Friday, April 4, 2014

சென்னை பெருநகர சாலையொன்றில்...

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர பேருந்து நகரா பேருந்தாய் நின்ற நேரத்தில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அவளை பார்த்தேன். நான்தான் பார்த்தேனே தவிர அவள் என்னை பார்க்கவில்லை. குனிந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை புத்தகம் படிக்கலாம். அல்லது போனில் யாருக்காவது SMS அனுப்பலாம். அல்லது கேம் விளையாடலாம். அல்லது முகநூலில் யாருடனாவது சாட்டில் மொக்கை போடலாம். இதில் எதை செய்கிறாள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அப்போது என் நண்பனும் பார்த்தான், அவளையல்ல... நான் பார்த்ததை.
-இப்படி எழுதிக்கொண்டிருந்த என்னை விநோதமாய் பார்த்தாள் அவள்.

என்ன இது என்றாள்.

சும்மா இலக்கியம் ட்ரை பண்ணலாம்னு என்றேன் இழுவையாய்

நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே. வழக்கம்போல மொக்கையா ட்ரை பண்ணு என்றாள் கிண்டலாய்.

ஏன் நானெல்லாம் இலக்கியவாதி ஆக கூடாதா என்றேன் கோபமாய்

இப்படி புரியறமாதிரி எழுதினா எந்தக்காலத்திலும் உன்னால் இலக்கியவாதியாக முடியாது என்றாள் தீர்க்கமாய்.

நான் இலக்கியவாதியாகவே முடியாதா என்றேன் ஏக்கமாய்.

ஏன் முடியாது யாருக்கும் புரியாமல் எழுது என்றவள் என்ன நினைத்தாளே தெரியவில்லை நடுநடுவே செக்ஸையும் சேர்த்து எழுது என்றாள் வெட்கமாய்.

இது எப்ப இலக்கியமாச்சு என்றேன் அதிர்ச்சியாய்

இதுதான் இப்ப இலக்கியம். இது மாதிரி எழுதறவன்தான் இப்ப இலக்கியவாதி என்றாள் ஆதங்கமாய்

இலக்கியவாதியா இலக்கியவாந்தியா என்றேன் கேள்வியாய்

ரெண்டும்தான் என்று சிரித்தாள் அவள். சிரித்தேன் நான். சிரித்தோம் நாங்கள்.

#இலக்கியத்துவம்.
                                                          ரஹீம் கஸாலி

No comments: