Friday, April 18, 2014

'யாருக்கு வோட்டு போடப் போகிறாய்'

'யாருக்கு வோட்டு போடப் போகிறாய்
'இந்த...' கட்சிக்கு வோட்டு போடு -அப்பா

நீங்க சொல்றதுக்கே போடுகிறேன் -நான்

பக்கத்தில் நின்ற நண்பனைப் பார்த்து அப்பா சொன்னார்
'தம்பி நீங்களும் இந்த கட்சிக்கு வோட்டு போடுங்க'

அப்பா போனபின் நண்பன் கேட்டான்
'என்னடா ஆமாம் போடுறே '
நான் சொன்னேன் நண்பனிடம்
அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் .அது எனது வாழ்க்கையை பற்றியது
திருமணம் ஊர் அறிய நடப்பது .
வாழ்க்கை நான்றாகத்தான் இருக்கிறது .மனைவியும் நல்லவள் தான்

அப்பாவுக்கு வயதாகிவிட்டது .அவர் மன திருப்திக்கு ஆமாம் போட்டேன் .
தேர்தலில் வாக்குப் போடுவது ரகசியமாக நடப்பது .அதனால் நாம் நம் விருப்பத்திற்கு இணங்க வோட்டு போடப் போகின்றோம் .இது எனது வாழ்வுக்கு மட்டுமல்ல.நாம் வாழும் நாட்டின் முக்கியத்தை கருதி செயல் பட வேண்டும் .
வோட்டு போடுவதும் நாட்டின் நலம் கருதி செயல் பட வேண்டும் .
பி .ஜே .பி .கட்சிக்கு நிச்சயம் வோட்டு போட மாட்டோம் .அது அவர்களுக்கும் தெரியும். அவர்கள் நம்மிடம் கேட்க மாட்டார்கள் .அப்படி கேட்டால் மறைக்காமல் உங்களுக்கு வோட்டு போடும் எண்ணமில்லை என்று சொல்லி விடுவேன் .மற்றவங்க கேட்டா பதில் சொல்லாமல் தலையாட்டி பொம்மையாக மாறி விடுவேன்
அது உனக்கும் தான்.' என்றேன்

No comments: