிலர் மனதில் நினைப்பதெல்லாம் அப்படியே நடக்கிறது? என்கிற காரணத்தை விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.
அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் ஒரு மனிதனுடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், வார்த்தைகள் மற்றும் பிராத்தனைகளே வடிவமைக்கிறது.
இந்த கருத்தை Masaru Emoto என்கிற ஜப்பானிய விஞ்ஞானி தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.
"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"
மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்

எனக்கு 58 வயதாகிறது. இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் இந்த உடலோடு இருக்கப் போகிறேன் என்று தெரியாது. நான் இந்த உலகை விட்டுப் பிரிந்து போவதற்குள் என்னால் முடிந்த சேவையை சகமனிதர்களுக்குச் செய்ய வேண்டுமென்ற ஆசை எனக்கு. அதனால்தான் எனக்குத் தெரிந்த தியான முறைகளையும், உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேடல் கொண்டவர்களுக்கான உதவிகளையும் நான் என்னால் முடிந்தவரை இவ்வளவு காலமாகச் செய்து வருகிறேன்.
இப்போது அதை உலக அளவில், அல்லது குறைந்த பட்சமாக இந்திய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிவிட்டது. அதன்காரணமாக, எனக்குத் தெரிந்த, ஆன்மிகப் பணியிலும் தேடலிலும் என்னோடு இருந்த சிலர், ஆன்மிகத்தில் ஏற்கனவே ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற இன்னும் சிலரின் உதவியோடு GSG தொடங்க இருக்கிறது.
இது நல்லவிதமாக வளர்வது உங்கள் கையில்தான் உள்ளது.
இதில் எந்தவிதமான பொருளாதார நோக்கமும் கிடையாது.
இது முழுக்க முழுக்க இலவசமானது.

Thursday, November 2, 2017
பிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி
சமஸ்
கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். "தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசுபவர் இல்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலில் இடம்பெற்றுள்ள அவருடைய நீண்ட பேட்டியை நான்கு நாட்களுக்குத் தொடராக நடுப் பக்கத்தில் கொண்டுவருகிறோம்.
திருக்கண்ணமங்கையிலிருந்து நாம் தொடங்கலாம்...

Tuesday, October 31, 2017
Monday, October 30, 2017
மனிதர்களின் காலமிது ....!*
அலங்கார சிலுவையை
ஆசையாய் சுமக்கும்
மனிதர்களின் காலமிது
அன்றாட அலுவல்களில்
காற்றாய் கரைந்துபோகும்
மனிதர்களின் காலமிது
அவ்வப்போதும் கூட
உறவுகளை நினைக்காத
மனிதர்களின் காலமிது
பணம் தின்று
உயிர் வாழும்
மனிதர்களின் காலமிது
ஆசையாய் சுமக்கும்
மனிதர்களின் காலமிது
அன்றாட அலுவல்களில்
காற்றாய் கரைந்துபோகும்
மனிதர்களின் காலமிது
அவ்வப்போதும் கூட
உறவுகளை நினைக்காத
மனிதர்களின் காலமிது
பணம் தின்று
உயிர் வாழும்
மனிதர்களின் காலமிது
நிலையற்ற வாழிவின் நிறைவு ....!*
காலையில் கண்விழித்தால்
மட்டுமே தெரியும்
உடலின் உயிர் பிடிப்பு
முழுப்பகலும் உழைத்தால்
மட்டுமே தெரியும்
முன்னேற்றத்தின் முதல் படி
சம்பாத்தியத்தில் சேமித்தால்
மட்டுமே தெரியும்
மட்டுமே தெரியும்
உடலின் உயிர் பிடிப்பு
முழுப்பகலும் உழைத்தால்
மட்டுமே தெரியும்
முன்னேற்றத்தின் முதல் படி
சம்பாத்தியத்தில் சேமித்தால்
மட்டுமே தெரியும்
Sunday, October 29, 2017
புகைத்தலும் செரிமான மண்டல நோய்களும்
Shahjahan R
இதைப்பற்றி விளக்குவதானால் உடலின் சில அங்கங்கள் குறித்து விளக்க வேண்டும். அதாவது, வாய், குரல்வளை, உணவுக்குழல், மூச்சுக்குழல், சிறுகுடல், பெருங்குடல், செரிமான அமைப்பு மற்றும் இதர உறுப்புகள் அடங்கிய உணவு மண்டலம் குறித்துப் பார்க்க வேண்டும். படத்தையும் அதில் உள்ள பாகங்களையும் பாருங்கள். (ஏதோவொரு காலத்தில் பள்ளியில் படித்தது நினைவு வரக்கூடும்.) இதைப் படிக்கும் மருத்துவர்கள் தமது கருத்துகளை வழங்கினால் மகிழ்வேன்.
நாம் உணவை உட்கொள்கிறோம். வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் எச்சிலைச் சுரக்கின்றன. அதனுடன் சேர்த்து உணவை மென்று விழுங்குகிறோம். உணவை உள்ளே தள்ளுகிறது நாக்கு. உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் விடாமல், உணவுக் குழலுக்குள் போக வேண்டும். (அதேபோல, மூச்சுக் குழாய்க்குள் போக வேண்டியது உணவுக் குழாய்க்குள் போகக்கூடாது.) இந்த வேலையை குரல்வளைக்கு (larynx) அருகே உள்ள குரல்வளை மூடி (epiglottis) கவனித்துக் கொள்கிறது. (குரல்வளைதான் நம் குரல் - ஒலி உருவாக்குவதற்கும் பொறுப்பு.) எலாஸ்டிக் போல செயல்படும் இந்த குரல்வளை மூடி, நாம் மூச்சு வாங்கும்போது நிமிர்ந்து, உணவுக் குழாயை மூடிவிட்டு, காற்றை மூச்சுக்குழாய்க்கு அனுப்புகிறது. உணவு உண்ணும்போது, வளைந்து மடங்கி மூச்சுக்குழாய்ப் பாதையை மூடிவிட்டு உணவுக்குழாய்க்கு அனுப்புகிறது.

நிலையற்ற மனிதன் ....!*
தான் என்றென்றும்
பெருமையின் சிகரத்தில் அமர்ந்து
களைப்பேதும் எய்திடாமல்
அங்ஙனமே இருக்கப்போவதாக
எண்ணுபவர்கள் மற்றுள்ளோரை
சகமனிதரென்றும் பாராமல்
சிறுமையின் ஆழத்தில் ஆழ்த்தி
மனவழுத்தத்தின் உச்சத்திலேற்றி
தலைமுறைகளும் படிப்பினையும்.
மனிதனுக்கு வேண்டிய வாழ்வியல்கள் வழிகள் அத்தனையும் அழகியமுறையில் மார்க்கத்தில் போதிக்கப் பட்டிருக்கிறது என்பது நாம் யாவரும் அறிந்ததே. அறிந்துகொண்ட போதனைகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எவ்வாறு நம் வாழ்வில் செயல்படுத்துகிறோம் என்பதை ஒரு உதாரணத்தைக்கொண்டு பார்க்கலாம்.
அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
இளவயதில் நமக்கு மார்க்க கல்வியை போதித்த நம் பெரியோர்கள் சொல்லித் தந்தவைகளில் ஒன்றாவது:
'அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு தலைமுறையினரை அறிந்திருக்க வேண்டும்'.

Wednesday, October 25, 2017
தோல்வியா ? அப்படின்னா என்னா ?
by Abu Haashima
எதிர்பாராத தோல்விகளால் அவன்
துவண்டு போனான்.
அழகாக நடந்த வியாபாரம் நஷ்டமடைந்தது. வாழ்க்கையின் உச்சத்திலிருந்தவன் பறவைகளின் எச்சத்தைபோல்
கீழே விழுந்தான்.
கீழே விழுந்தவனை யாரும் கைதூக்கி விடவில்லை.
அவர்களும் தங்கள் பங்குக்கு காலால் தேய்த்துக் கொண்டே சென்றார்கள்.
அவனை நம்பி கடன் கொடுத்தவர்கள் அவன் மானத்தை அவிழ்த்து அம்மணமாக்கினார்கள்.
கொலை செய்து விடுவதாய்
மிரட்டினார்கள்.
போலீசில் புகார் செய்தான்.
அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
தினம் தினம் அவமானப்பட்டு
அச்சப்பட்டு
அவனால் வாழ முடியவில்லை.

Tuesday, October 24, 2017
பேசாத படத்தின் குழந்தை பேசுகிறது ....
அப்துல் கபூர்
பாசத் தொட்டிலில்
எனை தாலாட்டி
உணர்வு மேலோங்க
உள்ளம் பூரிக்க
உணவு ஊட்டுகிற
அருமைத் தாயே
கண்கள் கலங்காதே ....
சுற்றுச் சூழலில்
மாசு படர்ந்த
காற்றை சுவாசிக்கிற
தூசு படர்ந்த
சோக வாழ்க்கையில்
எனை வாழ வைத்திட
காசு தேடி
போராடும் தாயே
கண்கள் கலங்காதே ....
பாசத் தொட்டிலில்
எனை தாலாட்டி
உணர்வு மேலோங்க
உள்ளம் பூரிக்க
உணவு ஊட்டுகிற
அருமைத் தாயே
கண்கள் கலங்காதே ....
சுற்றுச் சூழலில்
மாசு படர்ந்த
காற்றை சுவாசிக்கிற
தூசு படர்ந்த
சோக வாழ்க்கையில்
எனை வாழ வைத்திட
காசு தேடி
போராடும் தாயே
கண்கள் கலங்காதே ....
" பர்தாவை நீக்கு--உன்னை பார்க்கணும்.......!"
கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். அற்புதமான மனித நேயர்.
தமிழகத்தில் எங்கள் காலத்தில் வாழ்ந்திருந்த கவிஞர்களில் செல்வ வளம் கனிந்திருந்த கவிஞர்.
மயிலாடுதுறையில் காதீஜா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஹோல்சேல் கடை. சற்றுத் தள்ளியிருந்த கூறைநாடிலும் ஒரு கடையிருந்தது.
வளமிக்க கவிஞர். வளமான கவிஞர்.
இந்த மண்மீது இப்போது வாழும் வாய்பை இழந்திருப்பவர்.
அநேகமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இறைநாட்டப்படி அவனளவில் சென்றுவிட்டவர்.
கவிஞர் தா.காசிமுக்கும் எனக்கும் மச்சான் நாகூர் கவிஞர் ஜபருல்லாஹுக்கும் நெருங்கி நண்பர்.
தா.காசிம்தான் எனக்குக் கவிஞர் ஸலாமை அறிமுகம் செய்து வைத்தார்.
கவிஞர் ஸலாம் கவிதைகள் மிக வித்தியாசமான பாணிக்குரியன. பிறரிடமிருந்து வேறுபட்டு தனியே தன்னை முன்னிறுத்தும் வீரியம் நிலைத்தவை.
" இறைவனிடம் கையேந்துங்கள் --அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை.!
இது அவரது கவிதைப் பாணி.
இசைப் பாடல்கள்தாம் அவர் ஆக்கித் தந்த ஆக்கங்கள்.

Monday, October 23, 2017
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
அப்துல்கையூம்
மாற்றுமத நண்பரொருவர் என்னிடம் முன்பொருமுறை ஒரு கேள்வி கேட்டிருந்தார். ‘வட்டி என்பது நம் அன்றாட வாழ்க்கையில், பொருளாதார கொடுக்கல் - வாங்கலில் நிரந்தர அங்கமாக ஆகி விட்டதொன்று. அதை ஒரு பஞ்சமாபாதகம் போன்று ஏன் உங்கள் மதம் சித்தரித்துக் காட்ட வேண்டும்?’ என்றார்.
அதற்கு நான் சொன்ன பதில் “வட்டி என்பது மேலோட்டமாக பார்ப்பதற்கு மிகச்சாதாரண ஒரு விஷயமாக நமக்குத் தோன்றுகிறது. அநியாயமான முறையில் வாங்குகின்ற வட்டியானது சமூகத்தின் சீர்கேடு. சமுதாயத்தில் பயங்கர பின்விளைவுகளையும். ஏழை எளியவர்களின் வாழ்வை சீரழிக்கக்கூடியதாக இருக்கின்றது” என்றேன். எனது பதில் அவரை திருப்திபடுத்தியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்ததற்கு காரணங்களில் ஒன்று, பொருளாதார ரீதியில் யூதர்கள் அநியாய வட்டி வாங்கி நாட்டின் நிலைமையை சீர்குலைத்தார்கள் என்பது அவனது சித்தாந்தந்தில் ஒன்று

Subscribe to:
Posts (Atom)