Wednesday, April 30, 2014

யாசர் அரபாத் அவர்களின் கவிதைத் துளிகள் (படத்துடன்)

இப்போதும்
இல்லையெனில் – பின்
எப்போது…

எனையறியாமல்
முட்டி நிற்கும் கண்ணீர்
சுவனத்தைத்
தட்டி திறக்கும்
சாவியாகட்டும்!!



மனதை திற
மணம் கமழ…

தன் விழி
நோக்கிய மாத்திரத்தில்;
உள்ளத்தைப் படிக்கவேண்டுமென
விரும்புபவர் – மனைவியை
முதலில் படித்திருக்க வேண்டும்!!


உணர்வு உணரும்…

ஆறுதல் என்பதை
வார்த்தைகளால்
அலங்கரிக்க முடியாது!!



புரிந்தவருக்கு மட்டும்;
உங்களுக்கு விளங்காது…

மருத்துவரின்
கணிப்புகள்
கானல்நீராக வேண்டி;
இறந்தப்பின்னும்
எழுந்துவிடுவான் எனும்
நம்பிக்கையிலே தாய்!!

இடப் பெயர்ச்சி

FBயில் Pa Raghavan ஐயா பற்ற வைத்தார் விருத்தம் எழுத. பற்றிக் கொண்டு எரிகிறது இப்போ:)

இடப் பெயர்ச்சி

மனைவியுடன் படம்பிடிக்க மனதில் எண்ணி
மாலையிலே படக்கடைக்கு முனைந்து வந்தேன்
வினையதுவாய் இடப்பக்கம் அவளே நிற்க
விரைந்துவந்த கடைத்தோழர் வேண்டாம் என்றார்
துணையவளுக்(கு) 'இடங் கொடுக்க கூடா' தாமே
துடித்தெழுந்தாள் ஐதீகம் தாக்கக் கண்டு..
எனையிழுத்தே இடந்தள்ளி வலமே வந்து
எப்பவுமே மனைவியரே 'Right'டு என்றாள்

Tuesday, April 29, 2014

பாவம் உண்மையும் அவரோடு சேர்த்து புதைக்கப்பட்டு விட்டது!

காத்து,கருப்பு
பேய், பிசாசு இல்லை
பில்லியாவது, சூனியமாவது
எல்லாம் சுத்த ஹம்பக்-என்று
எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கு
எதிராகவே பேசிவந்த
மூலை வீட்டு தாத்தா
திடீரென்று ரத்தம் கக்கி
செத்துப்போனார் போனார்...

Tuesday, April 22, 2014

Yuva Krishna குறித்து இப்படியொரு ஸ்டேட்டஸ்

 Yuva Krishna குறித்து இப்படியொரு ஸ்டேட்டஸ் போட ஒரே காரணம், இன்று ஏப்ரல் 22 என்பதுதான்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரை அறிவேன். நெருக்கமாகவும். அதனாலேயே சில 'உண்மைகளை' போட்டு உடைக்க வேண்டியிருக்கிறது.

முகநூல் நிலைத்தகவல் வழியாக தன்னை ஆணாதிக்கவாதியாகவும், ஜொள்ளராகவும் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தும் யுவகிருஷ்ணா, உண்மையில் இதற்கு நேர் எதிரானவர்.

பெண்களை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்க மாட்டார். சொல்லப் போனால் அவர்களுடன் பேசவே தயங்குவார். முடிந்தவரை அதை தவிர்க்கத்தான் முயற்சிப்பார். முடியாதபட்சத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உரையாடலை வளர்க்க மாட்டார்.

போலவே 'ங்க' இல்லாமல் யாரையும் அழைத்ததில்லை.

Monday, April 21, 2014

கவிஞரு பேசுறாரு!

- யுவகிருஷ்ணா
திமுக பழைய பாதைக்கு திரும்புகிறது. திமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன. தொண்ணூறுகளுக்கு பிறகான ஊடக தகவல் தொடர்பு வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தெருமுனை கூட்டங்களை வெகுஜன இயக்கங்கள் குறைத்துக் கொண்டன. இன்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை தீவிரமாக கைக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்டு கட்சிகள்தான். தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு சன்டிவி திமுகவுக்கு சரித்திர வெற்றி பெறக்கூடிய வகையில் உதவியது. அதையடுத்து தெருமுனை கூட்டங்களையும், அடிக்கடி நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களையும் திமுக குறைத்துக்கொண்டது. இதனால் நேரடியாக அக்கட்சியினர் மக்களை சந்திக்கும் நிலைமை தேர்தலுக்கு தேர்தல் என்று மட்டுமே ஆனது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தோல்விக்குப் பிறகு மீண்டும் திமுகவினர் மக்களை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிர்நிலையை பல்வேறு காரணங்களால் எடுத்துவிட்ட நிலையில் நேரடிப் பிரச்சாரம் ஒன்றே தங்களை கரைசேர்க்கும் என்பதை கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

நான் நானாக இருக்க முடியாத எல்லா இடங்களையும் நான் வெறுக்கிறேன்.

தோழிகள் சபிதா சபி, தமிழ்நதி இருவரின் ’வீடு’பற்றிய பதிவை படித்ததும் எனக்கும் எழுத வேண்டுமெனத் தோன்றியது.

எத்தனையோ ஊர்களில், எத்தனையோ வீடுகளில் இதுவரை வாழ்ந்திருக்கிறேன். ஆனால் கடந்த கால சம்பவங்களை யோசிக்கும்போது எந்த சம்பவத்தையும் என்னால் வீட்டுடன் தொடர்புபடுத்த முடிந்ததே இல்லை. பால்யத்தின் முதல் வீட்டை நினைவுபடுத்தினால் வீட்டின் முன் நிற்கும் வளைந்த தென்னை மரம் தான் நினைவிற்கு வரும். அப்புறமான எல்லா வீடுகளையும் அருகில் வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளோடு தான் தொடர்புபடுத்த முடிகிறது.

எதிர்பார்க்கும் போது கிடைக்காத பாசம்

எதிர்பார்க்கும் போது
கிடைக்காத பாசம்
எப்பொழுதேனும்
கிடைத்திடுமா?

இருவேறு திசையில்
பயணிக்கும் நாமும்
எதிர் எதிர் காணும்
நாள் வருமா?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி


 உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரி மாதத்தில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

Sunday, April 20, 2014

அண்மையில் பார்த்த மிக அருமையான பாடல்களில் ஒன்று இது.

அண்மையில் பார்த்த மிக அருமையான பாடல்களில் ஒன்று இது. தற்கால இந்திய, இலங்கை அரசியல் நிலவரங்களை இப் பாடலை விடவும் அழகாக விளக்கிவிட முடியாதெனத் தோன்றுகிறது. சிரிப்பை வரவழைத்தபோதிலும், பாடலில் காட்டப்படுவதெல்லாம் நம் கண்முன்னே நடந்துகொண்டுதானே இருக்கின்றன. என்ன ஒன்று..பாடல் நான்கு நிமிடங்களில் முடிந்துவிடும். நாமெல்லாம் எந்த முடிவுமற்று காலம்காலமாக அரசியல்வாதிகளாலும், அரசியல்வாதிகளுக்காகவும் ஏமாந்து கொண்டேயிருப்போம்

M.RISHAN SHAREEF

இனவெறி கொண்டவனை எங்கள் நாட்டை ஆளும் தலைவனாக ஆக்கி விடாதே !

இறைவா

எங்களுக்கு நற்குணங்கள் கொண்டவரை
எங்கள் நாட்டை ஆளும் தலைவராகக் கொடு

நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய ஞானத்தை எங்களுக்கு கொடு
நல்ல தலைவராக வருபவர் மனித நேயம் கொண்டவராக இருக்கச் செய்

இனவெறி கொண்டவனை
பிரித்தாளும் எண்ணம் கொண்டவனை
பொய்யை பரப்பச் செய்பவனை
பெண்களுக்கு மோசம் செய்பவனை
மோசடி செய்பவனை
குழப்பம் செய்பவனை
தன் இனத்துக்கு
தன் குடும்பத்திற்கு மட்டும் ஆதாயம் தேடுபவனை
எங்களுக்கு தலைவனாக ஆக்கி விடாதே

வேடிக்கை பார்க்கவா அரசு?

எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையை சேர்க்க இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை கேட்கின்றன சில பள்ளிகள். என்னதான் வசதி இருந்தாலும், இந்த அளவுக்கு யார் கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். ’எத்தனை லட்சம் என்று நாங்கள் கேட்கவே மாட்டோம். இதோ பிடியுங்கள், பிளாங்க் செக். நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று அம்மா அப்பாக்கள் சொல்கிறார்களாம்.

பணக்காரத் திமிர் என்று நீங்கள் சுலபமாக சொல்லி விடுவீர்கள். உற்றுப் பார்த்தால் தெரியும், அவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல என்பது. பணம் புரட்டக் கூடிய நிலையில் இருப்பவர்கள். அநியாய வட்டிக்கு கடன் வாங்கியோ, கிரெடிட் கார்டை தேய்த்தோ, ஈசியாரில் அல்லது ஓயெம்மாரில் வாங்கிப் போட்ட ஃபிளாட்டை அடமானம் வைத்தோ தேவையான பணத்தை தயார் செய்யக் கூடியவர்கள். மிடில் கிளாஸ் மாதவ மாதவிகள்.

Friday, April 18, 2014

ஏங்குகிறேன்..........

ஏங்குகிறேன்..........

தொலைத்துவிட்ட வாய்ப்புகளை
நினைத்து

இழந்துவிட்ட இளைமையை
நினைத்து

அழிக்கப்ப்படும்் இயற்க்கை வளம்
நினைத்து

காணமல் போகும் பறவைகள் இனம்
நினைத்து

மறந்து போன மனிதநேயம்
நினைத்து

எல்லாம் அழிந்து போகின்றவைதான்
அதனதன் காலம் வரும்போது

ஏன் அழித்தொழிக்க வேண்டும?்

Abdul Kader Sangam

'யாருக்கு வோட்டு போடப் போகிறாய்'

'யாருக்கு வோட்டு போடப் போகிறாய்
'இந்த...' கட்சிக்கு வோட்டு போடு -அப்பா

நீங்க சொல்றதுக்கே போடுகிறேன் -நான்

பக்கத்தில் நின்ற நண்பனைப் பார்த்து அப்பா சொன்னார்
'தம்பி நீங்களும் இந்த கட்சிக்கு வோட்டு போடுங்க'

Thursday, April 17, 2014

நல்லது கெட்டது அனைத்தும் உன்னால் வந்தது!

அன்புடன் புகாரி
Abu Haashima Vaver
நிஷா மன்சூர்
ரஹீம் கஸாலி
Joseph Xavier Dasaian Tbb
Yasar Arafat
 M.Rishan Shareef
இவர்கள் மற்றும் பல நண்பர்கள் எழுத
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் இருக்க
அத்தனையும் நானும் படிக்க
படித்ததை நானும் படித்தபடியே எழுதாமல் 
படித்ததை நானும் ஒரு கோணத்தில் உருவாக்க முயல்கின்றேன்
எனது ஆக்கம் என் மனோநிலைக்கு தகுந்ததுபோல் சுரக்கிறது
அறிவைப் பெறுவதில் ஒரு ஆர்வம் வருகிறது
அறிவு ஒரு சக்தியை  தருகிறது

திட்டங்கள் சொன்னவர்கள் பற்றி ஆய்வு செய்தால் வாக்கு போட விருப்பம் வராது

படித்தததில் பிடித்ததை மனதில் நிறுத்தி வைக்க மனமில்லை
படித்ததில் பிடித்ததை மற்றவரிடம் சொல்லி வைக்க மனமுண்டு
படித்ததில் பிடித்தது அறச் செயல்களின் அறிவுரை
படித்ததில் பிடித்த அறவுரையை அடுத்தவரிடம் சொல்வதில் மனபாரம் குறைந்துவிடும்
படித்ததில் பிடித்த அறவுரையை நான் கடைப்பிடிப்பது கடினம்
படித்ததில் பிடித்த அறவுரையை அடுத்தவரிடம் சொல்லியதால் மனபாரம் குறைந்தது

நீ இருக்குமிட மெல்லாம் மகழ்வைத் தருகின்றது

உன் கூந்தலில்  சூட்டிய மல்லிகையின் மணம்
உன் வரவைக் காட்டுகிறது

உன் கண்களின் கனிவான பார்வை
உன் இறைபக்தியை காட்டுகிறது

உன் நெற்றியில் உள்ள குறி
உன் தொழுகையின் ஈடுபாட்டைக் காட்டுகிறது

உன் சோர்வு
உன் உடலின் நலமற்ற தன்மையை காட்டுகிறது

Tuesday, April 15, 2014

ஏதாவது செய்ய....

வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!

கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!

Sunday, April 13, 2014

மொழி வெவ்வேறு மதத்தவரை ஒன்றிணைக்கும் !

முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை நகரில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது யாரும் இல்லை. அந்த சமூகக் குடும்பங்களில் ஒருவர் திருமதி.இமாகுலேட். கணவனை இழந்த சுமார் 50 வயதான, பிள்ளைகள் இல்லாத அவர் தனக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வீடு மற்றும் செல்லப் பிராணிகளோடு வசித்து வந்தார்.

ஒருமுறை மின்விசிறி வாங்க திரு.இஸ்மாயில் என்ற 30 வயது இளைஞரின் எலக்ட்ரிகல் கடைக்கு வந்த அவர் பிற்பாடு அவன் என் பிள்ளை என்று பலரிடமும் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு அவனுக்குத் தாயாகவே ஆகிப்போனார். தினமும் மாலை அவம் கடையில்தான் இருப்பார்! என்ன காரணம்? மொழி!!

Saturday, April 12, 2014

தேர்தல் முடியும் வரை அரசியல் பேசக்கூடாது

தேர்தல் முடியும் வரை அரசியல் பேசக்கூடாது என்று வீட்டில் தடை உத்தரவு போட்டுவிட்டதால் காலையில் எழுந்து என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகள் படிப்பதற்காக வைத்திருந்த "மேஜிக் பாட்" இதழை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு கதை.

ஒரு ஒட்டகம் வழி தவறி காட்டுக்குள் வந்துவிட்டது. காட்டுக்குள் இருந்த நரி, அதை சிங்க ராஜாவிடம் கூட்டிச் சென்றது. சபையில் இருந்த அனைத்து விலங்குகளும் ஒட்டகத்தை அதிசயமாகப் பார்த்தன. ஒட்டகம் தன்னுடைய சோகமான ஃப்ளாஷ் பேக்கைச் சொன்னவுடன் சிங்கம் மனமிரங்கி "இனி நீ என் காட்டில் வாழலாம், உனக்கு தீங்கு வராமல் நான் காப்பேன்" என்று உறுதியளித்தது. ஒட்டகமும் நம்பிக்கையுடன் சந்தோஷமாக அங்கேயே தங்கி விட்டது.

Tuesday, April 8, 2014

முடிவுக்கு வந்தது அமெரிக்க அத்தியாயம்

ஒரு நாடு இன்னொரு நாட்டை விழுங்கி ஏப்பம் விடுவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் நடக்கிற விஷயமில்லை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்தது.

ஏன் நடக்காது? இதோ பார், என்று அண்டை நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சொந்தமாக்கி கொண்டிருக்கிறது ரஷ்யா.

அய்யோ அய்யோ என்று அலறுகின்றன ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகள். பிடித்த இடத்தை மரியாதையாக திரும்ப கொடுத்துவிட்டு போய்விடு என அமெரிக்கா எச்சரிக்கிறது. இதோடு நிறுத்திக் கொள்; இல்லையென்றால் விபரீதம் ஆகிவிடும் என்று ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுக்கின்றன. மனதில் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா.

ரஷ்யாவின் அண்டை நாடு உக்ரைன். முன்பு சோவியத் யூனியன் என்ற பெயரில் கம்யூனிச வல்லரசு கொடி பறந்த காலத்தில் அதன் ஓர் அங்கமாக இருந்தது. இன்றைய மொத்த ஐரோப்பாவிலும் பெரிய நாடு அதுதான். சோவியத் யூனியன் என்ற அமைப்பே பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது போல, உக்ரைனும் வெவ்வேறு இனங்களின் ஆட்சி மண்டலங்களை கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று க்ரீமியா. உக்ரைனின் தென்கோடி தீபகற்பம். அங்கு வசிக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் ரஷ்யர்கள்.

Monday, April 7, 2014

மின்புத்தகங்களை வெளியிடும் தமிழ் எழுத்தாளர்கள்!

சென்னை: தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் தமது படைப்புகளை மின்புத்தகங்களாக வெளியிடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.இவர்களின் தமிழ் படைப்புகளை மின்புத்தகமாக வெளியிடுவதற்கு சென்னையில் இருந்து இயங்கும் www.freetamilebooks.com என்ற இணையதளம் உதவி வருகிறது.

எழுத்தாளரின் படைப்புகளை பதிப்பு நிறுவனம் ஒன்று புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டால் மட்டுமே அவற்றுக்கு வாசகர்கள் கிடைப்பார்கள் என்றிருந்துவந்த நிலையை மாற்றுவதாக மின்பதிப்பு வந்துள்ளது.இந்த புதிய முறையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களே மின்புத்தகமாக மாற்றி தமது வலைப்பூக்களிலோ, மின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான இணையதளங்களிலோ விற்பனை செய்ய முடியும்.

Sunday, April 6, 2014

Convict - 2 "இது ரொம்ப ரிஸ்கான கேஸு "

"அதிகபட்சம் ஏழு வருஷம் குடுப்பாங்கடா. நாலஞ்சு வருஷத்துல விட வெச்சிடறேன். அண்ணனப் பத்தி உனக்குத் தெரியாதாடா? நாம இன்னைக்கு நேத்தா பழகுறோம். போன எலெக்ஷன் கேஸ்ல உன்னைய மூணே மாசத்துல வெளிய கொண்டு வரல?"

"இல்லண்ணே அதுலயே நாப்பதாயிரம் குடுக்கலன்னு கெழவி ரொம்பப் பொலம்பினா. ஏழு வருஷமெல்லாம் உள்ள போனா அவளத் தூக்கிப் போடக் கூட நாதியிருக்காதுண்ணே"

Convict - 1 "எத்தனை வயசாம்?"

"எத்தனை வயசாம்?"
"முப்பத்தி ஒண்ணுனு சொல்றாங்க. இந்த வயசுல ஸ்ட்ரோக் வருமா?"
"இன்சோம்னியா இருந்தா வரும். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உள்ள போட்ருப்பாங்க.அதான்."
"ஆமா அவன் தூங்கறதில்லன்னு வார்டன் சொன்னாரு. பி.பி ஏற்கனவே இர்ரெகுலராதான் இருந்துருக்கு"
"எத்தனை வருஷமாம்? ஆயுளா??"
"இல்ல தூக்கு"
"என்னடி சொல்ற. எந்தக் கேஸ் இது?"
"விழுப்புரம் பக்கத்துல ஒரு சின்னப் பொண்ணு, அந்தக் கேஸ் ஞாபகம் இருக்கா?"
"ஓ ஞாபகம் இருக்கு. அதுல தீர்ப்பு கொடுத்துட்டாங்களா?"

உடை சார்ந்த ஒரு உரையாடல்....!!

இனக் கவர்ச்சி என்பது பாலினங்களுக்கிடையிலான ஆதி மனோபாவமாக உள்ளது,எதிரெதிர் துருவங்கள்
ஒன்றையொன்று ஈர்க்கும். இந்நிலையில் பாலியல் சார்ந்த புரிதல்கள்,பெண்ணுடல் சார்ந்த சரியான பார்வை இவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது நிதர்சன உண்மை.

ஆனால் அதற்குப் பெரும் தடையாக அச்சு/காட்சி ஊடகங்களும்,திரைப்படங்களும் உள்ளன.திரைப்பட மோகத்தில் மூழ்கியிருக்கும் நம்மவர்கள் அந்தக் காட்சிகள் உருவாக்கும் போலித்தனமான மயக்கத்தில் கிறங்கி,அந்த கதாநாயகனின் பாவனைகளை அடியொற்றி நடக்க முயல்கையில்தான் பிறழ்வுகள் தொடர்கதையாகின்றன.

Friday, April 4, 2014

சென்னை பெருநகர சாலையொன்றில்...

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர பேருந்து நகரா பேருந்தாய் நின்ற நேரத்தில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அவளை பார்த்தேன். நான்தான் பார்த்தேனே தவிர அவள் என்னை பார்க்கவில்லை. குனிந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை புத்தகம் படிக்கலாம். அல்லது போனில் யாருக்காவது SMS அனுப்பலாம். அல்லது கேம் விளையாடலாம். அல்லது முகநூலில் யாருடனாவது சாட்டில் மொக்கை போடலாம். இதில் எதை செய்கிறாள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அப்போது என் நண்பனும் பார்த்தான், அவளையல்ல... நான் பார்த்ததை.
-இப்படி எழுதிக்கொண்டிருந்த என்னை விநோதமாய் பார்த்தாள் அவள்.

என்ன இது என்றாள்.

Thursday, April 3, 2014

''நான்'' பிறந்த கதை- 01

கவிஞர் அஸ்மின்
--------------------------------------

எனது வாழ்க்கை பயணத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்த நிகழ்ச்சி சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள்.ஊரறிய இருந்த என் திறமைகளை உலகறியச் செய்ய அடிகோலியது இந்த நிகழ்ச்சி.இன்று நான் தென்னிந்திய சினிமாவில் பாடல் எழுதுவதற்கு ஆரம்ப விதை தூவியது இந்த நிகழ்ச்சிதான்.

இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இப்போது முகாமையாளராக பணிபுரியும் சகோதரர் ஷியா இருந்தார்.பின்னாளில் வந்த என் ஒவ்வொரு வெற்றியிலும் அவருக்கும் அதிகமான பங்கு இருக்கிறது.அவரை இந்த நிமிடத்திலும் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.

2008ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்ச்சி ஒரு வருடகாலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியின்வாயிலாக பல புதிய கலைஞர்கள் இலங்கையில் உருவானார்கள்.போட்டியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் இருந்து 3 சுற்றுத் திறந்த தேர்வுகளின் பின் 16 பாடலாசிரியர்கள், 16 இசையமைப்பாளர்கள், 16 பாடகர்கள், 16 பாடகிகள் 16 ராகங்களுக்கு  ஏற்ப தெரிவு செய்யப்பட்டனர்.

Wednesday, April 2, 2014

நல்ல மட்டன் வாங்குவது எப்படி?!?!

மட்டன் வாங்குவது போர்த்தந்திரத்துக்கு ஒப்பானது என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த மாட்டேன். ஆனால் கொஞ்சம் சூதானமாச் செய்ய வேண்டிய விஷயம். ஊரில் அதிகாலையில் முதல் ஆளாகப் போய் மட்டன் வாங்கினால் அத எடுங்க , இத எடுங்க என்று அதிகாரம் செய்து வாங்கிக் கொள்ளலாம். தவிர ஊரில் பசும்புல்லில் வளர்ந்த ஆடுகள். எப்படியும் ருசியாகத்தான் இருக்கும். சென்னையில் பெரும்பாலும் காய்ந்த புல் மற்றும் பேப்பர் தின்னும் ஆடுகள். இங்கே அதிகாரம் செய்தால் நீங்கள் ஆடாக்கப்படுவீர்கள். எனவே கவனமாக வாங்க வேண்டும்.பெரும்பாலான கடைகள் திறப்பதே ஏழு மணிக்குத்தான். பதினோரு மணி வரை புதிய ஆடுகள் வெட்டப்பட்டு கொண்டே இருக்கும். நான் விரும்பி வாங்குவது தொடைப் பகுதிதான்.பின்னங்கால் என்றால் கூடுதல் பிரியம். கறியின் மென்மையும் ருசியும் தவிர்த்து , சத்து மிகுந்த நல்லி எலும்பும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. நான் எட்டரை மணி வாக்கில் செல்வேன்.

Tuesday, April 1, 2014

“தெரியாத ஊருக்குப் போதல்!”

ஒரு எஜமானரிடம், வேலைக்காரன் ஒருவன் இருந்தான். எதைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி கேட்காமல் அதைச் செய்ய மாட்டான். இல்லாத சந்தேகங்களை எழுப்புவான்.

ஒரு நபரைப் பார்த்துவிட்டு வா என்றால், “அவர் இல்லாவிட்டால் என்ன செய்வது? வெளியூர் சென்றிருந்தால் அவர் வருகிற வரை இருந்து பார்த்துவிட்டு வருவதா? எத்தனை நாள் தங்குவது?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குழப்புவான்.

“இவனோடு பெரும் தொல்லையாக இருக்கிறதே!" என்று கூட நினைப்பதுண்டு. பல வருடங்களாக வேலை செய்பவன். நேர்மையானவன் என்பதால் அவனைச் சகித்துக் கொண்டார்.

எப்படியும் அவனைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எஜமானர். அவன் கழுத்தில் "நான் ஒரு முட்டாள்" என்று தகட்டில் எழுதி மாட்டிவிட்டார்.

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யுவகிருஷ்ணா

யுவகிருஷ்ணா  திராவிட அரசியலின் பலன்களை அனுபவித்த ஒரு தலைமுறையை சேர்ந்தவர்.  எனவே திராவிட இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்கிறார் . யுவகிருஷ்ணாவின் அப்பா நா .இலட்சுமிபதி திமுகவில் ஒன்றியப் பிரதிநிதியாக இருந்தார். யுவகிருஷ்ணா சிறுவயதில் கழகக்கொடி, கழக செயல்வீரர்கள் மத்தியில் வளர்ந்தவர். அதனாலேயே திராவிடப்பாசம் அவருக்கு உண்டு.

யுவகிருஷ்ணாவின்  தந்தை பெயர் :நா .இலட்சுமிபதி
யுவகிருஷ்ணாவின் தாயார் பெயர் : இல.சுசிலா

யுவகிருஷ்ணா புதிய தலைமுறையில் துணை ஆசிரியரராக சிறப்பாக பலர் போற்ற பணி செய்கின்றார் (கடந்த சில மாதங்களாக அவரது  பணி தினகரனில் தொடர்கின்றது )
முகநூலில்Yuva Krishna அவரது ஸ்டேடஸ் மற்றும் அவரது கட்டுரைகளை பலரும்  மிகவும் விரும்பி லைக் செய்வதுடன்  அனைவரும் படிப்பதோடு அதனை மற்றவருக்கும் அதனை  அனுப்பி (ஷேர் செய்து ) மகிழ்கின்றனர் . அவரது கருத்துரைகளும் மிகவும் சிறப்பாக இருக்கும் .அவர் நகைசுவையோடு எழுதும் ஆற்றல் பெற்றவர் .உண்மைகளை துணிவோடு எழுதுவது அவரது சிறப்பான இயல்பு . அவர் ஆளப்பிறந்தவராதலால் ஆத்திரப்பட மாட்டார்! பழகுவதர்க்கு அருமையான நண்பராக எப்பொழுதும் இருப்பவர்.மற்றவர்களை உற்சாகப் படுத்தும் குணம் இவரின் சிறப்பு .  மற்றவர்களை உற்சாகப் படுத்தி எழுதி அவர்களுக்கும் உந்து சக்தியை தந்துள்ளார்.
பொருத்தமான கட்டுரைகளை பொருத்தமான நேரத்தில் கொடுப்பதில் யுவகிருஷ்ணா மிகவும்  திறமை மிக்கவர்.அவரது அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் சக்தி பெற்றவை.